நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Saturday, January 16, 2010
சங்கீத ஞானமு...
இந்த வருட சங்கீத சம்மேளனத்தை நிறைவு செய்யும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது.( இந்த பொறுப்பை யாரும் எனக்கு கொடுக்காமல், எல்லாப் பிரமுகர்களும் 'பிசியாக' இருப்பதால்,நானே
பெருந்தன்மையாக அதை எடுத்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம்!)
* ஒரு பிரபல வித்வானுக்கு, பலத்த சிபாரிசின் பேரில், ஒரு அமெச்சூர் மிருதங்கம்
பக்க வாத்தியமாக அமைந்தது. பையன் எப்படி என்று அந்த சிபாரிசு செய்தவர் கேட்க, அதற்கு, அந்த பிரபல வித்வான் சொன்னார்: " புள்ளையாண்டான், என் பாட்டுக்கு எங்கே வாசிச்சான். அவம்பாட்டுக்கில்ல, வாசிச்சான்!"
* ஒரு சபாவில் 'ஜுகல்பந்தி' நடந்து கொண்டிருந்தது. ஒரு ரசிகர் தன் நண்பரைக் கேட்டார்.அதற்கு நண்பர் சொன்ன பதில்:
' நம்மூர் இட்லிக்கு அந்த குஜராத்தி டிஷ்
mismatch.'
* அந்த வித்வான் தன் சிஷ்யர்களுடன் சேர்ந்து சபாவில் பாடுவது வழக்கம். தம்பூரா போட்டுக் கொண்டிருந்த பையன், கொஞ்சம் வேகமாகப் பாடுவதைப் பார்த்து, அவர் கொஞ்சம் பின்னால் திரும்பி,'கொஞ்சம் நின்னு பாடேன்' என்று சொன்னார். பையன் பாவம். கச்சேரி முடியும் வரை,அடுத்த இரண்டு மணி நேரமும், தம்புராவைத் தூக்கிக் கொண்டு, நின்று கொண்டே பாடினான் !!
* ஆபீஸ் முடிந்து ஃப்ளாட்டுக்கு வந்த கணவனைப் பார்த்து, மனைவி சொன்னாள்.
"இன்னிக்கு, ரெண்டு news சொல்லப் போறேன். ஒன்று good news இன்னொன்று
bad news. எதை முன்னாடி சொல்ல ?"
அவன் : முதல்ல good news சொல்லு.
அப்புறம் bad news.
அவள் : நம்ம கீழ் வீட்டுப்பையன் வயலினை
வித்துட்டான்.
அவன் : அப்பாடா...ரொம்ப ரொம்ப
good news இது. அப்ப bad news ?
அவள் : நம்ம பக்கத்து வீட்டுக் காரர் அந்த
வயலினை வாங்கிட்டார் !
* அது ஒரு பொன் மாலைப் பொழுது.
தென்றல் அருமையாக வீச, ஒரு பூங்காவில்
ஒரு சங்கீத வித்வானிடம் 'எக்குதப்பாக'
மாட்டிக்கொண்டார் ஒரு ரசிகர்.
வித்வான்: ஸார்..ரொம்ப ரம்யமா இருக்கு..
அப்படியே 'கரகரப்ரியா' ஒரு
சங்கதி வாசிக்கட்டுமா ?
ரசிகர் : வேண்டாம் ஸார், அந்த ராகம்
எனக்குப் பிடிக்காது.
வித்வான் : அப்ப.. ஷண்முகப்ரியா?
ரசிகர் : வேண்டவே வேண்டாம் சார்.
அது எனக்கு ரொம்பவே பிடிச்ச
ராகம்!!
இத்துடன் இந்த வருட சங்கீத சம்மேளனம் இப்படியாகத்தானே முடிய...
மங்களம் .......சுப மங்களம் ............
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ரசிகர் : வேண்டாம் ஸார், அந்த ராகம்
எனக்குப் பிடிக்காது.
வித்வான் : அப்ப.. ஷண்முகப்ரியா?
ரசிகர் : வேண்டவே வேண்டாம் சார்.
அது எனக்கு ரொம்பவே பிடிச்ச
ராகம்!!///
சூப்பருங்கோ!!!
கடைசி துணுக்கு, உச்ச கட்ட நகைச்சுவை....... கலக்கல்!
சங்கீத ஜோக் ஜூகல்பந்தி கலக்கல்..
கலக்கி இருங்கீங்க நண்பா...சிரிச்சு வயறு வல்லிக்குது...வாழ்த்துக்கள்...
தேவன்மாயம்,சித்ரா,ரிஷபன்,கமலேஷ்
எல்லார்க்கும் ரொம்ப..ரொம்ப..நன்றி
Sangeetha Gnanam kuRaivaaka uLLa ennaiye thangkaLin isai vizhaa niRaivup pechchoo
mikavum makizhachcheythathu. Good Jokes.
கோபால கிருஷ்ணன சார் தங்கள் ஹாஸ்யத்திற்கு முன்னால் நான் ஜுஜுபி!!
Post a Comment