Monday, September 27, 2010

நச்.. !..நச்...!...நச்...!!!.....

*
பள்ளிக்குச்
செல்லும்
செல்லப்
பிள்ளைகளே!
அரசிடம்,
மட்டும்
வாங்குங்கள் !
ஆசிரியரிடம்,
வாங்காதீர்கள் !!
முட்டைகளை!!!

**
ஒரு அவசரச் சட்டம்
போட்டு,
ஊழலையும்..
விளையாட்டாக்குவோம்!
காமன் வெல்த் கேம்ஸில்,
அதிகத்
தங்கப் பதக்கங்கள்,
நமக்குத் தான்!!
***
தனிப்பட்ட ஒருவருக்கு
சொந்தமான,
டாடா குழும..
குடும்ப கம்பெனிகளை
நிர்வகிக்க
வெளியிலிருந்து..
கைகள்..
நம் எல்லாருக்கும்
சொந்தமான
நாடோ ?
குறிப்பிட்ட
குடும்பங்களின்
கைகளில் !!!

26 comments:

மதுரை சரவணன் said...

அசத்தல் முட்டை... வாழ்த்துக்கள். அரசும் ஒரு குடும்பம் கைக்குள் ... எப்படி இப்படி வெளிப்படையான கவிதை. ..!

VAI. GOPALAKRISHNAN said...

கவிதை முட்டையில் கருத்து உள்ளது.

ஊழல் விளையாட்டானால், நமக்கே தங்கம் என்றாலும் வேண்டாம் அநதத் தங்கம் - ஊழலை ஒழித்தே தீருவோம் ! (வீர வசனம் எப்படி உள்ளது?)

ஜனநாயகத்தில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதால், அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் கைகளில் தற்சமயம், தற்காலிகமாக, இந்த நாடே இருப்பினும், நம் உடன் பிறப்புகள் தானே, அவர்கள் ஆட்சியும் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று எண்ணி மகிழ்வோம். வேறு வழி இல்லையே !

Anonymous said...

good post...


http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_2921.html

DrPKandaswamyPhD said...

நல்லா இருக்குங்க.

வெங்கட் நாகராஜ் said...

தலைப்பு போலவே மூன்றும் நச்... நச்... நச்....

வாழ்த்துக்கள்.

சுந்தரா said...

நச் கவிதைகள்... மூன்றுமே நல்லாருக்கு.

ரிஷபன் said...

நிஜமாகவே ‘நச்’ தான் மூன்றும்.

RVS said...

ஒரே அரசியல் நெடி அடிக்குது சார். மனதை "நச்"சரிக்கும் கவிதைகள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

இதோ எனது நாலாவது நச்!
ஓசிப் பேப்பர் படிப்பவர் போன்று,
குறைந்தது இரண்டு மணித்துளிகள்,
அத்தனை பேர் வீட்டிலும்,
அழையா விருந்தாளியாய் நுழைந்தது,
மின்வெட்டு!!!!!

ஹேமா said...

உங்கள் தோட்டத்துப் பழம் பறிக்க வந்துவிட்டேன் ஆரண்யநிவாஸ்.முதல் வணக்கம்.
முதல் வரவிலேயே நச்.

பத்மநாபன் said...

மூட்டையாய் புத்தகங்கள் சுமந்து சென்று, முட்டை வாங்காதீர்.....

எங்கள் அரசியல்வாதிகளூக்கு என்றுமே காமன் வெல்த்தில் தானே குறி..எனவே நிச்சயம் பதக்கங்களை,ஊழல் போட்டியில் அள்ளுவார்கள் ( ஊழலாரின் மீது எரிச்சலோடு )

டாடா ...இப்படி வெளிநாட்டினர் முக்கியமான நிறுவனங்களில் நுழைந்தால்..மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியா...தாங்காது..உடனே இதற்கு சொல்லவேண்டும் டாடா...

vasan said...

ப‌ள்ளிக்கு முட்டை வாங்க‌, மூட்டையாய் புத்த‌க‌ங்க‌ளுட‌ன் செல்லும், செல்ல‌ங்க‌ள், .

பாம்பும், கொசுவும் இருப்ப‌தால், போட்டிக்கு ஆள் வ‌ராவிட்டால், அதிக‌மான‌ மெட‌ல் ந‌ம‌க்குத் தானே?

