Saturday, January 23, 2010

ஆடே.. உனக்கேன் வெட்கம் ?


ஆறறிவு படைத்த மனிதர்களே,
அத்தனை பாதகங்களையும்
செய்து விட்டு,
துளிக்கூட,
அதைப்பற்றிய லஜ்ஜை
இல்லாமல்,
நெஞ்சை நிமிர்த்தி,
நேர் கொண்ட பார்வை
வீசிச் செல்லும்போது,
ஐந்தறிவு படைத்த
ஆடே....
உனக்கேன் இந்த வெட்கம் !!
முதலில் இதை,
கழற்றி எறிந்து
உன் அடையாளம் காட்டு!
இல்லையேல்....
அடையாளம் இல்லாத
ஆடு மீது,
மனிதனுக்கு எப்போதுமே,
ஒரு கண் !
'டைனிங் டேபிளு'க்கு
கொண்டு போய் விடுவார்கள்...
ஜாக்கிரதை !!!

7 comments:

Paleo God said...

என் பக்கம் வந்து போனதிற்கு மிக்க நன்றி..:) பொறுமையாய் உங்கள் பதிவுகள் படிக்கவே ஆசை..(கொஞ்சம் நிதானம் வந்த பின்பு)

உங்கள் ப்ரொஃபைலில் உள்ளது போலவே நானும் ஒரு கனவோடு வீடு வாங்கி தோட்டம்போட தயாராகி வருகிறேன்.. எல்லாம் நல்லபடியாய் அமைய ப்ரார்த்தனை. :)

Chitra said...

அதுவும் மட்டன் பிரியாணியை மாற்றி.
விழித்துக் கொண்டு இருக்கும் போதே, தின்று ஏப்பம் விடும் உலகம் இது.
கண்ணை மூடி கொண்டு இருந்தால்.......?

கமலேஷ் said...

நியாம் தான்...

பா.ராஜாராம் said...

:-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கனவு நிறைவேற வாழ்த்துக்களும், ப்ரார்த்தனையும்,
திரு பலாபட்டறை. வீட்டுக்கு வரும்போது இரண்டு மாம்பழம் தந்து உபசரிக்க மாட்டீர்களா, என்ன..(ந்ம்ம
வீட்டுத்தோட்ட்த்தில பறிச்சதுதுன்னு தருவீர்கள் தானே!)
மற்றபடி,சித்ரா மேடம்,திருவாளர்கள் ராஜாராம்,
கமலேஷ் அவர்களுக்கு மனமுவந்த நன்றிகள்!!

ரிஷபன் said...

ஐந்தறிவு பிராணிக்கு எப்படி ஒரு புத்தி பாரேன்.. மனுஷ ஜென்மங்களைப் பார்க்கப் பிடிக்காம முகத்தை மூடிகிச்சே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

enkeyo oru ammanukku kidaa vettu natappathaaka periya Bannner allathu cut-out vaiththiruppaarkaL endru ninaikkiRen. Thannutaiya inaththil ondru ippati oru munnaRivipputan BHALI yaavathaip patikkappitikkaamal kankaLai mootikkonduLLatho antha vaayillaap praani !
kidaa vettu thaan vendumendru ithuvarai vaay thiRanthu ketkaatha antha ammanukke veLichcham.