
அழகாக உடை உடுத்தி,
அமைதியாக நான் இருந்தால்,
பக்கத்தில் வந்து நின்று,
பழிப்புதனைக் காட்டிடுவாள்.
மென்மைதனை இழைய விட்டு,
இனிமையாகப் பேசிடுவாள்,
இன்னல் பல வந்திடினும்,
மின்னல் என நீக்கிடுவாள்.
கண்களை சுழல விட்டு தன்,
விழிகளால் பேசிடுவாள், குறும்பு
விழிகளின் எழிலில் என்னை
விழிக்கும்படி வைத்திடுவாள்.
நான்சிரித்தால் தான் சிரித்து,
நான் அழுதால், தான் அழுவாள்.
வரப்பு உயர..நீர் உயர....
நான் உயர்ந்தால், தான் உயர்வாள்.
ஏங்க..ஏங்க ..வைத்து விட்டு,
எங்கேயோ சென்றிடுவாள்...
பார்த்தும் பாராதது போல்,
பாவையவள் நடந்திடுவாள்.
ஏட்டெழுதி....பாட்டெழுதி,
என் மனதை அதில் வடித்து,
காதலுடன் பாடுகின்றேன்,
கன்னியவள் கேட்கவில்லை !!!!!
4 comments:
முதல் ஐந்து பத்திகளைப்படித்து விட்டு, ஆஹா, நம் ராமமூர்த்தி சாருக்கு, இப்படி ஒரு அதிர்ஷ்டமா என்று ஆச்சர்யப்பட்டு பொறாமைப் பட்டு அடுத்த அடி எடுத்து வைத்தேன் ஆறாவது பத்திக்கு.
பிறகு தான் தெரிந்தது அத்தனையும் கற்பனையே ..... நம்மைப்போலவே புலம்பல் தான் என்று. பிறகு தான் என் மனமும் சற்றே சமாதானம் ஆகியது.
இருப்பினும் தன முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத விகரமாதித்தன் போல இவ்வாறு எழுதிக்கொண்டே இருக்கவும். கன்னியவள் (வேதாளம்) என்றாவது ஒரு நாள் மாட்டாமல் போகமாட்டாள்.
ஏட்டெழுதி....பாட்டெழுதி,
என் மனதை அதில் வடித்து,
காதலுடன் பாடுகின்றேன்,
கன்னியவள் கேட்கவில்லை !!!!!
...... கேட்கவில்லையோ, கேட்டும் கேட்காத மாதிரி சீண்டிக்கொண்டு இருக்கிறார்களோ?
nice one!
sariya padala ethuvume!!!!!!!
sariya padala ethuvume!!!!!!!
ஆமா.. இல்ல?!
Post a Comment