Friday, January 8, 2010

முல்லைக்குத் தேர்!


பேகன்,என்ற மன்னன். மழை வருவதை உணர்த்தும் விதமாய்
மயில் ஒன்று தோகை விரித்தாட, அதை அவன் சரியாக புரிந்து கொள்ளாமல், அதன் மீது போர்வை ஒன்றைப் போர்த்தி, அழியாப் புகழ் அடைந்தான் என்பது வரலாறு!
எத்தனையோ ஏழைப் பாழைகள் அவன் நாட்டில் இல்லையா ? அதை விட்டுவிட்டு, மயிலுக்கு மட்டும் ஏன் போர்வை போர்த்தினான். ஆய்ந்துப் பார்த்தால் ஒரு விஷயம் நமக்கு புலப்படும்.
நாம் மட்டுமல்ல..நம் முன்னோர்களும் ஆடம்பரத்துக்கும், ஆர்ப்பாட்டத்துக்கும் தான்
துணப் போயிருக்கிறார்கள். முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அது தான் வழிவழியாக
வந்திருக்கிறது. உழைப்புக்கு மதிப்பு கொடுப்பவனாய் இருந்தால் அவன் வயலில் நாள்
முழுதும் உழும் மாட்டுக்கல்லவா போர்வை போர்த்த வேண்டும்? மயிலினால்
மனிதனுக்கு என்ன பிரயோஜனம்? ஒரு பிரயோஜனமுமில்லை ! மாறாக அது வயலை
பாழ் படுத்தும். நாசம் செய்யும் மயிலுக்கு போர்வை..அங்கீகாரம். பாடுபட்டு உழைக்கும்
மாடுகளுக்கு ..!!!
பாவம், எளிமையும், உழைப்பும் . அதுகளை சீண்டுவாரில்லை !!
அது போல இன்னொன்று!
பாரி என்ற குறு நில மன்னன் ஒரு நாள் வேட்டைக்குச் செல்லும்போது, எங்கோ ஒரு குழியில் அவன் தேர் சிக்கிக்கொள்ள, அதை அவன் அதை அப்படியே விட்டுவிட்டுப் போக..( அவன் குறு நில மன்னன் அல்லவா, எடுக்க முடியவில்லை.ஈகோ தடுத்தது. அதனால் தேரை விட்டுவிட்டுப்போய்விட்டான்!நாம் use and throw பால்பாயிண்ட் பேனாக்களை விட்டுவிட்டுப் போவோமே, அது போலத் தான்!..) குழி பக்கத்தில் படர கொம்பு இல்லாமல் தவித்த முல்லைக் கொடி ஒன்று 'கண்டேன்.. கண்டேன்' என்று அந்த தேரின் மீது படர ஆரம்பிக்க..அதை எவனோ போக்கத்தவன் பொழுது போகாமல் பார்த்து விட்டுப் போயிருக்கலாம். அப்படி செய்யவில்லை. வந்தவன் கொஞ்சம் 'மார்க்கெட்டிங்க்' தெரிந்தவன் போல இருக்கிறது. அந்த நிகழ்வினை சற்று சொற்களால் சிலம்பம் விளையாடி, அழகுத் தமிழில் அரசன் முன் அதை பாடி தன் பையை நிரப்பிக் கொண்டான். விளைவு.. 'முல்லைக்குத் தேர் ஈந்த பாரி' என்று
அவன் மேல் முத்திரை குத்தி அவனை கடைஏழு வள்ளல்களில் ஒருவனாக ஆக்கி
விட்டார்கள்.
நம்ம ஊரில் எவனோ ஒருவன் வயிற்று வலி தாங்காமல் தற்கொலை செய்து
கொண்டிருப்பான்.. காதல் தோல்வியால் தற்கொலை என்று கவர்ச்சிகரமான தலைப்பில்
நாம் பேப்பரில் NEWS போடுவதில்லையா.. அது போலத்தான் இதுவும்!
ஆக, நிகழ்வு ஒன்று.. ஆனால் வரலாறோ அதை வேறு விதமாய் ஃபோகஸ் பண்ணித்
தொலைக்கிறது!!!

7 comments:

Chitra said...

வரலாறுக்கு புது அர்த்தம் தந்த ஸ்ரீலஸ்ரீ ஆரண்ய நிவாச மாமன்னர், இன்று முதல் அ"ன"ர்த்த நிவாச மாமன்னர் ஆகிறார்.

வசந்தமுல்லை said...

oru viththyasamana ramoorthiyai parkka mudiyuthu.

ரிஷபன் said...

நகைச்சுவை கவசம் பூண்டு வந்ததால் விமர்சன வாள் வீச முடியவில்லை.. ‘அனர்த்த நிவாச மாமன்னர்’ மீது! (நன்றி: சித்ரா)
தேரும், போர்வையும் இத்துப் போனதை பாரியும், பேகனும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் (அந்த காலத்திலும் அரசு ஊழியர்கள் அப்படித்தான் போலும்! - நல்லவர்கள் நீங்கலாக) இப்படி டெக்னிக்காய் டிஸ்போஸ் பண்ணிட்டாங்கன்னு நினைக்கறேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

கடையெழு வள்ளல்கள் மீது தங்களுக்கு ஏன் நண்பரே இவ்வளவு கோபம்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அனைவரின் வருகைக்கும் நன்றி. சித்ரா
மேடம் எனக்கு பட்டம் கொடுத்தது
கிண்டலா...கோபமா தெரியவில்லை..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த
நண்பருக்கு சில வரிகள்...
நன்றி முனைவரே நன்றி.. தங்கள் வருகைக்கும்...
பதிவிற்கும்...
தங்களை இங்கு மீண்டும் வரவழைக்க வேறு
எந்த வழியும் தெரியவில்லை எனக்கு !

வை.கோபாலகிருஷ்ணன் said...

வந்தவன் கொஞ்சம் 'மார்க்கெட்டிங்க்' தெரிந்தவன் போல இருக்கிறது.
UnmaikaL ivvaaRu irukka nam paLLIkaLil History paataththil, nammai moolaichchalavai seythuvittaarkaLe, Aiyaa.

சொல்லச் சொல்ல said...

வெட்டிபேச்சு என்ற தலைப்பில் ஏதாவது ஜாலியாகப் படிக்கலாம் என நுழைந்தால், நகைச்சுவையுடனும் நல்ல எழுத்து வர்ணனையுடனும் அழ்ந்த கருத்துக்களை மனதில் பதிய வச்சிடீங்க.