நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Monday, September 20, 2010
ஆட வரலாம்.....
' ஆடவரெல்லாம்..ஆட வரலாம்....'
ஏதோ ஒரு அரதப் பழசான சினிமாவில, ஏதோ ஒரு கவர்ச்சி நடிகை , ஏதோ ஒரு சீனில், ஏதோ ஒரு ஆட்டம் போட்டது, எல்லாருக்கும் ஞாபகம் வருகிறதோ இல்லையோ..ஆனால், பின்னணி பாடிய அந்த கவர்ச்சி கரமான குரலுக்குச் சொந்தக் காரரான எல்.ஆர்.ஈஸ்வரியை அத்தனை பேருக்கும் ஞாபகம் இருக்கும் என்பதே அழுத்தமான உண்மை!
எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்துக்களில் வாழ்கிறார்கள் என்று சொன்னால் அதை யாரும் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். அத்தனையும் கப்ஸா! சுத்த ஹம்பக்!!
உதாரணத்திற்கு , இந்த பாட்டையே எடுத்துக் கொள்ளுங்களேன். உயிரைக் கொடுத்து ஒருவர் பாடல் எழுதுகிறார்..உயிரைக் கொடுத்து ம்யூசிக் டைரக்டர் ஒருவர் அதற்கு மெட்டு போடுகிறார். குறைந்தது, ஆறிலிருந்து பத்து பேராவது அந்த பாட்டிற்கு இசைக் கருவிகளில் உயிரைக் கொடுத்து, இனிய இசை எழுப்புகிறார்கள். உயிரைக் கொடுத்து, ஒருவர் அத்தனையையும் படம் எடுக்கிறார். உயிரைக் கொடுத்து நீங்களும் இதை படித்துத் தொலைக்கிறீர்கள்!
ஆனால், எட்டே நிமிடத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பெயரைத் தட்டிக் கொண்டு செல்கிறார்.
அது போலத் தான், பிள்ளையார் சதுர்த்தி இருக்கும் வரை பிள்ளையார் இருப்பார். பிள்ளையார் இருக்கும் வரை சீர்காழி கோவிந்தராஜனும் ஏதோ ஒரு 'லவுட் ஸ்பீக்கரில்'
'வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தார்' போன்ற தன் கணீரென்ற குரலில் வாழ்ந்து கொண்டிருப்பார்!
மற்றபடி..பாடல் பாடியவர்..மெட்டுப் போட்டவர்..வாத்ய கோஷ்டி..அத்தனை பேரும் அம்பேல்!
எதற்கு இத்தனையும் சொல்கிறேன் என்றால், நல்ல குரல் வளம் உள்ளவர்கள் நாளும் வாழ்கிறார்கள், அவர்களது இனிமையான குரலால்!
அந்த குரலுக்கு எது தேவை?
அந்த 'லிங்க்' இந்த கட்டுரையின் கடைசியில் !
அது இருக்கட்டும்.
விட்ட ஆட்டத்திற்கு வருவோம். யாராவது ஆடினால் பார்க்க குஷியாகத் தான் இருக்கிறது. சர்க்கஸில் 'பாரில்' ஆடிகிறார்கள். கழைக் கூத்தாடி ஆடுகிறான். கவர்ச்சி நடிகைகள் ஆடுகிறார்கள்....பரத நாட்டியம்.. ரத்ன சபையில் அந்த ஞானக் கூத்தன் ஆடுகிறான். கண் குளிர தரிசிக்கிறோம். ரசிக்கிறோம்..ஆனந்தப் படுகிறோம் !
ஆனால், இத்தனை ஆட்டங்களும் வெளியில் தான்.
உள்ளே ????
உதாரணத்திற்கு பல் ஒன்று ஆடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்...அதுவும் கடைவாய் பல்.. கழைக் கூத்தாடி போல்...சிற்சபேசன் போல் ....அழகாய்த் தான் ஆட்டம் போடுகிறது.ஆனால் அதை ரசிக்க முடிகிறதா?
வலி ப்ராணன் போகிறது.
