Wednesday, January 6, 2010

சொல்லாமலேயே.....


சாந்தா அலுப்புடன் 'ஸிஸ்டத்'தை 'ஷட் டவுன்' பண்ணிவிட்டு எழுந்தாள். இன்னும் இரண்டு நாட்கள் ஆபீஸ் வரவேண்டும். சூடாக காஃபி
குடித்தால் தேவலை.
கீழே தான் காண்டீன். ஆவி பறக்க வைத்த காஃபியை மிகவும் ருசித்துக்
குடித்தாள்.அந்த குளிருக்கு மிக இதமாக இருந்தது
அது!


குடித்து முடித்து மணி பார்த்தாள். இரவு
எட்டே முக்கால்.நல்ல வேளை, அவளை ரொம்பவும் காக்க விடாமல் பஸ் வந்தது.
கூட்டமில்லை. அவளுக்கு பிடித்த ஓர சீட் ரொம்ப ஈசியாகவே கிடைக்க,
உட்கார்ந்து கொண்டாள். மார்கழி காற்று ஜிலுஜிலுவென்று காதுகளை வருட, சுகமாக
அனுபவித்துக் கொண்டு வந்தாள், சாந்தா.

பஸ்ஸில் ஓர ஸீட்டில் அமர்ந்து வேடிக்கைப்
பார்த்துக் கொண்டே வந்தவள், அந்த காட்சியைப் பார்த்தவுடன் துணுக்குற்றாள்.

'அடடா...நாளைக்கு...நாளைக்குன்னு ஒவ்வொரு நாளையும் விட்டுட்டோமே
இன்னிக்கு எப்படியும் முடிச்சுடணும்..' ஒரு பரபரப்பு அவளைத் தொற்றிக்கொள்ள..
அவஸ்தையுடன் மணி பார்க்க ஆரம்பித்தாள்.
அவளின் அவசரம் புரியாமல் ஊர்ந்து கொண்டிருந்தது பஸ் !
அப்பாடா..ஒரு வழியாய் அவள் ஸ்டாப் வந்துவிட்டது. ஓட்டமும், நடையாய் ஃப்ளாட்டை
அடைந்தாள்.லிப்டில் மூன்றாவது மாடியும் வந்தாகி விட்டது. கதவைத் திறக்க வானிடி
பேக்கில் கை விட..மனசுக்குள்,...ஆமா இப்ப எதுக்கு பூட்டத்திறக்கணும்?...

'ஹாய் ஆண்ட்டி !'
எதிர்த்த ப்ளாக்கில் ரமா. B.TECH
முடித்து விட்டு வேலைக்குக் காத்துக்கொண்டு இருக்கிறாள். WIPRO வில் CAMPUS SELECTION
ஆகி கிட்டத் தட்ட ஒன்பது மாதங்கள் ஆகி விட்டது, பாவம் !
இங்கிருந்தே கூப்பிட்டாள்,சாந்தா.
"ரமா, ஒரு சின்ன ஹெல்ப்.கொஞ்சம் ஷாப்பிங் போணும்,வரியா?"
"ஓ..வரேனே.."
இந்த ராத்திரி குளிரில் கூப்பிடறாளே என்கிற
HESITATION துளிக்கூட இல்லை. ரொம்ப..ரொம்ப.. நல்ல பெண்.
ரமா ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய, பில்லியனில் அமர்ந்து கொண்டாள், சாந்தா.
"எங்க போறோம் ?"
"போர்வை வாங்கணும்"
அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு பெரிய கடையில் நல்ல கனமான கம்பளிப் போர்வை
ஆறு வாங்கினாள், சாந்தா.
"வீட்டுக்குத் தானே?" - இது ரமா.
" இல்ல ரமா..குக்கட்பள்ளி போணும்"
இருவரும் குக்கட்பள்ளி போனார்கள். அவள் ஆபீசிலிருந்து வந்தபோது அவள் மனசை
சங்கடப்படுத்திய இடத்தில் நிறுத்த சொன்னாள், சாந்தா. அங்கே...
சாலை ஓரமாய் ஆறு எளிய ஜீவன்கள் வெற்றுடம்புடன் தூங்கிக் கொண்டிருந்தார்கள்!
சாந்தாவும்,ரமாவும் அவர்கள் தூக்கத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் ஒவ்வொருவர் மேலும்
கம்பளிப்போர்வைளைப் போர்த்தினார்கள்.
" உஷ் ரமா, இத யார்ட்டயும் சொல்லக் கூடாது.."
நடு உதட்டில், ஆள் காட்டி விரலை வைத்துக்கொண்டு சாந்தா சொல்ல,
"ஓ"

சந்தோஷமாய் தலையை இப்படியும்,அப்படியுமாய் ஆட்டினாள், ரமா.
அவர்கள் யாரிடமும் சொல்லவில்லை.
சொல்லாமலேயே...
அடுத்த நாள் சாந்தா ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ட்ரான்ஸ்ப்ர்
ஆர்டர் வந்து விட்டது !
அதற்கு அடுத்த நாள் ரமாவிற்கு வேலைக்கான ஆர்டரும் வந்து விட்டது !!

இந்த கதை யூத்ஃபுல் விகடனில் வெளியானது...

9 comments:

Chitra said...

Nice story to convey good values.

இராகவன் நைஜிரியா said...

நல்ல கதை. மனசு நிறைவாக உணர்கின்றேன்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்று நினைக்கின்ற எண்ணம் மிக அரிது... அதை அழக்காகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ரா,ராகவன்....

தங்கள் வருகைக்கும்,விமர்சனத்துக்கும், நன்றி !
பத்திரிகைகளுக்கு எழுதி,மாசக் கணக்கில்
காத்திருப்பதை விட இது ரொம்பவும்
பிடித்திருக்கிறது.. நல்ல பல நண்பர்களை
கொடுத்திருக்கிறது.

அன்புடன் ஆர்.ஆர்.

பூங்குன்றன்.வே said...

நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்..கதையின் சூழலையும்,அதில் ஒரு அழகான நல்ல செய்தியையும் தந்து அசத்திவிட்டீர்கள்.

CS. Mohan Kumar said...

நல்ல கதை நண்பரே வாழ்த்துக்கள் யூத் விகடனில் வெளியானமைக்கும்

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள். மிகவும் அருமையான கதை அதை சொல்லிய விதமும் அருமை..

நேரம் கிடைக்கும்போது இதையும் பாருங்கள்

http://niroodai.blogspot.com

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பூங்குன்றன், மோகன் குமார், அன்புடன் மலிக்கா.. தங்கள் வருகைக்கும்..விமர்சனத்துக்கும் நன்றி.
"நீரோடை" பார்த்தேன். மனதை வருடி விட்டுச்
சென்றது!

வசந்தமுல்லை said...

FANTASTIC. EVERYBODY SHOULD HAVE THE HELPING TENDENCY TO HELP OTHERS.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கனமான கம்பளிப் போர்வை kkul manithaapimaanam mikka arumaiyaana oru kathai oLinthukonduLLathu