
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாங்கள்
புதிது புதிதாக கட்டடங்கள் கட்டுவோம்
சாலைகள் அமைப்போம்
கதவே இல்லாத வீடுகள் அமைப்போம்
அன்பான மனிதர்களாய்
அதில் குடியேறுவோம்...
நம் பிரபஞ்சத்தின்
அனைத்து உயிர்களும்
நேசமாய் ஒன்று சேர்ந்து
ஒரே தேசத்தினை உருவாக்குவோம்.
அங்கு ராணுவம் இல்லை
பூட்டுகள் இல்லை
போலீஸ் இல்லை
திருடன் இல்லை
எதிரியும் இல்லை
சக மனிதன் என்ற
நிலை மாற்றி
'சகஹிருதயன்' என அன்பு செய்வோம் !
பணம் என்ற பகையை வழக்கொழித்து
மாறாக,
அன்பினைப் பண்டமாற்று செய்வோம்!
எங்களில் பேதமில்லை,
நிறமுமில்லை..
சாதியில்லை..
சண்டையில்லை !
ஆண்டையில்லை..
அடிமையில்லை..
ஏழை, பணக்காரன் என்ற நிலையும்
இல்லை.. இல்லை..இல்லையே !
அனைத்துமே
சம ஜீவன்கள்
என்கிற சகாப்தத்தினை
உருவாக்கி
வரக்கூடிய
இறை தூதனை
வரவேற்கக் காத்திருப்போம்!
ஏழைகளுக்கு மட்டுமே
அனுக்கமான அந்த
ஆண்டவரை
எம் எல்லோர்க்குள்ளும்
அமர்த்தி வைத்து
அழகு பார்ப்போம்..
இனி ஒரு விதி செய்து
எந்நாளும் காப்போம்!
இனி அந்த
தேவகுமாரன்
மாட்டுத் தொழுவத்தில்
பிறக்க வேண்டாம்..,
நம் எல்லோர் இதயங்களிலும்
பிறக்கவேண்டுமென்று
மனமுருகி ஜெபம் செய்வோம்
மாதா கோவில்
மணியோசை ஊடே
'சர்வலோகாதிப நமஸ்காரம்'
என்ற பாடலின்
சுகமான வரிகள்
காற்றிலே கலந்து
எம் காதுகளை
வருடட்டும்
அந்த
அற்புத சுகமளிப்பவரை
ஆனந்தமாய்
வரவேற்போம்
நாம் எல்லோருமே.
3 comments:
இனி அந்த
தேவகுமாரன்
மாட்டுத் தொழுவத்தில்
பிறக்க வேண்டாம்..,
நம் எல்லோர் இதயங்களிலும்
பிறக்கவேண்டுமென்று
மனமுருகி ஜெபம் செய்வோம்
மாதா கோவில்
மணியோசை ஊடே
'சர்வலோகாதிப நமஸ்காரம்'
என்ற பாடலின்
சுகமான வரிகள்
காற்றிலே கலந்து
எம் காதுகளை
வருடட்டும்
அந்த
அற்புத சுகமளிப்பவரை
ஆனந்தமாய்
வரவேற்போம்.
அந்த இறைத் தூதரை வரவேற்றவிதம் மிகவும் அருமை!!!!!!!!!!
உங்க மனசு பிடிச்சிருக்கு.. சகோதரத்துவம் இருந்தா அப்புறம் ஏன் சண்டை சச்சரவு எல்லாம்.. மனசு ஒண்ணாகிட்டா என் கடவுள் உன் கடவுள் பேதம் வரப் போவதில்லை
அருமையான கவிதை.
சண்டை, சச்சரவு, பொறாமை இல்லாத உலகம் எப்படி இருக்கும்...
அண்ணே, கதை, கவிதை, கட்டுரை என்று கலக்கறீங்க..
சிம்பிளி சூப்பர்.
Post a Comment