நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Saturday, September 25, 2010
வளிக்கு ஒரு வந்தனம்!
மரங்களின் அசைவை,
காற்று தான்
தீர்மானிக்கிறது,
என்றான் மா.சே.துங்.
மரங்களின் அசைவை,
மட்டுமல்ல..
மனிதர்களின் அசைவையும்,
ப்ராணனாக,
அபாணனாக..
உபாணனாக...
காற்று தான்,
தீர்மானிக்கிறது.
இனிமையாய்,
அது,
நம்மைத்
தீண்டும் போது
தென்றல்...
புரட்டிப் போடும்
போது புயல்..
கவர்ச்சிகரமான
பெயரில்
அலைக்கழிக்கும் போது,
அதன் பெயர்,
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
வளியே,
உன்னை,
வணங்குகிறேன்..
என்னை
இது வரை,
வாழ வைத்ததிற்கு..
மட்டுமல்ல...
இனி,
வாழ வைப்பதற்க்கும் !!!!!
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
வளியை விளித்து,களி தரும் கவிதையை,உளி கொண்டு வடித்து விட்டீர் சிலையாய் மனத்தில்!
நன்று நன்று ..
மோகன்ஜி சார் பலே
ஆரண்யநிவாஸின் ஆக்சிஜன் கவிதை!
நன்றாக இருந்தது.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
வேற ‘வளியே’ இல்லை..
காற்றைத் தவிர்க்க யாரால் இயலும்..
அருமை.
வளி பற்றிய தங்கள் கவிதையைப் படித்ததும், என் உடம்பு வலியெல்லாம் காற்றினில் பறந்து போனது போல இதமாக உள்ளது. நன்றி.
மோகன்ஜி சொன்னது:
“வளியை விளித்து,களி தரும் கவிதையை,உளி கொண்டு வடித்து விட்டீர் சிலையாய் மனத்தில்!”
நான்: பின்னிட்டீங்க..மோகன்ஜி
பத்மா :” நன்று நன்று ..
மோகன்ஜி சார் பலே “
நான் : ரொம்ப தேங்க்ஸ்!
உயிர் வளிக்கு வலிக்காத ஒரு உயிரோட்டமுள்ள கவிதை..படித்துவிட்டுப் பாராட்டாமல் போனால் மனதில் தென்றல் வீசாது. புயல் தானே வீசும்.
RVS : " ஆரண்யநிவாஸின் ஆக்சிஜன் கவிதை!
நன்றாக இருந்தது."
நான்: ஆக்சிஜன் கவிதையா..அட..!!!
ரிஷபன் : “வேற ‘வளியே’ இல்லை..
காற்றைத் தவிர்க்க யாரால் இயலும்..
அருமை.”
நான் : நன்றி!!
வை. கோ.: “வளி பற்றிய தங்கள் கவிதையைப் படித்ததும், என் உடம்பு வலியெல்லாம் காற்றினில் பறந்து போனது போல இதமாக உள்ளது. நன்றி.”
நான் : கவிதைப் படித்ததால் வலி பறந்து போச்சா?
எல்லாம் மனப் ’பிராந்தி’ தான்!
ஆதிரா : “உயிர் வளிக்கு வலிக்காத ஒரு உயிரோட்டமுள்ள கவிதை..படித்துவிட்டுப் பாராட்டாமல் போனால் மனதில் தென்றல் வீசாது. புயல் தானே வீசும்”
நான் : ஆம்..புயல் தானே வீசும்!
மிக்க நன்றி ஆதிரா..தங்கள் முதல் வருகைக்கு!
வாயு இல்லாமல் ஏது வாழ்க்கை. அதுவும் அவஸ்தைப் படுபவர்களுக்குத் தெரியும் ஆக்ஸிஜனின் அருமை.
உங்கள் கவிதை எனக்குப் புதிய தென்றலாக வருகிறது. மிகுந்த நன்றி ஸ்ரீ.ஆர்.ஆர்.ஆர்.
காற்று வழியே அனுப்புகின்றேன் என் பாராட்டுக்களை.
பிறந்தவுடன் தூய்பதும், நெடுஞ்துயிலில் இறுதியாய் விலகுவதும், இடையே இழுபட்டுக் கொண்டிருப்பதுவும் அஃதன்றி வேறில்லை. (பஞ்ச பூதங்களில் இன்னும் யாருக்கும் சொந்தமாகாதது)
வல்லி சிம்ஹன்:”வாயு இல்லாமல் ஏது வாழ்க்கை. அதுவும் அவஸ்தைப் படுபவர்களுக்குத் தெரியும் ஆக்ஸிஜனின் அருமை.
உங்கள் கவிதை எனக்குப் புதிய தென்றலாக வருகிறது.”
நான் : கையில் சுக்கு வைத்துக் கொள்ளுங்கள்..
சுப்ரமணியருக்குப் பயப்படாத வாயு,
சுக்குக்குப் பயப்படும் !
ஜனா :”காற்று வழியே அனுப்புகின்றேன் என் பாராட்டுக்களை.”
நான் : பெற்றுக் கொண்டேன்!
வாசன்:”பிறந்தவுடன் துய்ப்பதும், நெடுந்துயிலில் இறுதியாய் விலகுவதும், இடையே இழுபட்டுக் கொண்டிருப்பதுவும் அஃதன்றி வேறில்லை. (பஞ்ச பூதங்களில் இன்னும் யாருக்கும் சொந்தமாகாதது)
நான் : அண்ணே, உங்க ஊர்ல ஆக்சிஜன் பார்லர்
இல்லீங்களா?
காற்றின் கானம் அருமை...பேச்சிலிருந்து, மூச்சு வரை நமக்கு வளியின்றி வழியில்லை.....
பத்மநாபன் :
காற்றின் கானம் அருமை...பேச்சிலிருந்து, மூச்சு வரை நமக்கு வளியின்றி வழியில்லை....
RR :
ஆஹா.. வளியின்றி வழியில்லை..என்ன ஒரு அருமையான வார்த்தைப் ப்ரயோகம், மிஸ்டர் பத்து!
Post a Comment