நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Saturday, October 30, 2010
வறுமையும், எருமையும்...
எருமையைக் கூட,
விரட்ட மனம்
இல்லாதவர்கள்,
எல்லாரும்,
கூட்டமாய் சேர்ந்து,
கூச்சல் போட்டார்கள்,
'வறுமையை
விரட்டுவோம்'
*
தாரை, தப்பட்டை ஒலிகள்..
காதை கிழிய வைக்கும்,
சீழ்க்கை....
படீரென்று சத்தம்
போடும் பட்டாசுகள்!
உள்ளே ஊற்றப் பட்ட
'குவார்ட்டரால்'
வெளியே
தள்ளாடியபடி...
குடி மகன்கள்....
பாடையிலிருந்து
விருட்டென்று,
எழுந்து,
எரிச்சல் தாங்க முடியாமல்
பிணம் ஒன்று
சொன்னது:
' தா, சும்மா கிட! '
*
வீட்டை விட்டு,
விரட்டப் பட்ட,
பெற்றோர்களுக்கு,
முதியோர் விடுதியில்
பரிசாரகனாக
வேலை பார்க்கும்,
மகன்
உணவு
பரிமாறினான்,
பரிவோடு!
*
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
அருமை. வாழ்த்துக்கள்
எதார்த்தம்!
நச்
வாழ்த்துக்கள்
சார்! லாஸ்ட்டு டச்சிங்கு.. மனசுல நிக்கிது.. இல்லை இல்லை தக்கிது.... ;-)
வறுமையும் எருமையும் அருமை
குடிமகனைக் கண்டதும் பிணத்திற்கும் ஏற்பட்ட ’கிக்’
பெற்றோருக்கு பரிவோடு பரிமாற முதியோர் இல்லத்தில் பரிசாரகர் உத்யோகம்;
மூன்றுமே சிந்திக்க வைக்குது!
மூன்றுமே நல்லா இருக்கு சார்.
மூன்றுமே அழகு.. அருமை.. ரசித்தேன்..
நன்றாகவுள்ளது
ரசிக்க முடிகிறது.
நல்ல கருத்துங்க.
ஆட்சிக்கு வந்தால்,'வறுமையை ஒழிப்போம்' ஐம்பது வருஷமாய், தேர்தல் நேரங்களில் கேட்டது.
ஒழிந்ததது அவர்கள் வறுமை ஏழு தலைமுறைக்கும் (1வது). எழமுடியாமல் கிட்க்கிறான் தமிழன் டாஸ்மாக்கில். அதனால், பாடையில போகும் போதாவது நிம்மதியா போக விடுங்கடா, விளங்காத பயலுகளா என்கிறது நாளைய பிணங்களைப் பார்த்து இன்றையது(2வது). தேசத்தின் நீர்/ நிலவளத்தை அழித்து விட்டு ஒரு ஊரை மட்டும் தத்து எடுத்து விழா கொண்டாடுவதைப் போலிருக்கிறது (3வது).
மூன்றும் ஏதோ விதத்தில் மனதைத் தொட்டது. பகிர்வுக்கு நன்றி சார்.
Post a Comment