
ஏழ்மையை விரட்ட,
நாம் வகுத்த திட்டங்கள்,
போகும் இடம்....
சில பணக்காரர்களை,
மிகப்
பெரிய பணக்காரர்கள்
ஆக்குகிறது..
ஆக்கட்டும், பரவாயில்லை..
ஆனால்....
குடிசையில் வாழும்..
குப்பனின் தாத்தாவுக்குக்
கூழில்லை...
குப்பனின் அப்பனுக்கும்,
கூழில்லை...
குப்பனுக்கும்
கூழில்லை...
குப்பனின் பேரனுக்கும்
கூழில்லா நிலையை
அல்லவா
உருவாக்கி விட்டோம்!
இந்த லட்சணத்தில்
2020ம் ஆண்டு .....
பசியில்லா வருடமாம்...
யாருக்கு ?
6 comments:
திட்டம் போட்டு திருடுகிற கூட்டம் திருடிகிட்டே இருக்க்து... இந்த வரிகள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியலைங்க..
திட்டம் போடுவதெல்லாம் சரியாகத்தான் போடுகின்றனர். அதை அமலாக்கம் செய்யும் போது பல ஓட்டைகள். அந்த ஓட்டைகளினால், திட்டம் பாழாப்போகுது..
எந்த திட்டமும் நேர்மையை மூலதனமா வச்சா மக்களுக்குத்தான் போய்ச் சேரும்.. கமிஷனை அடிப்படையா வச்சா பாக்கட்டுக்குத்தான் போய்ச் சேரும்.. இப்ப நடக்கறது..?!
ராகவனுக்கும், ரிஷபனுக்கும்...
தங்கள் வருகைக்கும்,விமர்சனத்துக்கும்
நன்றி!
படமும் கவிதையும் மனதை நெருடத்தான் செய்கிறது. குப்பன் குடும்பத்துக்கு கூழாவது விரைவில் கிடைக்கட்டும்.
2020ம் ஆண்டு .....
பசியில்லா வருடமாம்...
யாருக்கு ? //
நெத்தியடி....!:(
At the time of 2020, they may postpone the plan (பசியில்லா வருடம்...)to 2220. Don't worry.
Any one of the KUPPAN'S vaarisu will get KOOZH
in the year 2220.
Post a Comment