Friday, January 29, 2010

சில பழமொழிகளும்...சில புது மொழிகளும்...


" சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்", "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" போன்ற
பழமொழிகளின் உள் அர்த்தம் தெரியும். ஆனால் "ஊரான் பிள்ளயை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழிக்கு நண்பர் ஒரு புது வித அர்த்தம் சொன்னார்.அதாவது ஊரான் பிள்ளை என்பது மனைவியாம். வேறு ஒருவரின் பிள்ளை தானே அவர்! அவரை மகிழ்ச்சியாய் வைத்திருந்தால், அவர் வயிற்றில் வரும் தன் பிள்ளை நன்றாக வளருமாம் ! வாஸ்தவம் தானே !!
கூடவே அவர் கேள்வி ஒன்றையும் எழுப்பினார். " சிவ பூஜையில் கரடி நுழைந்தாற்போல" என்ற பழமொழிக்கு அர்த்தம் கேட்டார். சிவ பூஜையில் கரடி தான் நுழையணுமா..சிங்கம், புலி, நாய்,நரி எல்லாம் நுழையக்கூடாதா...சரி.. விஷ்ணு பூஜையில் ஏன் அந்த கரடி நுழையக்கூடாது என்று ஏகப்பட்ட கேள்விகள்... விட்டால் போதும் என்று ஓடி வந்து விட்டேன். யாராவது அந்த பழமொழிக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லி என்னைக் காப்பாற்றுங்களேன்...!
இப்போது ..புது மொழியைப் பார்ப்போம்! புது மொழி என்று ஒன்றும் இல்லை. நாம் கேள்விப் படாத வார்த்தையெல்லாம் புது மொழிதான்!
தஞ்சாவூர் பக்கத்தில் மோடுமுட்டி என்று சொல்வார்கள். மோடு முட்டி என்றால் என்ன என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. ஆனால் அது ஒருவனை உயர்த்திச் சொல்லும் வார்த்தை இல்லை
என்ற அளவுக்குத் தெரியும். " அவன் ஒரு சரியான மோடுமுட்டி" என்றால் முட்டாளா.. ஃப்ராடா...
பொறம்போக்கா...ஊஹும்...ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அவ்வளவு நல்லவன் அல்ல... நம்பிக்கையானவன் அல்ல என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
அது போல இன்னொரு வார்த்தை. ஆபீசில் சீனிவாசன் என்பவர் வழுவட்டை என்று அடிக்கடி
சொல்வார். முதலில் நான் கொழக்கட்டை என்று தான் நினைத்தேன். அப்படி சொல்லப் படும் நபர் ரொம்ப ஸ்வீட்டாக பேசுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது அது வழுவட்டை என்று. கொழுக்கட்டை தெரியும்.. வழுவட்டை என்றால் என்ன என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டேன். தலைவலி வந்தது தான் மிச்சம்!
சில மாவட்டங்களில் டம்ளர் என்று சொல்வார்கள். அதையே வேறு சிலர் லோட்டா என்று சொல்வார்கள். அது என்ன லோட்டாவோ..எந்த மொழியில் இருந்து வந்தது என்று தெரியவில்லை. சில பேர் மில்லில் போய் மாவறைத்துக் கொண்டு வந்தேன் என்று சொன்னால்,
வேறு சிலரோ மாவு திரித்துக் கொண்டு வந்தேன் என்று சொல்வார்கள்.
தென் மாவட்டங்களில் "ஆக்கங்கெட்ட கூவே" என்று யாரையாவது யாராவது திட்டிக் கொண்டிருப்பார்கள். இந்த மோடுமுட்டி,வழுவட்டை இவற்றோடு ஒப்பிடும்போது சற்று harsh
ஆன வார்த்தை அது! ஆனால் நான்-வெஜ் வார்த்தையில்லை!!
தருமமிகு சென்னையில் அடிக்கடி கசுமாலம் என்கிற வார்த்தை அநாயாசமாக அடிபடும். அது கஸ்மலம் என்கிற சமஸ்க்ருத வார்த்தையிலிருந்து மருவி வந்தது. "கஸ்மலம் பின்ன தந்தம்" என்று சொல்வார்கள். கஸ்மலம் என்றால் அரதப்பழசு என்று அர்த்தம். அதை திரித்து கஸ்மாலமாக்கி நம்மூர் ஜாம்பஜார் ஜக்குகளும்...சல்பேட்டா ராணிகளும்.. அட எழவே.. இது என்னடா புது வார்த்தை சல்பேட்டா...????
தலையை சுத்துது ...ஆள விடுங்க சாமி!!!

----- 0 ------

22 comments:

Paleo God said...

கஸ்மலம் என்றால் அரதப்பழசு. இப்ப யாரும் அத யூஸ் பண்றதில்லைங்க..:))

அட இதெல்லாம் விடுங்க..’போடா வெண்ண’ ன்னு சொன்னாலே வெட்ட வருவாங்க..:)) நம்ம உடம்புலேயெ மூன்று,நான்கு விஷயத்த கெட்ட வார்த்தை ஆக்கியாச்சு, நான் கெட்ட வார்த்த பேசலைன்னாலும், சொமந்துகிட்டு திரியரேன்னு சொல்லிக்கமுடியாது..:))

அண்ணாமலையான் said...

புது புது ஆராய்ச்சிலாம் பன்றாங்கப்பு... கலக்குங்க

வை.கோபாலகிருஷ்ணன் said...

"Vazhuvattai" endra vaarththaikku arththam theriyaamal ippati vazhuvattaiyaaka iruppeerkal endru naan ninaikkave illai. Dictionery reference pola, thangkaLin santhekangalukku nachchendra, pathil en aduththa mailil anuppapadum.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Please refer the story "Poti Vishayam" published in Page Nos.120-126 of Mangaiyar Malar November'06 written by me in the name of my eldest sister Mrs. Lakshmi Gangadharar. If not possible to trace out November 2006 Mangaiyar Malar, you may very well refer Page Nos: 43-51 of "ThayumaanavaL" (My own Sirukathaiththokuppu) published by Vanathi Publishers during August 2009, which I have supplied as Gift to one & all including yourself, recently on 5.12.2009. The Hero's name is "Vazhuvattai Srinivasan" in that story. UnkaL santhEkam theera Ezhuchchiyutan udane patikkavum.

வை.கோபாலகிருஷ்ணன் said...

sivalingamum karuppaaka irukkum. Karadiyum karuppaaka irukkum. oruveLai Ethaavathu oru kaalakkattaththil, kaNNai mootiya nilaiyil, sivanatiyaar yaaraavathu pakthiyudan sivalingaththiRku archchanai seythukondirukka, avarukkuththeriyaamal Sivane oru veLai (ThiruviLaiyaadal pola) sivalingam iruntha idaththil Karadi roopaththil amarnthu, archchanaikaLai EtrukkoNdu, aatkondiruppaaro !
Ethaavathu pazhamozhikaLai aLLith theLiththu, neengalum kuzhambi engalaiyum kuzhappikkoNdu irukkiReerkaL ayya. தலையை சுத்துது ...ஆள விடுங்க சாமி!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ungaL cartoonil uLLa oruvar vazhuvattaiyaakavum, matroruvar Ezhuchchiyaakavum uLLathaakath therikiRathu ! athu enna munthirikkottai pola mookku avarukku ! paarththaale sirippu varukiRathu enakku.

வசந்தமுல்லை said...

புது புது பழமொழிகள் புது புது ஆராய்ச்சிகள் என கிளம்பிட்டீங்க போலே இருக்கு!!!!
நடத்துங்க, நடத்துங்க எல்லாம் நல்லா நடக்கும். என்னை உங்க சிஷ்யனா அங்கிகறிப்பீர்களா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

coffee kodukkappatta tumlarai, coffee yin quality sariyillaatha kaduppil, anthap paataavathi coffee yaik kutiththavar LOTTU endru vaikka, athan saptham oru vELai "LOTTAA" ena kEttirukkum. athilirunthu athu Lottaa ena azaikkappattirukkalaam. Ithu Eppadi irukku?

வை.கோபாலகிருஷ்ணன் said...

சில பேர் மில்லில் போய் மாவறைத்துக் கொண்டு வந்தேன் என்று சொன்னால்,
வேறு சிலரோ மாவு திரித்துக் கொண்டு வந்தேன் என்று சொல்வார்கள்.
aRaiththukkoNdu vanthEn enpathaiththaan thiriththukkoNdu vanthEn endru THIRITHTHUK KOORUKIRAARKAL. (manalaiyE kayiRaakath thirippavarkaL ayyaa)

ப்ரியமுடன் வசந்த் said...

