எங்கள் ஆபீஸில் ஸ்ரீனிவாச கோபாலன் என்று ஒருவர் இருந்தார். ஆறு மாதங்களுக்கு முன் ரிட்டயர்டு ஆகி விட்டார். நேற்று ஆபீஸ் வந்திருந்தார். அவருடன் பேசினால் போதும், உம்மணாமூஞ்சிகளும் (நம்ம பழைய P.M.நரசிம்ம ராவ் போன்ற ஆட்களும்) கூட குலுங்க,குலுங்க சிரித்து விடுவார்கள்.
பார்க்க கச்சலாக இருப்பார்.கட்டை பிரம்மச்சாரி. நல்ல சிகப்பு.நெற்றியில் தீர்க்கமாய் ஸ்ரீசூர்ணம்.அந்த கால விகடனில் தில்லானா மோகனாம்பாள் தொடருக்கு வைத்தி என்கிற கேரக்டருக்கு கோபுலுவின் சித்திரம் போன்ற தோற்றம்!
அவரை முதன் முதலில் (இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு)எங்கள் ஆபீஸ் காண்டீனில் தான் பார்த்தேன். டிபனுக்காக Q வரிசையில் நின்று கொண்டிருந்தேன்,நான். எதித்தாற்போல் , அவர் வந்தார்.அப்போது அவர் உதிர்த்த முத்து.
" சார்..வழிய விடறீங்களா..இல்ல (சாம்பாரை) வழிய விட்டுடுவேன்"
அவர் 'ஸ்டெனோ' வாக ஜாயின் பண்ணின புதிது. அவருடைய மேனேஜருக்கும், அவருக்கும் நடந்த உரையாடல் இது.
மேனேஜர் : " whenever I am seeing you are
simply sitting?"
நம்ம ஆள் : "whenever I am sitting
you are seeing!"
மற்றொரு முறை,பொங்கல் சமயம். எல்லாரிடமும், பொங்கல் வாழ்த்துக்கள் சொன்ன அவர் மானேஜர் இவரிடம் வந்து ' wish you a happy maattu pongal' என்று கூற அதற்கு இவர் உடனே " wish you the same " என்று சட்டென்று சொல்ல அவருக்கு shame ஆகப் போய் விட்டது!
" சார்..உங்க ஆபீசில் ஸ்ரீரங்கம் சித்திரை வீதியிலிருந்து ஸ்ரீனிவாச கோபாலன் என்று ஒருவர் வேலை செய்கிறாரே, தெரியுமா என்று என்னை ஒருவர் கேட்க, ஸ்ரீரங்கம் சித்திரை வீதியிலிருந்து ஸ்ரீனிவாச கோபாலன் என்று ஒருவர் வருகிறார்.அவர் வேலை செய்கிறாரா என்று சொல்ல முடியாது என்று non commital ஆகப் பதில் சொல்லி பழி தீர்த்துக் கொண்டேன்!
எங்கள் காண்டீனில் பொங்கல் சாப்பிடுவது என்பது ஒரு பெரிய விஷயம்.அதை விட ஸ்ரீனிவாச கோபாலன் நம் எதிர்த்தாற்போல் நின்று, பேசிக்கொண்டு இருக்கும் போது நாம் பொங்கல் சாப்பிடும் போது என்பது அதை விட பெரிய விஷயம். எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுப்பது போல் கேள்வி ஒன்று கேட்டுத் தொலைத்தேன்!
நான் : " என்ன, ஸ்ரீனிவாச கோபாலன்,
வடை soft ஆ இருக்கா ?
அவர் : வடை சாப்டா(சாப்பிட்டால்) எப்படி
இருக்கும். தீர்ந்துப் போயிடும்!"
நான் க்ளார்க். அவர் எனக்கு அக்கவுண்டண்ட். என்னிடம் வேலை வாங்க அவர் 'ட்ரை' பண்ணும் போதெல்லாம், "ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் சீனியர் அக்கவுண்டண்ட் ஸ்ரீனிவாச கோபாலன் சித்தாள்களுடன் சித்து விளையாட்டுக்கள்" என்று எழுதப் போறேன் பாரு என்று மிரட்டி வைத்திருந்தேன். அப்போது அவர் வீடு கட்டிக் கொண்டிருந்த நேரம்!
நேற்று அவர் இங்கு வந்த போது மலரும் நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தோம். கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருப்பதால், இதனை என் டயரியில் பதிவு செய்து viewers வுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
இதனை பப்ளிஷ் செய்ய விருப்பம் கிடையாது. ஆத்மார்த்தமான என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே விருப்பம்.
9 comments:
அவருக்கு இந்தப் பதிவைக் காட்டவும்..
ஸ்ரீனிவாச கோபாலனைப் பற்றி போட்டு அவரை பற்றி காலையிலேயே மனதில் அசை போட வைத்துவிட்டீர்களே!!!!
அவருடன் ஒரு வருடம் வேலை செய்த அனுபவம், அவரை இன்னும் மறக்கமுடியவில்லை.
" சார்..வழிய விடறீங்களா..இல்ல (சாம்பாரை) வழிய விட்டுடுவேன்"
இது மாதிரி நான் நிறைய கேட்டு அனுபவித்து விட்டேன்.
என்ன இருந்தாலும் அவர் வேலையில் காட்டிய கடுமை, இன்று வேலையில் தப்புகள் இல்லாமல் வேலை செய்ய வைக்கிறது. அந்த காலத்தில் தந்தையர் செய்த கடுமையான பழக்க வழக்கம் போல் இருந்தாலும் பிற்காலத்தில் அது பெரிய பலன் கொடுத்தைபோல்,
அன்று ஸ்ரீனிவாச கோபாலன் கடுமையாக நடந்துக்கொண்டாலும்,
அவருடைய மெத்தட்ஸ் இன்று வேலையில் தப்புகள் இல்லாமல் செய்ய வைக்கிறது. ஹாட்ஸ் ஆப டூ ஸ்ரீனிவாச கோபாலன். நன்றிகள் பல ஸ்ரீனிவாச கோபாலனுக்கு.இதன் மூலம் நன்றிகள் தெரிவிக்க வாய்ப்பு அளித்த உங்களுக்கும் நன்றி.
சிலேடை மன்னன். எங்களுடன் பகிர்ந்து கொண்டு, எங்களையும் சிரிக்க/ரசிக்க வைத்ததற்கு நன்றி.
funny! very nice!
அழகான மலரும் நினைவுகள்.
மலரும் நினைவுகள் அடிக்கடி மலரட்டும்.
ரேகா ராகவன்.
நல்லா இருக்கு மலரும் நினைவுகள் ராமமூர்த்தி
ரிடய்ர்ட் ஆகி ஓர் ஆண்டு நிறைவு விழா கொண்டாடிய நான், மீண்டும் ஸ்ரீனிவாச கோபாலனிடம் வசமாக மாட்டிக்கொண்டது போல உணர்வு ஏற்பட்டது எனக்கு. அவருடன் எனக்கு ஏற்பட்ட இதுபோன்ற அன்றாட நிகழ்ச்சிகளைத் தொகுத்தால் தினத்தந்தியில் வந்த கன்னித்தீவு போல நீண்ண்ண்ண்ண்டு கொண்டே போகும். அவர் என்னை எப்போதும் கோல்மால்கிருஷ்ணன் என்று செல்லமாக அழைப்பார். அவர் வேலை செய்யாதது மட்டுமல்லாமல், ஓயாமல் பேசிப்பேசியே, பிறரையும் வேலை செய்ய விட மாட்டார் என்பது எனது அபிப்ராயம். ஆனால் சில சமயம் நல்ல நகைச்சுவை கருத்துக்களும் அவர் வாயால் கேட்டு மகிழ்ந்துள்ளேன் என்பதையும் மறுக்க முடியாது.
Post a Comment