Saturday, June 26, 2010

ஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....

நீள்.....பதிவு ......... நெ.3


அரபிக் கடலோரம்........

இப்போது நாங்கள் சென்று கொண்டிருக்கும் இடம் பெயர் 'முருடேஷ்வர் கோவில்'. அங்கு பெரிய சிவன் சிலை. அந்த கோவிலுக்குச் செல்லும் போது வழியில்........
அரபிக்கடல் வெகு அருகில்!! விடுவோமா நாங்கள்! ஆளாளுக்கு 'க்ளிக்'க..இதோ.....








இதோ அந்த சிவன்! கோவிலுக்குச் செல்லும் உணர்வே இல்லை! ஏதோ கோல்டன் பீச் ...
எம்.ஜி.எம் போல! நீங்களும் தான் பாருங்களேன்!!












”எனக்கு ஒரு ஐடியா“
“சொல்லுங்க வனராஜ்”
“அல்லாரும் ஊர் போனதும், பயணக் கட்டுரை எழுதலாமா?”
”எஸ்கேப்”
எல்லாரும் எஸ்கேப்பினோம்

Wednesday, June 16, 2010

ஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....

நீள்.....பதிவு ......... நெ.2

வந்தாரய்யா....வனராஜ்

நண்பர் சுப்ரமணியம் சாதாரண ஆள் கிடையாது. அலாஸ்காவில் ஐந்தே நாட்களில் அறுபது ஃப்ரிட்ஜ் விற்கும் சாமர்த்யசாலியாக்கும். அவருக்கேத்த சிஷ்யப் பிள்ளை தான் இந்த கொடைக் கானல் வனராஜ்.
அவர் பாலக்காட்டிலிருந்து எங்களுடன் ஜாயின் ஆனார்.
சரி...விஷயத்திற்கு வருவோம்!!



இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது நாங்கள் உடுப்பியில் இருக்கும் க்ரூப் ஃபோட்டோ.....


உடுப்பிக் கோவிலைச் சுற்றி முடித்தவுடன் அடியேன் உதிர்த்த கமெண்ட்:
" ஆஹா...இந்த ஊரை விட்டு வர மனசே இல்ல...ரிடய்ர்டு ஆனா, இங்கேயே செட்டில் ஆயிட மாட்டோமோன்னு தோணுது?"
" அப்பா ஊரே தெய்வீகமாய் இருக்கு இல்லே?"
" அட ..நீ வேற..அந்த ஹோட்டல்ல டிபனுக்குப் போட்ட குருமாவை நினைச்சாலே ..அடாடா....அதைச் சொல்றேன்...





கொல்லூர் ஹில்ஸ் ஜில்லுனு இருக்கு. நகரத்தில் தூசியில் புழங்கும் எங்களுக்கு இயற்கை அளித்த ஏ.சி. அது!




மூகாம்பிகை அம்மனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு!
எனக்கு என்னவோ இரண்டு விஷயங்கள் ஞாபகம் வந்தது.

1. முகத்தில் வித்யாதேவி சரஸ்வதி அம்சம்! ரவிவர்மாவின் ஓவியம் ஞாபகம் வந்தது.
2. மூக பஞ்சதி எழுதிய மூக கவி. இவர் கவி காளி தாசனின் அடுத்த ஜன்மம். மூகன் என்றால் ஊமை என்று அர்த்தம்!

என் மனதினில் தோன்றிய இந்த இரண்டு விஷயங்களுக்கும் கொல்லூர் மூகாம்பிகைக்கும் தொடர்பு இருந்தால் சொல்லுங்களேன்!!

சரி..அப்புறம் பார்ப்போமா!!!

Saturday, June 12, 2010

ஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....

