
பூஜைக்கு உகந்தது,
நாங்கள் தான்!
இறுமாப்புடன்
சொன்னது
மலர்கள்..
எங்களால் தான்
வழிபாடு
செய்கிறார்கள்..
பெருமையுடன்
பேசியது..
வில்வ,துளசி
இலைகள்...
நாங்கள்
ஆஹூதியில்
விழுந்து
உயிர்த் தியாகம்
செய்வதால்
அல்லவோ..
இறைவனுக்குப்
ப்ரீதியான..
யக்ஞயங்கள்
நடக்கின்றன..
கர்வத்துடன் சொன்னது,
சமித்துகள் (அரசு மரக் குச்சிகள்)
எல்லாவற்றையும்
கேட்டுக்கொண்டு,
நமட்டு சிரிப்பு
சிரித்துக் கொண்டிருந்தன,
வேர்கள் ....
வெளியில் தெரியாமலேயே!!!!!
6 comments:
கவிதை மனதில் வேர் ஊண்டிவிட்டது. வாழ்த்துக்கள்
back end office - அது மாதிரி தான். பின்னால் இருந்து இயக்கும் இயக்குனரை விட, நடிகர்கள் புகழ் பெறுவது போல்...
இதுதான் உலகம்...
உங்கள் கருத்து என் மனதில் நன்றாகவே வேரூன்றி விட்டது. என் மனமும் மகிழ்ச்சியில் சிரிக்கிறது வேர்கள் நிரம்பி உள்ளதால்.
அழகான கவிதை ....
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க.....
கொக்கரிப்பவர்கள் எல்லாம் ...........!!!
அருமையான கருத்து உள்ள கவிதை.
வேர்கள் அருமை..
Post a Comment