Wednesday, September 22, 2010

நான் கடவுள்...!!!!!!!


எல்லாம் கர்ம
வினைப்படி..
விதிப்படித்
தான் நடக்கும்....
நடக்கிறது.....
நியூட்டனின்
மூன்றாவது விதிக்
கோட்பாடின் படி,
தான்
உலகமே
சுழல்கிறது...
பின்
கடவுள் இங்கு
எங்கு வந்தான்
என்றான்,
பகுத்தறிவாளன்
ஒருவன்!
அட ..ஆமாம்...
போல இருக்கே
என்று,
நான் நினைக்கையில்,
வயோதிகன் ஒருவன்
பெரிய மரத்தை,
இழுக்க முடியாமல்..
இழுத்துக் கொண்டும்,
உஸ் உஸ்ஸென்று
பெரு மூச்சு விட்டுக் கொண்டும்,
'அடக் கடவுளே' என்று,
புலம்பிக் கொண்டும்
ஆற்றுப் பாதையில்
வர...
இது இவனுக்கு
இடப் பட்ட விதி..
இங்கு
கடவுள் எங்கு
வருவான் என்று
நான் யோசித்தேன்....
திடீரென்று ஒரு
பெரு மழை பெய்து...
வெள்ளமாய் பெருகி,
மரம் இழுக்கும்
அவன் வேலையை,
அது..
மிக மிகச்
சுலபமாக்க...
' நான் கடவுள்'
என்றது மழைத்துளி,
அப்போது,
சிறிதும் கர்வமின்றி!!!

24 comments:

Chitra said...

சிலருக்கு மழைத்துளி கடவுள். சிலருக்கு மழைத்துளியை தருவது கடவுள். :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆம். கடவுளைக் காணமுடியாது. உணரத்தான் முடியும். ஈஸ்வர ஸ்வரூபமான நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் இவையில்லையேல் நாம் இல்லை. நாட்டில் நடக்கும் ஒரு சில அநியாயங்களைக் கண்டு இவை ஓர் கட்டுக்கோப்புக்குள் இல்லாமல் சீற்றம் கொண்டாலும் நாம் காணாமல் போய் விடுவோம். ஏதோ இடைப்பட்ட நாட்களில் தங்கள் ப்ளாக்கைப் பார்க்க, படிக்க நேர்ந்துள்ள வரை சந்தோஷமே! நல்லதையே நினைப்போம். நல்லவராக இருக்க முயற்சிப்போம்.

வசந்தமுல்லை said...

உண்மைதான் !!!

எனக்கு இது போல் நிறைய உணர்வுகள் நடந்துள்ளது ! உதாரணமாக நான் வீட்டில் நடந்த பிரச்னையை நினைத்து சாலையில் நடக்கும்போது, அதே சாலையில் வேறு இருவர் பேசிக்கொண்டிருப்பார்கள் . அப்போது அவர்களுக்குள் நடக்கும் சம்பாசணையில், என்னுடைய சிக்கலுக்கு தீர்வும், என் காதில் விழும். இதை எப்படி எடுத்துக்கொள்ள? அவர்கள் இருவரும் கடவுள்களா?
இல்லை கடவுள்தான் அவர்கள் வழியில் எனக்கு தீர்வு கொடுத்தாரா?
இதற்க்கு நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

RVS said...

கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் அஃறினை கூட கடவுள் தான்... சரிதானே ஆர்.ஆர்.ஆர். சார்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

குட்டிப்பையா|Kutipaiya said...

உண்மை!!!!

vasu balaji said...

தெய்வாதீனமாங்கற வார்த்தையை சொல்லாத மனுஷா உண்டா.அந்த சந்தர்ப்பமுமே கடவுள்தானே:)

வெங்கட் நாகராஜ் said...

அழகிய கவிதை... கடவுளும் ஏதாவது ஒரு வழியில் அவரை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார் - நமக்குத் தான் புரியவில்லை.


வெங்கட்.

ரிஷபன் said...

தெய்வாதீனமாங்கற வார்த்தையை சொல்லாத மனுஷா உண்டா.அந்த சந்தர்ப்பமுமே கடவுள்தானே:)

நன்றி ஸார்! அதே தான் என் உணர்வும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ரா சொன்னது:
“சிலருக்கு மழைத்துளி கடவுள். சிலருக்கு மழைத்துளியை தருவது கடவுள். :-)”
அருமையாகச் சொன்னீர்கள்,சித்ரா!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அன்பரசன் சொன்னது:
:)
நான்:

..
^

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை.கோ சொன்னது:
“ஆம். கடவுளைக் காணமுடியாது. உணரத்தான் முடியும். ஈஸ்வர ஸ்வரூபமான நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் இவையில்லையேல் நாம் இல்லை. நாட்டில் நடக்கும் ஒரு சில அநியாயங்களைக் கண்டு இவை ஓர் கட்டுக்கோப்புக்குள் இல்லாமல் சீற்றம் கொண்டாலும் நாம் காணாமல் போய் விடுவோம். ஏதோ இடைப்பட்ட நாட்களில் தங்கள் ப்ளாக்கைப் பார்க்க, படிக்க நேர்ந்துள்ள வரை சந்தோஷமே! நல்லதையே நினைப்போம். நல்லவராக இருக்க முயற்சிப்போம்.”

