Thursday, December 10, 2009

போன்சாய் மரங்கள்!

ஒரு 'எலக்ட்ரிகல் எஞ்சினீய'ரும்..
'ஸிஸ்டம் அனலிஸ்ட்'டும்..
வாழ்க்கைப் பாதையில்,
இணைய..
வளங்கள் பெருகி...
வாழ்வினில் வசந்தம்!
ஹோண்டா சிவிக்,
'ஷகரான' இடத்தில்..
'டபிள் பெட் ரூம் லக்ஸுரி ஃப்ளாட்'..
ஹோம் தியெட்டர்..ஏ.சி..
வாஷிங் மெஷின்...
ஸிஸ்டம், மாடுலர் கிச்சன்..
வாக்வம் க்ளீனர்...
என்று,
வீட்டை நிரப்பிக்
கொள்ள,
(அவர்களின் செல்லங்கள்...
ப்ரீகேஜி ஒன்றும்..
நாலாங்க்ளாஸ் ஒன்றும்..
பூட்டிய வீட்டில்..
தினந்தோறும்..
பரிதாபமாகக்
காத்துக்கொண்டிருக்க..)
மனசு
வெறுமையாகி,
விட்டது !!!

7 comments:

Chitra said...

தமிழிஷில் கவிதை குட்டு, நச் னு இருக்கு.

ரிஷபன் said...

கவிதை அதன் கருத்தில் போன்சாய் இல்ல.. விருட்சம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி சித்ராவுக்கும், ரிஷபனுக்கும்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டில்
இருவருமே வேலைக்குப் போகிறவர்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆயா
ஏற்பாடு செய்தார்கள். 'இரவல் உறவி'ல் பெற்றோர்களின் அந்த பாசத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன? கடைசியில் அவர்களின்
இரு குழந்தைகளுமே முரடாகப்
போய் விட்டார்கள்.

Chitra said...

குழந்தைகளின் மேல் கரிசனம் உள்ள உங்களுக்கு, இது கவலையாய் இருக்கிறது. ஆனால், கவலை பட வேண்டியவர்கள்......?????

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கண்களை விற்று சித்திரம் வாங்கும் பேதைகள்!!

இராகவன் நைஜிரியா said...

பணம் ... பணம்... இதற்காக எவ்வளவு இழக்கின்றார்கள். இழப்பு அவர்களுக்கு மட்டுமல்ல... வளரும் இளைய தலைமுறைக்கு என்று ஏன் புரியவில்லை.

கூட்டு குடும்பம் என்ற விஷயமும் காணாமல் போய்க் கொண்டு இருக்கின்றது..

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி ராகவன்! உங்களுடைய விமர்சனத்துக்கு! இதெல்லாம் தான் எனக்கு
உற்சாக டானிக்! உங்கள் எல்லாருடைய அன்பும், ஆதரவும் என்னுடைய 'ப்ளாக்' என்ற ப்ளாட் பாரத்தில்' உத்வேகத்துடன் என்னை மேலும்..மேலும் எழுதத் தூண்டும்! நன்றி! பத்திரிகைகளில் எழுதி,எழுதியவை எல்லாம் திரும்பி வந்த வேதனையில் நான் எழுதிய கவிதை இதோ!

என்னுடைய
எழுத்துக்கள்
போரில்
வீர மரணம்
அடையும்,
போர்க் குதிரைகள்
அல்ல!
என்னிடமே
பத்திரமாய்
திரும்பி வரும்
யாகக் குதிரைகள் !!
அசுவ மேத யாகக் குதிரைகள்!!!
தொடருங்கள்....தொடர்கிறேன்.....