நீ............ள்........பதிவு நெ.1


வீடு நீங்கும் படலம்

ரொம்ப நாளாகி விட்டது, எல்லாருமாய் டூர் போய் என்று நினைத்துக் கொண்டோம். பேசிக் கொண்டிருக்கும் போதே, என் பெண் யாருக்கோ ஃபோன் பண்ணினாள். அங்கிருந்து இரண்டு தடவை ஃபோன் வந்தது!
'என்னப்பா...போலாமா'
நான் பதில் சொல்வதற்குள், ஒரு ஃபோன் வர,
இப்படித் தான் 'க்ளிக்'காகியது, எங்கள் இனிய பயணம்.
என் குடும்பம்(நால்வர்), நண்பர் சுப்ரமணியம் குடும்பம் (மூவர்)(பேசிக்கொண்டே வந்ததில் இவர் எனக்கு உறவுக்காரர் என்பது பிறகு தெரிந்தது)
நண்பர் மோஹன் குடும்பம் (நால்வர்) என்று மொத்தம் 11 பேர் கிளம்புவதாகப் ப்ளான்!
அந்த 11 பேரும் இதோ உங்கள் முன்!







நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த இனிய ஞாயிறும் வந்தது. எனக்குத் தான் கடைசி வரை ஊர் வேலை! டூர் போகும் மூடே வராமல், மசமசவென்று இருந்தேன்! ஒருவாறு, குளித்து முடித்து, துணிகளை 'அயர்ன்' செய்து கொண்டிருக்கும் போது, அம்மா 'எல்லாரும் பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு' என்று ஒரு காட்டுக்கூச்சல்! அரக்க,பரக்க ஏதோ வயிற்றிலும், வாயிலும் அடைத்துக் கொண்டு அடுத்த ஐந்தாம் நிமிடம் நாங்களும் ரெடியாகி, வாசலில் தயாராய் நின்றிருந்த ஆட்டோவில் பிரித்விராஜ் சௌஹான் ராணி ஸம்யுக்தையை தூக்கிக் கொள்வது போல் ஆளுக்கொரு லக்கேஜைத் தூக்கிக் கொண்டு பறந்தோம்!
அடுத்த அரை மணியில் பஸ் ஸ்டாப்!
எங்கள் பஸ் ஸ்டாப்பில் நாங்கள் வெயிட் பண்ண, மறுபடியும் ஒரு ஃபோன்!
' நீல நிற அரசுப் பேருந்து, இதோ உங்கள் முன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, இரண்டு ஜோடி கரங்கள் நட்புடன் கை ஆட்ட, பஸ்சினுள் ஏறினோம்!
எனக்குத் தான் உள்ளூர ஒரு குடைச்சல்! அவசரத்தில் ஏதாவது மறந்து வைத்து விட்டு வந்து விட்டோமோ என்று!
முழுதாய் நான்கு மணி நேரத்தை சாப்பிட்டுவிட்டு, ஈரோடு வந்தது. ஜங்ஷன் ஸ்டாப்பில் எல்லாரும் இறங்க, நான் ரொம்பவும் ஜாக்கிரதையாய் நடந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, இன்னொருத்தர் சூட்கஸையும் எடுக்க..அவர் அலற ..செம காமெடி!
இந்த சம்பவத்தினால் எதையோ மறந்து வைத்து விட்டு கிளம்பினோமோ என்ற குடைச்சல் போயிந்தி!
அப்பாடா..ஒரு வழியாய் ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சு!!
அது சரி, நீங்க சொல்ல வந்த விஷயத்திற்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? அடுத்த பதிவில் சொல்கிறேனே..

Saturday, June 5, 2010

எங்கே எம் குழந்தைகள்????????


புத்தகப் பை சுமந்து,
பாரம் தாங்காமல்,
தலை கவித்து,
கண்களில் வெறுமை
பொங்க..
ஊக்க ஊசி ஏற்றி,
ரேஸில்,
ஓடப் போகும்,
குதிரைக் குட்டிகளைத்
தான்,
வழி நெடுங்கும்,
காண்கிறேன்..
கன்றுகுட்டிப்
போல்,
துள்ளி குதித்து,
குழந்தைமையுடன்,
ஓடி விளையாடும்
எம் குழந்தைகள்,
முப்பது, முப்பத்தைந்து..
வருடங்களாக,
எங்கு போய்,
ஒளிந்து கொண்டன?
அன்று,
குழந்தைகள் புஸ்தகங்களைக்
கிழித்துக் கொண்டிருந்தன...
இன்றோ,
புஸ்தகங்கள்
எம் குழந்தைகளைக்
கிழித்துக் கொண்டிருக்கின்றன !!!!