த‌ன‌து வ‌ர்த்த‌க‌ விமான‌க் க‌ம்ப‌னியை டாடா தேச‌த்துக்கு கொடுத்ததார். ஆனால் தேச‌ம் அவ‌ருக்கு
த‌னியார் விமான‌ வர்த்த‌க‌ம் ந‌ட‌த்த‌ சிக்க‌ல் த‌ந்‌து த‌விர்த்த‌து (ஜெட் ஏர்லைன்ஸ் அப்புற‌ம் வ‌ந்த‌து)

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

மதுரை சரவணன்:
” அசத்தல் முட்டை... வாழ்த்துக்கள். அரசும் ஒரு குடும்பம் கைக்குள் ... எப்படி இப்படி வெளிப்படையான கவிதை. ..!”
நான் : ஏதோ தோணிச்சு..எழுதினேன்..அரசியல் வண்ணம் பூசாதிங்கணா..எனக்கு அரசியல்னா அலர்ஜி!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

வை.கோ :
“கவிதை முட்டையில் கருத்து உள்ளது.

ஊழல் விளையாட்டானால், நமக்கே தங்கம் என்றாலும் வேண்டாம் அநதத் தங்கம் - ஊழலை ஒழித்தே தீருவோம் ! (வீர வசனம் எப்படி உள்ளது?)

ஜனநாயகத்தில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதால், அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் கைகளில் தற்சமயம், தற்காலிகமாக, இந்த நாடே இருப்பினும், நம் உடன் பிறப்புகள் தானே, அவர்கள் ஆட்சியும் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று எண்ணி மகிழ்வோம். வேறு வழி இல்லையே !”
நான் :

ஆமாம்!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

KUWAIT TAMILS:
"good post..."
MYSELF:
Thankq!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

நம்ம கந்தசாமி சார்:
“நல்லா இருக்குங்க.
நான்:
“ நன்றி ஐயா!”

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

வெங்கட் நாகராஜ்:
“தலைப்பு போலவே மூன்றும் நச்... நச்... நச்....
வாழ்த்துக்கள்.”
நான் :
வெங்கட். நாலாவது நச்! சற்று தலையை கீழெ சாய்ச்சுப் பாருங்க!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

சுந்தரா:
“நச் கவிதைகள்... மூன்றுமே நல்லாருக்கு”
நான் : நன்றிங்க !!!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ரிஷபன் :”நிஜமாகவே ‘நச்’ தான் மூன்றும்.”
நான் : நாலாவதும் ஒண்ணு எழுதி இருக்கேன்!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

RVS : "நிஜமாகவே ‘நச்’ தான் மூன்றும்."
நான்: RVS... நிஜம்மாவே ஒரு கதை எழுதிண்டு
இருக்கேன்..ஐயாவோட அடுத்த வெளியீடு !
படிச்சுப் பார்த்து கமெண்ட் போடணும்.
அதன் தலைப்பு : பாலகிருஷ்ணன் வீடு!!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

இதோ எனது நாலாவது நச்!
ஓசிப் பேப்பர் படிப்பவர் போன்று,
குறைந்தது இரண்டு மணித்துளிகள்,
அத்தனை பேர் வீட்டிலும்,
அழையா விருந்தாளியாய் நுழைந்தது,
மின்வெட்டு!
மனசாட்சி :
ஏதோ புதுமையா செய்யறேன்னு, அஞ்சாறு பஸ்ஸுக்கு அப்பால ஆட்டோவை நிறுத்தினாபபல
கீது!
யாருக்குத் தெரியும் இங்க ஒரு ‘ நச்’ இருக்குன்னு !
மெய்யாலுமே மறந்து பூட்டியா? அதான் இந்த இடைச் செருகலா?

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஹேமா:
“உங்கள் தோட்டத்துப் பழம் பறிக்க வந்துவிட்டேன் ஆரண்யநிவாஸ்.முதல் வணக்கம்.
முதல் வரவிலேயே நச்.”
நான் : வாங்க ஹேமா..தங்கள் முதல் வருகைக்கு நன்றி! அடிக்கடி வரணும்..

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

பத்மநாபன் :
“மூட்டையாய் புத்தகங்கள் சுமந்து சென்று, முட்டை வாங்காதீர்.....

எங்கள் அரசியல்வாதிகளூக்கு என்றுமே காமன் வெல்த்தில் தானே குறி..எனவே நிச்சயம் பதக்கங்களை,ஊழல் போட்டியில் அள்ளுவார்கள் ( ஊழலாரின் மீது எரிச்சலோடு )

டாடா ...இப்படி வெளிநாட்டினர் முக்கியமான நிறுவனங்களில் நுழைந்தால்..மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியா...தாங்காது..உடனே இதற்கு சொல்லவேண்டும் டாடா..”
நான் : பிரமாதம் !!

மனோ சாமிநாதன் said...

மூன்றுமே ‘நச்’ சென்ற கவிதைகள்தான் தலைப்புக்கேற்ற மாதிரி!

அப்பாவி தங்கமணி said...

ஊழல் - போட்டி - பதக்கம் - சூப்பர் சிந்தனை...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

Thank you..
மனோ சாமிநாதன்...
அப்பாவி தங்கமணி..