சூயிங்கம் போட்டு அதற்கு விடுதலை கொடுக்கலாமென்றால், புத்திர சிகாமணி அதை தடுக்கிறான்.
' அப்பா..டாக்டர்ட்ட போ..அப்பத் தான் ஆணி வேரோட எடுக்க முடியும். அதுவும் கடவாய் பல்லுங்கறே '
எனக்கு பயம்!
ஆனால், பயத்தை வலி ஜெயிச்சது!
விளைவு. சகல விதமான ஆயுதங்கள் புடை சூழ நின்ற ஒருபல் டாக்டர்
அவர் முன்னால் நிராயுதபாணியாய் நான்!
' என்ன செய்யுது?'
பல்லைக் காட்டினேன். அது விவஸ்தை இல்லாமல்..ஆபத்து எதிரில் இருப்பது தெரியாமல் ஆட்டம் போட்டது!
'கவலைப் படாதீர்கள், ஸார். மரத்துப் போவதற்கு ஒரு ஊசி போடறேன்'.
ஊசியும் போட்டார்!
உஸ்...ஸென்று ஜிவ்வென்று என்னுள் புகுந்து கொள்ள...
ரொம்பவும் சந்தோஷமாய்..நம நமவென்று...
'அட சுத்தமா வலிக்கலியே! ஐந்து ரூபாய் சைஸ் உச்சந்தலை வழுக்கை..குழி விழுந்த கண்கள்..ஒடுங்கிய கன்னம்..முகத்தையே திருகி வேறோரு அழகான முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுடலாம்
போல் இருக்கே'
கற்பனை குதிரை தறி கெட்டு ஓடும் போது டாக்டரின் குரல் கடிவாளமாய்...
குறடுடன் அவர்!
பல்லுடன் நான்!!
ஒரு நொடி..
ஒரு நொடி தான். இரண்டுமே இடம்
மாறி விட்டன!
இப்போது....
எண்பது ரூபாய் டாக்டருக்கும், நூற்றி இருபது ரூபாய் மருந்துக்காகவும் மாசக் கடைசியில் என் பர்ஸிலிருந்து பிடுங்கப் பட்டது!
நீங்களே சொல்லுங்கள்.
உள்ளே ஆடும் ஆட்டம் அவ்வளவு சுவாரஸ்யமானதா, என்ன?
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
ஆடாது அசங்காது வா கண்ணா என்று பல்லைப் பார்த்து பாட முடியாது.
பல்லை பேர்த்துடுவேன்னு சில பேர் உதார் விடலாம். பிடிங்கிடுவேன்னு யாரவாது சொல்ல முடியுமா? டாக்டரை தவிர... பல்லை புதைச்சாதான் புதுப் பல் முளைக்கும்ன்னு என்னோட ஆரம்ப கால பல் விழும் வயசில் பாட்டி சொன்னா... ;-) ;-)
இந்தப் பதிவின் லேபில் மாதிரி கொஞ்சம் வெட்டிப் பேச்சு..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
அது இருக்கட்டும், சார். உங்கள் வெண்பா என்ன ஆச்சு?
”பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது”ன்னு சொல்வாங்க! அதுமாதிரி ஆடிய பல்லு மட்டும் சும்மா இருக்குமா என்ன?
வெங்கட்.
’பல்’லாயிரம் காலம் வாழ்கவென வாழ்த்தும்
உங்கள் எழுத்தின் ரசிகன்.
RVS சொன்னது:
“ஆடாது அசங்காது வா கண்ணா என்று பல்லைப் பார்த்து பாட முடியாது.
பல்லை பேர்த்துடுவேன்னு சில பேர் உதார் விடலாம். பிடிங்கிடுவேன்னு யாரவாது சொல்ல முடியுமா? டாக்டரை தவிர... பல்லை புதைச்சாதான் புதுப் பல் முளைக்கும்ன்னு என்னோட ஆரம்ப கால பல் விழும் வயசில் பாட்டி சொன்னா... ;-) ;-)”
அட..பரவாயில்லையே?
