" என்ன மிஸ்டர் கோபால், வீடு கட்டிகிட்டு இருக்கீங்களாமே.."
" ஹி..ஹி..யார் சொன்னது?"
" யார் சொன்னா என்ன? நீங்க சொல்லலை.."
குற்றம் சாட்டும் தொனியில் சொன்னார், வந்தவர்.
" அது வந்து..சார்.." அசடு வழிய சமாளித்தான், கோபால்.
" எவ்வளவு ஆச்சு?"
" அறுபது, எழுபதாவது ஆகும்னு நினைக்கிறேன்..."
" அடேங்கப்பா...பணத்துக்கு என்ன பண்ணினீங்க.. லோன் போட்டிருப்பீங்க...எல்.ஐ.சி.யா..?"
அவன் சொல்வதற்குள் அவரே முந்திக் கொண்டார்.
" எதுவா இருந்தா என்ன..பாதி சம்பளம் 'லோனு'க்கே பிடிச்சுடுவாங்க..அப்படித்தானே..!
காலம் தள்ளறது கயத்தில நடக்கிற சர்க்கஸ் காரன் மாதிரி இருக்கும்.."
அவனைப் பேசவே விடவில்லை.
" அதுக்கென்ன பண்றது? கூழுக்கும் ஆசை..மீசைக்கும் ஆசைன்னா முடியுமா? அது சரி..யாராவது தெரிஞ்ச 'காண்ட்ராக்டு' காரங்க இருக்காங்களா?"
" இரும்பே டன் பன்னிரெண்டாயிரம் ரூபாய் விக்குதே! கொத்தனார் கூலி...அது..இதுன்னு ஏகத்துக்கு இழுக்குமே..."
" கஷ்டம் தான்"
" கஷ்டமா...கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல..
நம்ம இஷ்டத்துக்கு யாரும் வேலை செய்ய மாட்டாங்க..நாம ஒண்ணு சொன்னா..அவங்க ஒண்ணு செய்வாங்க..ஒரே நாளில மூணு..நாலு இடத்துல ஒத்துப்பாங்க...சொல்லவும் முடியாது..சொல்லாம இருக்கவும் முடியாது..எல்லாத்துக்கும நாம நேரடியா 'சூபர்வைஸ்' பண்ணனும்..ஆளில்லாட்டி..ஆஃபீஸ்க்கு லீவ் போடணும்..லீவுக்கு லீவும் வேஸ்ட்..அது சரி..எங்கே தான் கட்டியிருக்கீங்க..? "
' மனசுல தான் '
சொல்லிவிட்டு வெகு சந்தோஷமாக துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு ஹாய்யாக
நடந்தான், அந்த கோபால்.!!!
16 comments:
விறுவிறுப்பான ஒரு ஒரு பக்கக் கதையை படித்து முடித்த திருப்தி. பாராட்டுகள் .
ரேகா ராகவன்.
கதை நல்லா இருக்குதுங்க... அடிக்கடி எழுதுங்க.
எனக்குப் பூசலார் நாயனார் புராணம்தான் நினைவிற்கு வருகிறது. கும்பாபிஷேகம், மன்னிக்கவும், க்ருஹப் பிரவேசம் எப்போ?
நினைச்சேன்.
கடைசியிலே வீட்டிலே ஏதாவது வில்லங்கம் இருக்கும்ணு.
வீடே இல்லாமல் வில்லங்கம் மட்டும் கொடுத்து முடிச்சுட்டீங்கலே ..
பேஷ் பேஷ் ... ரொம்ப நல்லாயிருக்கு !
good good
//ஒண்டுக் குடித்தன ