நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Saturday, March 6, 2010
யானையால் ஓட முடியுமா?
(ஆராய்ச்சிக் கட்டுரை)
யானையால் ஓட முடியுமா, முடியாதா என்கிற இந்த கேள்விக்குப் பதில் இரண்டு தான். ஒன்று முடியும். இரண்டு முடியாது. ஆனால் தத்துவ ரீதியாய் சற்று 'ப்ராக்டிகலாக'ச் கூற வேண்டுமானால், சற்று அவகாசம் வேண்டும்.
மிகவும் பிரபல வெடர்னரி டாக்டர் ஸர். சாமுவேல் சன் கூறுகிறார் " யானை முக்கியமான சமயங்களில் மட்டுமே தன் ஓட்டத்தைப் பயன்படுத்தும். ஆண் யானைகளை விட பெண் யானைகள் தான் வேகமாக ஓடும்"
யானை ஆபத்து,பயம் போன்ற உணர்ச்சிகள் வந்தால் வேகமாக ஓடும். இரையைத் தேடி யானை ஒரு போதும் ஓடியதே கிடையாதாம். கூட்டம்,கூட்டமாய் மெதுவாய் நடந்து தான் செல்லுமாம்!
தண்ணீர் குடிக்கும் போது, அவை ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லும். குட்டிகளும் அவற்றைத் தொடர்ந்து வரும். குட்டிகளுடன் யானை நிற்கும் அழகே தனி!
யானை பொதுவாக கால்களால் தான் ஓடும் என்கிறார் ஏ.டபிள்யூ. மெகல்லன். முன்னங்கால்களை விட, பின்னங்கால்களால் தான் வேகமாக ஓடும். ஓடும் போது தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டே ஓடும். பெண் யானைகளை விட ஆண் யானைகள் தான் தும்பிக்கையை ஓடும் போது பயன்படுத்தும்!
யானையால் சுற்றி,சுற்றி ஓட முடியாது. நேராகத் தான் ஓட முடியும். ஒரு தடவை, முதுமலைக் காட்டில் ஒரு யானையிடம் மாட்டிக் கொண்ட பிரபல எழுத்தாளரும், ஃபோட்டோ க்ராபருமான பிலோ இருதயநாத் சுற்றி,சுற்றி ஓடி வந்தே யானையிடமிருந்து தப்பினாராம்!
ஆதலால், யானை துரத்தி வந்தால், அதனால் ஓட முடியுமா,முடியாதா என்று ஆராய்ச்சியெல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டாம்.சுற்றி,சுற்றி ஓடி வந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ளப் பாருங்கள்!
மலைக் கோட்டையையே, சுற்றி வந்த நமக்கு, யானை துரத்தினால், சுற்றி,சுற்றி ஓடி வருவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை !!
(என்னுரை) -
அப்போது ECONOMICS என்கிற SUBJECT அறிமுகமான புதிது. LECTURER
ரொம்பப் பிரமாதமாய் THEORY OF DIMINISHING MARGINAL UTILITY ஐ DIAGRAM போட்டு விளக்கிக் கொண்டிருந்தார்.
'அடப் பாவி மக்கா, இதைத் தான் நம்ம ஆளுங்க, அன்னிக்கே 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' ன்னு நச்சுனு சொல்லிட்டாங்களே. அதுக்குப் போய் இந்த வெள்ளைக் காரங்க இத்தனை மெனக்கெட்டு இதைக் கண்டு பிடிச்சு, நம்ம உயிரையும் வேற எடுக்கறாங்களே என்ற எரிச்சலில் விழுந்த கட்டுரை இது!)
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
// ஆதலால், யானை துரத்தி வந்தால், அதனால் ஓட முடியுமா,முடியாதா என்று ஆராய்ச்சியெல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டாம். //
ஏங்க யானை துரத்தும் போது சுத்தி சுத்தி ஓடணும் என்றால் எந்த அளவு சுற்றளவில் (diameter) சுத்தணும் சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் வசதியா இருக்குமில்ல..
// 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' ன்னு நச்சுனு சொல்லிட்டாங்களே. அதுக்குப் போய் இந்த வெள்ளைக் காரங்க இத்தனை மெனக்கெட்டு இதைக் கண்டு பிடிச்சு, நம்ம உயிரையும் வேற எடுக்கறாங்களே //
புது மொந்தையில் பழைய கள்ளு
பெண் யானைகளை விட ஆண் யானைகள் தான் தும்பிக்கையை ஓடும் போது பயன்படுத்தும்!
என் நம்பிக்கையைப் பயன்படுத்தி விட்ட ரீலா.. இல்லாட்டி நிஜமாவேதானா?!
யானை பொதுவாக கால்களால் தான் ஓடும் என்கிறார் ஏ.டபிள்யூ. மெகல்லன்.
What is this statement? Joke?
இதை அந்த யானை படித்தால் மதம் பிடித்து கால்களாலேயே மிதித்துவிடும் !
யானை பற்றிய விவரங்கள் அருமை ! இன்னும் விளக்கி இருந்தால் நலமாக இருக்கும் !
Post a Comment