ரொம்பத் தான் உணர்ச்சிவச படறீங்களே, ஸார்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வசந்த முல்லைக்கு:
“உண்மைதான் !!!

எனக்கு இது போல் நிறைய உணர்வுகள் நடந்துள்ளது ! உதாரணமாக நான் வீட்டில் நடந்த பிரச்னையை நினைத்து சாலையில் நடக்கும்போது, அதே சாலையில் வேறு இருவர் பேசிக்கொண்டிருப்பார்கள் . அப்போது அவர்களுக்குள் நடக்கும் சம்பாசணையில், என்னுடைய சிக்கலுக்கு தீர்வும், என் காதில் விழும். இதை எப்படி எடுத்துக்கொள்ள? அவர்கள் இருவரும் கடவுள்களா?
இல்லை கடவுள்தான் அவர்கள் வழியில் எனக்கு தீர்வு கொடுத்தாரா?
இதற்கு நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்”

பகவான் மனுஷ்ய ரூபனேன்னு இதைத் தான் சொல்றாங்களோ? அது சரி..சாலையில் நடக்கும்போது வீட்டைப் பற்றி யோசியுங்கள்!
சாலையைக் கடக்கும் போது வேண்டாமே..ப்ளீஸ்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

RVS சொன்னது:

”கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் அஃறிணை கூட கடவுள் தான்... சரிதானே ஆர்.ஆர்.ஆர். சார்..

சரி. பசித்தவனுக்கு அப்பம் கூட ஆண்டவன் தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

kutipaiya சொன்னது:

“உண்மை!!!!

மெய்யாலுமே !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வானம்பாடிகள் சொன்னது:
“ தெய்வாதீனமாங்கற வார்த்தையை சொல்லாத மனுஷா உண்டா.அந்த சந்தர்ப்பமுமே கடவுள்தானே:)”

ஆமாம் ஸார் !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெங்கட் நாகராஜ் சொன்னது:
“ அழகிய கவிதை... கடவுளும் ஏதாவது ஒரு வழியில் அவரை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார் - நமக்குத் தான் புரியவில்லை.”

தெய்வம் இருப்பது எங்கே ? என்று ஒரு பாடல் இருக்கு இல்லையா, வெங்கட்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன் சொன்னது:
“தெய்வாதீனமாங்கற வார்த்தையை சொல்லாத மனுஷா உண்டா.அந்த சந்தர்ப்பமுமே கடவுள்தானே:)

நன்றி ஸார்! அதே தான் என் உணர்வும்”

நன்றி ஸார்! அதே தான் என் உணர்வும்

வசந்தமுல்லை said...

அஹம் பிரம்மாஸ்மி!

அஹம் பிரம்மாஸ்மி!

அஹம் பிரம்மாஸ்மி!

vasan said...

Dear R.R.R,
ம‌ர‌ம் ச‌ரியான‌ இல‌க்கை அடைந்த‌தா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திரு வாசனுக்கு,
அடைந்தது!

பத்மநாபன் said...

அருமையான பதிவு...அவனின்றி அணுவில்லை..சிறு அணுவில் தொடங்கி, அண்டம் பேரண்டம் முழுவதும் அவன் ஆட்சிதான்...உருவம் கொண்டு நோக்கி எங்கே எங்கே என்று தேடி ஏமாற்றம் கொள்வதை விட , அருவமாக எங்கும் நிரம்பியுள்ளான் என மன மாற்றம் கொண்டு நம்பினால் என்றும் சுகம்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பத்மநாபன் : அருமையான பதிவு...அவனின்றி அணுவில்லை..சிறு அணுவில் தொடங்கி, அண்டம் பேரண்டம் முழுவதும் அவன் ஆட்சிதான்...உருவம் கொண்டு நோக்கி எங்கே எங்கே என்று தேடி ஏமாற்றம் கொள்வதை விட , அருவமாக எங்கும் நிரம்பியுள்ளான் என மன மாற்றம் கொண்டு நம்பினால் என்றும் சுகம்....
நான் : சூப்பர்!!

அப்பாதுரை said...

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.. இங்கே முக்கியம் நம்பிக்கை தானே தவிர நம்பிக்கையின் இலக்கல்ல - அல்லவா?
நயமான கவிதை.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

அறிவு பூர்வமான கவிதை ! ரசித்தேன்.