Monday, November 9, 2009

பொடி விஷயம் தான் ஆனால்.....




பொடி போடும் மனிதர்களை இப்பொழுதெல்லாம் யாராவது
பார்க்கிறீர்களா ? யாராவது ஒருவர், இருவர் கண்ணில்...
மூக்கில் எப்போதாவது படுவார்கள். அடியேனுக்கு இந்த
விஷயத்தில் ஒரு குருட்டு அதிர்ஷ்டம். ஒருவரல்ல.. இரண்டு
பேர் எனக்கு வெகு அருகில் இருந்தார்கள். அந்த இரண்டு
நபர்களுமே என்னிடம் வெகு ப்ரியமாகவே நடந்து கொண்டார்கள்.
எங்கள் நட்புக்கு பொடி ஒரு தடையாகவே இருந்ததில்லை.

நானும் எத்தனயோ துர்பழக்கம் உள்ளவர்களைப் பார்த்திருக்கிறேன்.
தண்ணி அடிப்பவர்களிடம் சகஜமான நல்லுறவு இருக்கும். இரண்டு,
மூன்று நண்பர்கள் 'ஜமா' சேர்ந்தால் அவர்களின் நடுவில் நிச்சயம் ஒரு
பாட்டிலாவது இருக்கும். அதைப் போல சிகரெட் குடிப்பவர்களிடம்
ஒரு நளினமான நட்பு இருக்கும். ஒருவர் மற்றவருக்கு 'பற்ற' வைக்கும்
போது அடடா... என்ன ஒரு கரிசனம்... ரொம்பவும் மென்மையாகவே
'பற்ற' வைப்பார்கள்.

ஆனால் இந்த பொடி போடும் நண்பர்களைப் பாருங்கள். அவர்கள் கண்க
ளில் எல்லாம் பயம் மின்னும்.எங்கே பொடி கேட்டு விடுவானோ என்ற கலக்கம்
அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். அது அவர்களை
எப்பொழுதுமே ஒரு 'டிஸ்டன்சி'ல் வைத்திருக்கும். மற்ற துர்பழக்க
நண்பர்களைப் போல் அவர்கள் அவ்வளவு அன்யோன்யமாக இருக்க
மாட்டார்கள்.
அப்படித் தான் ஒரு நாள்......
ஒரு பழுத்த ராகு கால வேளையில் இவர் அவரிடம் பொடி கேட்டார்.
பதிலுக்கு அவர் இவரிடம் ஒரு துண்டு காகிதம் கொடுத்தார்.
அவர் வெகு கோபமாக இடத்தை காலி செய்தார்!

இருவர் நட்பிலும் ஒரு பெரிய விரிசலை உண்டு பண்ணி விட்டது, ஒரு
சின்ன பேப்பர்!
அப்படி என்னத் தான் அதில் எழுதி இருந்தது ?
அது இதோ....

ஓசிப் பொடி கேட்டு உபத்ரவம் செய்வோரை
பாசிப் படர்ந்த பாழ் கிணற்றில் தள்ளி,
தோசிப்பயல்..உதவாக்கரை என்று, நாம்
ஏசினால் போய் விடுமோ ஏழரை நாட்டுச் சனி!

போனவர் போனவர் தான்!

7 comments:

ரிஷபன் said...

பொடி விஷயம்னு அலட்சியம் பண்ண முடியல

Unknown said...

அட கவிதை....

முனைவர் இரா.குணசீலன் said...

ஓசிப் பொடி கேட்டு உபத்ரவம் செய்வோரை
பாசிப் படர்ந்த பாழ் கிணற்றில் தள்ளி,
தோசிப்பயல்..உதவாக்கரை என்று, நாம்
ஏசினால் போய் விடுமோ ஏழரை நாட்டுச் சனி!/

நன்றாகவுள்ளது நண்பரே..
ஏதும் தனிப்பாடல் திரட்டிலிருந்து எடுத்தீர்களா...
இல்லை...
வாய்மொழி வழக்காடலா..?

முனைவர் இரா.குணசீலன் said...

படம் அழகாகவும் பொருத்தமாகவும் உள்ளது நண்பரே..
நீங்கள் வரைந்ததா..?

முனைவர் இரா.குணசீலன் said...

கருத்துரைப்பகுதியில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுங்கள் நண்பரே..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு,

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி..
படமும்...அந்த வெண்பாவும்..
அடியேன் வரைந்தது/புனைந்தது தான்!

நெல்லைத் தமிழன் said...

அது வெண்பா அல்ல. கடைசி வரியை,
ஏசினால் போமோ சனி என்று மாற்றுங்கள். மற்ற வரிகளில் தளை சரிபார்க்கவில்லை. கடைசி வரி had obvious mistake. Sorry to write so so late (நமக்கு தமிழ் முக்கியமுல்ல)