எலந்தைபழத்தைப் பார்த்தால் எல்.ஆர்.ஈஸ்வரி நினைவும், எல்.ஆர்.ஈஸ்வரியைப் பார்த்தால் எலந்தப் பழ நினவும் வருவது இயற்கையே! சரியாகச் சொன்னீர்கள் - எல்லாப் பாராட்டுகளும் குரல் கொடுத்தவர்களுக்கும், வாய் அசைத்து நடிப்பவர்களுக்குமே போய் விடுகிறது. மாசக் கடைசியில் உங்கள் பர்ஸிலிருந்து பிடுங்கப்பட்ட ரூ 200 போனால் போகட்டும். காசு இன்று போகும் நாளை வரும். பல்லு அதுவும் கடவாய்ப்பல்லு போனது போனது தான். கடவாய்ப் பல்லின் ஆட்டத்தை, கரகாட்டக்காரிகளின் குத்தாட்டம் போல ரஸிக்கவா முடியும். குத்து வலி தாங்காதய்யா!
பிடிங்கி எறிந்த வரை நல்லதுதான். நாளடைவில் நீர் அந்தக் கடவாய்ப் பல்லை மறந்தாலும், உம் நுனி நாக்கு, அன்புடன் நன்றி மறக்காமல் நட்புடன், அந்தக் கடவாய்ப் பல் இருந்த குழியை அடிக்கடி துலாவி முத்தமிட்ட வாறு இருக்கும். இந்த நகைச்சுவைப் பதிவைத் தந்த நீர் ‘பல்’ லாண்டு வாழ்க !!
சித்ரா சொன்னது:
“அது இருக்கட்டும், சார். உங்கள் வெண்பா என்ன ஆச்சு?”
-- உஷ்.. நான் ஆஃப் ஆன ரகசியம் எனக்கும் RVS க்கும் மட்டுமே தெரியும்!
வெங்கட் நாகராஜ் சொன்னது:
“ ”பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது”ன்னு சொல்வாங்க! அதுமாதிரி ஆடிய பல்லு மட்டும் சும்மா இருக்குமா என்ன?”
-- சும்மா இருக்காது!
ரிஷபன் சொன்னது:
“’பல்’லாயிரம் காலம் வாழ்கவென வாழ்த்தும்
உங்கள் எழுத்தின் ரசிகன்.”
நன்றி ரிஷபன்!
வை.கோ. சொன்னது:
“எலந்தைபழத்தைப் பார்த்தால் எல்.ஆர்.ஈஸ்வரி நினைவும், எல்.ஆர்.ஈஸ்வரியைப் பார்த்தால் எலந்தப் பழ நினவும் வருவது இயற்கையே! சரியாகச் சொன்னீர்கள் - எல்லாப் பாராட்டுகளும் குரல் கொடுத்தவர்களுக்கும், வாய் அசைத்து நடிப்பவர்களுக்குமே போய் விடுகிறது. மாசக் கடைசியில் உங்கள் பர்ஸிலிருந்து பிடுங்கப்பட்ட ரூ 200 போனால் போகட்டும். காசு இன்று போகும் நாளை வரும். பல்லு அதுவும் கடவாய்ப்பல்லு போனது போனது தான். கடவாய்ப் பல்லின் ஆட்டத்தை, கரகாட்டக்காரிகளின் குத்தாட்டம் போல ரஸிக்கவா முடியும். குத்து வலி தாங்காதய்யா!
பிடிங்கி எறிந்த வரை நல்லதுதான். நாளடைவில் நீர் அந்தக் கடவாய்ப் பல்லை மறந்தாலும், உம் நுனி நாக்கு, அன்புடன் நன்றி மறக்காமல் நட்புடன், அந்தக் கடவாய்ப் பல் இருந்த குழியை அடிக்கடி துலாவி முத்தமிட்ட வாறு இருக்கும். இந்த நகைச்சுவைப் பதிவைத் தந்த நீர் ‘பல்’ லாண்டு வாழ்க!!!!
- எங்கே?