அஸால்டா போயினே கீற நைனா

இதுமாதிரி வட்டார வழக்கு சொற்கள் இருக்குறதுனாலயோ என்னவோ தமிழ் செம்மொழியா இருக்கு...

ரிஷபன் said...

இந்த டகல்பாஜி வேலை எல்லாம் நம்ம கைல வாணாம்.. பீஸ் பீசாயிருவ.. தாராந்துருவ.. இப்படி ஒருத்தர் திட்டிகொண்டு போய்க் கொண்டிருந்தார்.. பிளாக் படிக்கிறவர் போலிருக்கு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்பு நண்பர் ரிஷபன் அவர்களின் வரிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளது கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
குருநாதர் என்றுமே குருநாதர் தான் என்பதை நச் என்று நாலே வரிகளில் நிரூபித்துவிட்டார். He is always very Great.

Jaleela Kamal said...

கொஞ்சம் இடை வெளிவிட்டு பதிவ போட்டு இருக்கலாம்.

ரொம்ப நக்கல் நையாண்டியா இருந்தது.

ஊரான் பிள்ளை பெண்டாட்டியா ,ம்ம்ம் இப்படி

லோட்டா, டம்ளர், அதுக்கு இன்னொரு பெயர் கிளாஸ்

Jaleela Kamal said...

இப்ப பழைய பழமொழிகளை ஆராய்ந்து புது அர்த்தமா அய்யோ அய்யோ

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பலா பட்டறைக்கும்,அண்ணாமலைக்கும் வருகைக்கு
நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹை... நம்ம கோபு ஸார் தமிழில் எழுத ஆரம்பித்து விட்டார்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

முதன் முதலாய் வருகை தந்த ஜலீலாவிற்கு வந்தனங்கள்!!

Anonymous said...

லோட்டா என்ற சொல் போர்த்துகீசியம். அது தூத்துக்குடி மாவட்ட மீனவர் சமூகத்தில் புழங்கும் பல போர்த்துகீசிய சொறகளில் ஒன்று.

போர்த்துக்கீசியர்கள் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை உரோமன் கத்தோலிக்க மதத்தில் சேர்த்து அம்மீனவர்களுக்கு போத்துக்கீசியப்பெயர்களை கொடுத்தனர். பர்னாண்டோ, மிசியர், பெரையரா, மிராண்டா, பிதலிஸ் போன்றவை.

என் பெயர்: ஜோசம் அமலன் ராயன் பர்ணாண்டோ.

Anonymous said...

’ஆக்கங்கெட்ட கூவே’ என்பதும் நான் கேட்டதுண்டு. கூவே என்பது ஆந்தை.

நினைவிருக்கட்டும்: கூகை என்பது தூய தமிழ்ச்சொல் ஆந்தைக்கு. கூகையை காகம் வெல்லும் என்பது தமிழ்ப் பழமொழி.

இச்சொல்வடை, நடிகவேல் எம்.ஆர். இராதா அவர்களின் நாடகம் ஒன்றில் அடிக்கடி வரும். அதில் இராதா காமெடிக்காக இப்படி அடிக்கடி சொல்வார். நாடகத்தில் பெயர் நினைவில்லை.

இந்த நாடகம் பிரபலாமனதாகும். தென்மாவட்டங்களில் அம்ப்துகளில் இராதா இதை நடாத்த, இச்சொல்வடை அம்மாவட்ட மக்களில் பேச்சில் புழங்க ஆரம்பித்தது.

என் அம்மா எங்களை இப்படிச் சொல்லித் திட்டுவதுண்டு.

Anonymous said...

இப்படிக்கு

ஜோசப் அமலன் ராயன் பர்ணாண்டோ

போர்த்துக்கீசியத்தாக்கத்தைப்பற்றி அறிய இவ்வலைபதிவுக்குப் போகவும்:

www.manavai.com

Anonymous said...

ஏன் நீங்கள் உங்கள் பதிவை தமிழ்மணம் திரட்டியில் இணைக்கக்கூடாது? நான் தற்செயலாகத்தான் இங்கு வந்தேன்.

panasai said...

- நடராஜன், சிங்கப்பூர் - கரடி என்பது ஒரு வித வாத்தியக் கருவி என்று படித்த ஞாபகம். ச?வ பூசையில் தாழம்பூவுக்கும் இடம் இல்லை