Monday, August 30, 2010

பதிவுலக நண்பர்களுக்கு.........


"ஆரண்ய நிவாஸ"த்துக்கு வருகை தரும் என் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய,
ரிஷபன், வை.கோபால கிருஷ்ணன் ஸார்,வசந்த முல்லை ரவி, சித்ராமேடம், ராகவன் நைஜீரியா,வாசன், வெங்கட் நாகராஜ், தேனம்மை மேடம், வானம்பாடிகள், பா.ராஜாராம், பூங்குன்றன், ராமலக்ஷ்மி மேடம்,
K.B.JANARTHANAN, மோகன் குமார், பத்மாமேடம்,முனவர் இரா. குணசீலன், சீதா சாம்பசிவம் மேடம், மனோ சாமினாதன் மேடம், வித்யா சுப்ரமணியம் மேடம், டாக்டர் கந்தசாமி ஸார்,டாக்டர் முனியப்பன் ஸார், ரேகா ராகவன் ஸார், ஸ்ட்ராஜன் மற்றும் நம் அனத்து தள நண்பர்களுக்கும்..

இதோ என் ஆசை...........


கண் பாவை விரிய கவினுறும் இடுகை தரும்,
என்பால் பிரியமுள்ள எழுத்துலக நண்பர்களே!
முன்போலில்லாமல் மறு மொழி நான் தரவே,
வெண்பாவில் வரவா இனி!

- அன்பன் ஆர்.ராமமூர்த்தி.

40 comments:

vasu balaji said...

ஆஹா! கேட்கணுமா என்ன:)

Chitra said...

அருமை..... ஆவலுடன் காத்து இருக்கிறோம்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

உருக்கிய நெய் மணம் கமழ, முந்திரி மணம் மூக்கைத் துளைக்க, மிளகு ஜீரகங்கள் மிதக்க,நெய்யில் ஊறியக் கருவேப்பிலை ஆங்காங்கே பளபளக்க, சுடச்சுட வெண்பொங்கல் விருந்துக்கு அழைக்கிறீர்களோ என்று பார்த்தால், வெண்பா விருந்து மட்டுமே என்று முடித்து விட்டீர்களே !

வெண்பாவாயினும், வாய்க்கு ரசித்து ருசிக்கும் படியாகவும், எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாகவும் (சுலபத்தில் புரிந்து கொள்ளும் விதமாக) இருக்க வேண்டும்.

வெண்பாவில் வர நீங்கள் ஆசைப்படலாம்.

அரைகுறை ஆசாமியாகிய எனக்கு அது புரிய வேண்டாமா?

அப்படியே ஏதோ புரிந்தும் புரியாமலும் இருந்தாலும், நான் தங்களுக்கு வெண்பாவிலேயே பதில் எழுத வேண்டும் என்று அடுத்த கோரிக்கை (அன்புக்கட்டளை) வைத்து விட்டீர்களானால், தருமி போன்ற நான் சொக்கனத்தேடி எங்கு செல்வேன்?

Ahamed irshad said...

Vaanga..

ப.கந்தசாமி said...

செய்யுங்க, நண்பரே. வெண்பாக்கள்தான் நான் படித்து இன்புற்ற பாவடிவம். புதுக்கவிதைகளுக்குள் புகவேண்டாம்.

வசந்தமுல்லை said...

வெண்பாவில் வரவேற்க நாங்கள்
காத்துக்கொண்டிருக்கிறோம் !

வருக வருக எங்க வெண்பா மன்னா
வருக வருக சிறுக்கதை மன்னா
வருக வருக கவிதை மன்னா
வருக வருக எங்க அருமை நண்பா
வருக வருக வருக வருகவே!!!!!!!!

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் வெண்பா எங்களுக்கு உற்சாகமூட்டும்
வாருங்கள் காத்திருக்கிறோம்.

வெங்கட்

vasan said...

வெண்பாவில் வாங்க‌,
நாங்க‌!ம‌ல‌ங்க‌வா? ம‌ய‌ங்க‌வா,
ம்.. பாக்க‌லாம்.
எவ்வ‌ள‌வு தாங்கிருக்கோம்!
ப‌டிச்சுப் ப‌த்துருவோம்..

