Tuesday, September 7, 2010

யாம் பெற்ற இன்பம் ........... ஸார்..மேடம்...
ஒரு நிமிஷம் ப்ளீஸ்..
உங்கள் கையில் நாற்பது ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்யலாம் அதை வைத்து?

ஒரு மசால் தோசை ஆர்டர் பண்ணலாம். அதன் தாக்கம் சில மணித்துளிகள்!

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் போய் பெரிய கோவில் பார்த்து விட்டு ஒரு இரண்டு மணி நேரத்தில் திருச்சி திரும்பலாம்.

அதன் தாக்கம் கொஞ்ச நாட்கள் !!

நான் நாற்பது ரூபாய் கொடுத்து இந்த புஸ்தகம் வாங்கினேன். வாவ்...
என்ன ஒரு கருத்துக் களஞ்சியம்!!

இதன் தாக்கம் ரொம்ப நாள் இருக்கும் !!!

இதற்கு தலைமைப் புரவலர் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார். குறிஞ்சிப் பாடியிலிருந்து
வெளி வருகிறது. மொழியாக்கக் காலாண்டிதழ்.
ஆசிரியர் குறிஞ்சி வேலன்.
என்ன ஒரு வருத்தம் என்றால் இதற்கு அவ்வளவாய் patronage இல்லையாம். என்ன கொடுமை சரவணா இது?
புத்தகத்தின் முதல் பக்கமே கன ஜோராய்.... ......
" .......இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் தலையாய இடம் ஒரு தமிழனுக்குத் தான். ஆர்.கே. நாராயணின் படைப்பு உலகம் கடலளவு...ஏழு கடலளவு. இவரது மால்குடி ஒரு தனி உலகம். அதில் நீங்களும் உண்டு.நானும் உண்டு. அதோ இருக்கிறாரே அவரும் உண்டு. சிந்தனையிலே செம்மை உண்டானால் சொல்லிலே செம்மை இருக்கும் என்பார்களே.அதைப் போல வாழ்க்கையின் மிக உன்னதமான நிகழ்ச்சிகளை எல்லாம் மிக அற்புதமாகப் படமெடுத்து " பாமரனுக்கும் புரிய வேண்டும் கவிதை" என்று சொன்ன பாரதியின் வழியிலே மிக எளிமையான ஆங்கிலத்திலே எழுதி இருப்பது சிலாகித்துப் பேசத் தக்கது.
.......... ராஜ்ஜா "

NATIONAL BOOK TRUST போல ஒரு ரிச்சான லே அவுட். உள்ளே புதையல், உண்மையிலேயே!!!
சென்றிடுவீர் எட்டு திக்கும் என்று பாடினானே அவன் இன்று இருந்தால் மிகவும் சந்தோஷப் படுவான்.

குஷ்வந்த் சிங் தெரியும்? எப்படி எழுதுவார்
என்பதும் தெரியும். விஷ்ணு பாதம் என்கிற ஒரு குணச் சித்திரக் கதை எழுதியிருக்கிறார். படித்து முடித்தவுடன் பிரமிப்பு என்னுள்! தமிழில் ரா.ரகு என்பவரின் மொழிபெயர்ப்பில் அருமை !!
கவினுறு கவிதைகளும் உண்டு. 'மத்திய தரைக் கடல் குட்டித் தூக்கம்' என்ற தலைப்பிட்ட கவிதை மனதை கொள்ளைக் கொண்டது.
இதன் அடுத்த இதழ் ஸ்கேண்டி நேவியன் இலக்கியச் சிறப்பிதழாம்! பலே !!
திரு 'இமயவன்' என்ற நம் இலக்கிய நண்பரின் அனுபவம் இது.


