நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Thursday, December 31, 2009
எங்கிருந்தோ வந்து.............
பார்த்து,பார்த்து,
நம்பிக்கையான..
'நர்சரிகளி'ல் வாங்கி,
வேப்பம்புண்ணாக்கு,
'ஆர்கானிக் உரம்,
ஜீவாமிருதக் கரைசல்,
ஆட்டுப் புழுக்கை...
என்று
போஷாக்குக் கொடுத்து,
வளர்க்கப் பட்ட
ஒட்டு மரக் கன்றுகள்
எல்லாம்...
'சோமாலியா ' நாட்டு,
சோனி குழந்தைகள்,
போல்,
சுருங்கி விழ,
எங்கிருந்தோ வந்த
பறவையின்
எச்சத்தில்
விழுந்த விதை
ஒன்று,
விறுவிறுவென்று...
வளர்ந்து,,,
விருட்சமாய்
நின்றது !!
(இந்த கவிதை யூத்ஃபுல் விகடன் டிசம்பர் 2009 மின்னிதழில் வெளியானது.... )
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான,அனுபவம் வாய்ந்த கவிதை, செடிகள் வளர்த்த அனுபவம் சொல்கிறது!!!!!!!!
அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் 2010!!!!!
அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் 2010!!!!!
Post a Comment