Thenammai Lakshmanan said...

நிச்சயமா ஆர் ஆர் ஆர்..:))

பத்மநாபன் said...

சீரோடும், சிறப்போடும் வாருங்கள்....ரசிக்க தயாராக இருக்கிறோம்...தல யின் வெண்பாவில் தளை தட்டாது எனும் நம்பிக்கை இருக்கிறது.

ஆரம்ப வெண்பாவே அசத்தல்...தொடரட்டும் வெண்பாவின் அணி வகுப்பு.

கே. பி. ஜனா... said...

பிரியமுடன் வரவேற்கிறோம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வானம்பாடிகளுக்கு....
ஆஹா! கேட்கணுமா என்ன:)

ரொம்ப சந்தோஷம் ஸார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ரா மேடத்துக்கு...

அருமை..... ஆவலுடன் காத்து இருக்கிறோம்.

நன்றி மேடம் !

ரிஷபன் said...

கற்பனைக்கும் எட்டாத கலைகளின் மன்னா உன்
விற்பனையில் வெண்பா எனில் வரவேற்பு - உடன்
களிப்பாய் காத்திருக்கும் கவிதை நேசர்களும்
அளிப்போம் மாபெரும் கரம்!

(மன்னிக்க.. ஆர்வக் கோளாறு)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திரு வை. கோபால கிருஷ்ணன் ஸாருக்கு....
உங்களுக்கான என் பதில் :
வெண்பாலிட்ட அன்ன அடிசிலில் கொஞ்சம்
நறு நெய் பெய்து முந்திரியும் மேல் தூவி,
குறு மிளகைக் கூட சேர்த்தாலும் ஒரு
வெண்பாவிற்கீடாமோ அது?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அஹமது இர்ஷாத் சொன்னது:
Vaanga..

Thank you!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Dr P Kandaswamy ஸார் சொன்னது:
செய்யுங்க, நண்பரே. வெண்பாக்கள்தான் நான் படித்து இன்புற்ற பாவடிவம். புதுக்கவிதைகளுக்குள் புக வேண்டாம்....

வெண்பா : நறு மணம் கமழும் இயற் பூக்கள்
புதுக்கவிதை: கலர் கலராய் காகிதப் பூக்கள்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வசந்த முல்லை சொன்னது:

வெண்பாவில் வரவேற்க நாங்கள்
காத்துக்கொண்டிருக்கிறோம் !

வருக வருக எங்கள் வெண்பா மன்னா
வருக வருக சிறுகதை மன்னா
வருக வருக கவிதை மன்னா
வருக வருக எங்க அருமை நண்பா
வருக வருக வருக வருகவே !!!!!!!!!

உங்கள் அன்பிற்கு நன்றி!
நீங்கள் எதிபார்க்கும் அளவிற்கு திறமை உள்ளவன் நான் அல்ல!!!

இராகவன் நைஜிரியா said...

உங்கள் வெண்பாக்களை படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

RVS said...

ஆர் ஆர் ஆர் சார்
வெண்பா படித்து இன்புற நாங்க ரெடி
ப்ளீஸ் ஸ்டார்ட்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெங்கட் நாகராஜ் சொன்னது:
“....உங்கள் வெண்பா எங்களுக்கு உற்சாகமூட்டும்
வாருங்கள் காத்திருக்கிறோம்....”


மிக்க நன்றி வெங்கட்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாசன் சொன்னது:
“....வெண்பாவில் வாங்க‌,
நாங்க‌!ம‌ல‌ங்க‌வா? ம‌ய‌ங்க‌வா,
ம்.. பாக்க‌லாம்.
எவ்வ‌ள‌வு தாங்கிருக்கோம்!
ப‌டிச்சுப் பாத்துருவோம்...”
வாசன் சார் நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தேனம்மை சொன்னது:
“....நிச்சயமா ஆர் ஆர் ஆர்..:))”

தேனம்மை மேடம் ரொம்ப தேங்க்ஸ்!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

vaanga vaanga

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் பதில் வெண்பா
செவிக்குணவூட்டுவதாகச்
சிறப்பாகவே இருந்தது.
இருப்பினும் ......... !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பத்மநாபன் சொன்னது:
“....சீரோடும், சிறப்போடும் வாருங்கள்....ரசிக்க தயாராக இருக்கிறோம்...தல யின் வெண்பாவில் தளை தட்டாது எனும் நம்பிக்கை இருக்கிறது.

