Sunday, January 31, 2010

குடும்பத் தட்டுப்பாடு !!


அன்னையோடு அறுசுவை
உணவு போம்!
அரும் தந்தையோடு,
அறிவு போம்!
முதியோர் இல்லத்தில்,
முடங்கிக் கிடக்கும்,
பாட்டன்,பாட்டியோடு,
பாசம் போம்!
அத்தை,மாமனோடு,
அன்பு போம்!
மாமன், மச்சானோடு,
மகிழ்ச்சி போம்!
அக்காள்,தங்கை...
உறவு போம்!
அண்ணன்,தம்பி...
உறவு போம்!
அனைத்தும் போம்...
போம்..போம்..
அற்புதமாய் நாம்
மட்டும் இங்கு
இருந்து கொண்டு...
முழங்குவோம்!
" நாம் இருவர்..
நமக்கு எதுக்கு ஒருவர்?"
என்று !!!!!!!!!

6 comments:

Rekha raghavan said...

அருமையா சொல்லிட்டீர் போம்!. மறக்க முடியாத கவிதை.

ரேகா ராகவன்.

வசந்தமுல்லை said...

super.... supero super......~!!!!!!!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அற்புதமாய் நாம்
மட்டும் இங்கு
இருந்து கொண்டு...
முழங்குவோம்!
" நாம் இருவர்..
நமக்கு எதுக்கு ஒருவர்?"
என்று !!!!!!!!

விஞ்ஞானம், உலகையே சுருக்கி நம் உள்ளங்கையில் தரும் வேளையில், "குடும்பத்தட்டுப்பாடு" ஆக்கிவிட்டால் இனி யாரே அனுபவிப்பார் இந்த உலகை. வேண்டாமய்யா இந்த விஷப்பரிட்சை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாருங்கள் ரேகாராகவன் அவர்களே..
ரொம்ப நாளாகி விட்டது தாங்கள் இங்கு வந்து!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வசந்தமுல்லையின் வருகைக்கு நன்றி! நீர் எங்கோ
போய் விட்டீர் போம்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உண்மை தான் கோபு ஸார். இப்படியே போனால்,
A MILLION DOLLAR IN SAHARA DESERT என்று ஆகி விடும்!