Saturday, December 5, 2009

இது தான் இன்று....

கூழுக்கு...
பாழுக்கும் உழைத்த...
விவசாயப்பெருங்குடிகள்,
எல்லாம்...
இன்று,
'கவர்மெண்டின்..'
கவர்ச்சிகரமான
திட்டங்களினால்,
கலர் டி.வி. பார்த்து,
ஒரு ரூபாய் அரிசியில் சமைத்து ....
வருடத்தில்..
நூறு நாட்களுக்கு
வேலை ....
என்று
சொகுசாய்...,
வீட்டினுள்,
சோம்பேறிகளாய்,
முடங்கிப் போய்
கிடக்க...
இன்னமும்,
விலை போகாத,
நம்ம ஊர்
விளை நிலங்களெல்லாம்,
ஏக்கர் கணக்கில்...
கூலிக்கு ஆள்
கிடைக்காத
ஒரே
காரணத்தினால்,
ஏக்கத்துடன் பார்த்தன
வானத்தை...!!

8 comments:

ரிஷபன் said...

கூலிக்கு ஆள்
கிடைக்காத
ஒரே
காரணத்தினால்...
கவிதைச் சவுக்கு நன்றாக சுழன்று அடித்திருக்கிறது..

கமலேஷ் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு தோழரே..
வாழ்த்துக்கள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்கள் வருகைக்கும்..'கமெண்ட்ஸ்'க்கும்
ரொம்ப நன்றி திரு ரிஷபனுக்கும்..
திரு கமலெஷ்க்கும்...

Chitra said...

இவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தாமல், சோம்பேறிகளாய் ஆக்கி வாழ்வின் நலனை படு குழிக்குள் தள்ளி விட்டது அரசியல். கவிதை அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப நன்றி..தங்கள் வருகைக்கும்...
விமர்சனத்திற்கும்....

Paleo God said...

அருமை .. ரொம்ப நாளாக என் மனதில் ஒரு சந்தேகம் இன்னும் கொஞ்ச நாளில் எல்லா கட்டிடங்களையும் இடித்துவிட்டு விவசாயம் செய்ய ஆரம்பிப்பார்களோ??
காற்றை விற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று மட்டும் என்று நினைக்கத்தோன்றுகிறது..நண்பரே..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்கள் வருகைக்கு நன்றி..பலாப் பட்டறை!
கேள்விப் பட்டதில்லையா...நீங்கள்..
காற்றையும் தான் விற்கிறார்களே ' ஆக்சிஜன்
பார்லர்' என்று...

Paleo God said...

பார்லர்.. பரவலாகமலிருந்தால் சரி..:-)