Subject: THISAI ETTUM EXCELLS
To: thisaiettum@yahoo.co.in
Date: Thursday, 28 January, 2010, 10:06 AM

Excellent firms dont believe in Excellence...
...Only in constant improvement and constant change
-Tom Peter

Dear Sir,

You have a rupee and I have one.We exchange it with each other.We still have a rupee each.This is transaction.
I have an idea and you have an idea,we exchange the idea between us.Now both of us have two ideas.This is transformation.
On this basis THISAI ETTUM is evolving transactional oppurtunities into transformational opportunities through translations.
Now we are blessed with numerous literary thoughts of various languages because of the valuable twenty five measured steps of THISAI ETTUM..
Twentyfifth issue of Thisai Ettum is Hundred percent memorable one.
The novel idea of Introduction of supplementary issue is highly appreciable.
When THISAI ETTUM is honoring the great poet who gave us this title to this literary world why not we honor
Sri Kurunjivelan and his team who gave us THISAI ETTUM to our Tami Literary world?
I was geratly impressed by the exemplary translation of Dr.P. Raja which is in perfect matching of the great poet.
From the first to the last I have enjoyed all the pages of THISAI ETTUM.
May God bless everyone connected with this publication and I pay my Obesiance to the THISAI ETTUM team.

Lovingly yours,
S.RAVI( Imayavan)

என் குறிப்பு
*************
இது விளம்பரமல்ல. என் சுஹானுபவத்தை என் பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே!!
பிரயாணத்திலும் இனிமையான,
பிற மொழி இலக்கியம் படிப்போம் !
பேணி பொக்கிஷமாய் அதை காப்போம்!!
பிரிய நண்பர்க்கும் பரிசளிப்போம் !!!
அது சரி, வெந்ததைத் தின்று விதி வந்தால் மாளும் வாழ்வா நம்முடையது?

என்றென்றும்,
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

12 comments:

பத்மா said...

பகிர்வுக்கு நன்றி சார் ..
படிக்க ஆவலாய் உள்ளது

Muniappan Pakkangal said...

Nice info Aaranyanivas.

Chitra said...

படித்து முடித்தவுடன் பிரமிப்பு என்னுள்! தமிழில் ரா.ரகு என்பவரின் மொழிபெயர்ப்பில் அருமை !!


......நீங்கள் ரசித்து எழுதி இருப்பதும் தெரிகிறதே.....:-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கள் கூற்று உணமை, சொல்லிய விதம் மென்மை, சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் அருமை.

vasu balaji said...

பகிர்வுக்கு நன்றி சார்:)

பத்மநாபன் said...

நல்ல புத்தகத்திற்கு நல்ல அறிமுகம் .

//ஆர்.கே. நாராயணின் படைப்பு உலகம் கடலளவு...ஏழு கடலளவு. // தெவிட்டாத , மிரள வைக்காத ஆங்கிலம் என்றால் அது ஆர். கே. என் அவர்களது தான்.

நன்றிகள் சார்.

மோகன்ஜி said...

நன்றாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள். "நம்ம நாட்டிலே கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலாக்கள் பலவும்" பதிவுக்கு நன்றி.

ரிஷபன் said...

திசை எட்டும் மொழிபெயர்ப்புக்காகவே வெளியாகும் நல்ல இதழ். சிறப்பான அறிமுகம்.

Anonymous said...

நன்றி ஆர்.ஆர்.ஆர். சார்... படித்து விடலாம்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பத்மா மேடம்,
முனியப்பன் சார்,
சித்ரா மேடம்,
என்னருமை வைகோ,
வானம்பாடிகள்,
பத்மனாபன்,
மோகன் ஜி,
ரிஷபன்,
ராதை மேடம்,
தங்களின் மேலான வருகைக்கு நன்றி!
’திசை எட்டும்’ இதழுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
'THISAI ETTUM'
LITERARY QUARTERLY FOR TRANSLATION,
EDITOR: MR KURINJIVELAN
6, PILLAIYAR KOIL STREET,
MEENAKSHIPETTAI,
KURINJIPADI-607 302.
PH.:0414 2-258314/258012
CELL:94430 43583.
Email:thisaiettum@yahoo.co.in

vasan said...

//அது சரி, வெந்ததைத் தின்று விதி வந்தால் மாளும் வாழ்வா நம்முடையது?//
நாட்டு ந‌ட‌ப்புக‌ள் வ‌யிரெரிய‌ச் செய்தாலும்,'வெந்த‌ய‌த்தை' விழுங்கிட்டு, வேற‌ சோளி பாக்கிற‌வ‌ர்க‌ள் அல்ல‌வா நாம். 'திசை எட்டும்' த‌ங்க‌ள் ப‌திவுக்குப் பின் எட்டு திசையும் எட்டட்டும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வணக்கம் வாசன் ஸார்,
தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!!