’பல்’லாவரத்திலா , ’பல்’லடத்திலா ??
அருமை!!! அருமை ! பல்லால் அனுபவித்து எழுதிய நண்பரே !!!அருமை !
’பல்’லே பாண்டியா:))
Veliye ullae,nice aaranya nivas RR.
அருமையான பின்னூட்டத்துக்கு நன்றிங்க.
அவரவர்க்குவந்தால் தான் அருமை தெரியும். பல்லாண்டுவாழ்க.
"பல் லாண்டு பல் லாண்டு..” சார் அருமை..
சார் ...வெண்பா விஷயத்தில் சித்ராவிற்கு நீங்கள் பதில் அளித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
வெண்பா வருமென காத்திருந்தால்
'பல்'லவி அல்லவா பாடிவிட்டீர்கள்.
'பல்' ஆட்டத்துக்கும்,ஈஸ்வரியின்
' ஆடவரெல்லாம்..ஆட வரலாம்....'
ஆட்டத்துக்கும்....எப்படி முடிச்சு?
ஆசை, அவஸ்தை!!!
வசந்த முல்லை சொன்னது:
“ அருமை!!! அருமை ! பல்லால் அனுபவித்து எழுதிய நண்பரே !!!அருமை ! ”
அனுபவம் புதுமை!
பல்லில் கண்டேன் !!
வானம்பாடிகள் சொன்னது:
“ ’பல்’லே பாண்டியா:)) ”
சும்மா நச்னு இருக்கு!
முனியப்பன் சார் சொன்னது:
“Veliye ullae,nice aaranya nivas RR.”
தங்களின் வருகை என்னை மேன்மை அடையச் செய்கிறது,ஸார்!
நிலா மதி சொன்னது:
”அவரவர்க்குவந்தால் தான் அருமை தெரியும். பல்லாண்டுவாழ்க.”
பல்லில்லாமலா???
RVS சொன்னது:
“ சார் ...வெண்பா விஷயத்தில் சித்ராவிற்கு நீங்கள் பதில் அளித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.”
ரொம்ப சரி!
VASAN சொன்னது:
“வெண்பா வருமென காத்திருந்தால்
'பல்'லவி அல்லவா பாடிவிட்டீர்கள்.
'பல்' ஆட்டத்துக்கும்,ஈஸ்வரியின்
' ஆடவரெல்லாம்..ஆட வரலாம்....'
ஆட்டத்துக்கும்....எப்படி முடிச்சு?
ஆசை, அவஸ்தை!!! “
ஆசையின் முடிவு,
அவஸ்தை என்கிறீர்களா, வாசன்?
தேனம்மை சொன்னது:
“பல் லாண்டு பல் லாண்டு..” சார் அருமை..”
பல்லு போச்சேன்னு வருத்தத்தில நான் இருக்கேன்.
அதுக்காக இப்படியா ‘கடி’ப்பாங்க! என்ன கொடுமை சரவணா இது!!!
பல்லுப்போனா சொல்லு போய்டும்பாங்க...
இப்பெல்லாம் மருத்துவர் அவ்வளவு சீக்கிரம் பல்லை பிடுங்குவதில்லை....நம்ம பணத்தை பிடுங்கி பல்ல சரிபண்ணத்தான் பார்க்கிறார்கள்....
ஆடி அடங்குவதை அழகாக சொல்லியுள்ளீர்கள்.
பத்மநாபன் சொன்னது:
பல்லுப்போனா சொல்லு போய்டும்பாங்க...
இப்பெல்லாம் மருத்துவர் அவ்வளவு சீக்கிரம் பல்லை பிடுங்குவதில்லை....நம்ம பணத்தை பிடுங்கி பல்ல சரிபண்ணத்தான் பார்க்கிறார்கள்....
ஆடி அடங்குவதை அழகாக சொல்லியுள்ளீர்கள்.
நடுவில் வந்து நடுவில் போகும் பற்கள் படுத்தும் பாட்டைத் தான் பாருங்கள், பத்மநாபன்!!
Post a Comment