ஆரம்ப வெண்பாவே அசத்தல்...தொடரட்டும் வெண்பாவின் அணி வகுப்பு...”

நன்றி பத்து!

அன்புடன் அருணா said...

வாங்க!வாங்க!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை..... காத்திருக்கிறோம்...

மனோ சாமிநாதன் said...

வெண்பொங்கலின் சுவை மிக நன்று! வெண்பாவின் சுவையோ அதனினும் நன்று!

கடந்த காலத்தில் புலவர்கள் வெண்பாவிலேயே தர்க்கம் செய்து கொள்ளுவார்களாம்.
திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிலில்

“தருமி போன்ற நான் சொக்கனத்தேடி எங்கு செல்வேன்? “ என்ற வரி அற்புதம்!!
தொடரவிருக்கும் உங்களின் வெண்பா பதில்களை ரசிக்கக் காத்திருக்கிறேன்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

KB JANARTHANAN SAID:
பிரியமுடன் வரவேற்கிறோம்.

ரொம்ப தேங்க்ஸ் ஜனா!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன் சொன்னது:

கற்பனைக்கும் எட்டாத கலைகளின் மன்னா உன்
விற்பனையில் வெண்பா எனில் வரவேற்பு - உடன்
களிப்பாய் காத்திருக்கும் கவிதை நேசர்களும்
அளிப்போம் மாபெரும் கரம்!

வசந்த முல்லைக்கு சொன்னது தான் தங்களுக்கும்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இராகவன் நைஜீரியா சொன்னது:
“...உங்கள் வெண்பாக்களை படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.......”
THANKS RAGHAVAN!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

RVS SAID:
ஆர் ஆர் ஆர் சார்
வெண்பா படித்து இன்புற நாங்க ரெடி
ப்ளீஸ் ஸ்டார்ட்..

ஸ்டார்ட்டிட்டேன்!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பாவி தங்கமணி said:

vaanga vaanga

vanthen ! vanthen !!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அன்புடன் அருணா சொன்னது:
வாங்க!வாங்க!

மிக்க நன்றி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது:
அருமை..... காத்திருக்கிறோம்..

THAN Q

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மனோ சாமினாதன் said:

வெண்பொங்கலின் சுவை மிக நன்று! வெண்பாவின் சுவையோ அதனினும் நன்று!

கடந்த காலத்தில் புலவர்கள் வெண்பாவிலேயே தர்க்கம் செய்து கொள்ளுவார்களாம்.
திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிலில்

“தருமி போன்ற நான் சொக்கனத்தேடி எங்கு செல்வேன்? “ என்ற வரி அற்புதம்!!
தொடரவிருக்கும் உங்களின் வெண்பா பதில்களை ரசிக்கக் காத்திருக்கிறேன்!!

மிக்க நன்றி !!

Muttuvancheri S.Natarajan said...

வெண்பாவில் வந்தாலும்
வேறெதிலே வந்தாலும்
நண்பா உனைப் படிக்க நடராஜன் நான் வருவேன்
இருக்கின்ற சரக்கெல்லாம் எடுத்து விடும்!
எதையும் மறைக்காமல் இதயத்தை திறந்து விடும்
அன்புடன்
முட்டுவாஞ்சேரி நடராஜன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆழ்வான் வில்லியும்,அடுத்து சாத்தனும்,
அடித்த தாக்கத்தில்,கொஞ்சம்
தள்ளி, தடுமாறி நின்ற மரபினித்
துள்ளிக் குதித்து ஆடும் வலைப்பூவில்!!

மிக்க நன்றி, நடராஜன் அவர்களே!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

வெண்பாவா ... பலே..பலே...தொடங்குங்கள் உங்கள் மகத்தான சேவையை....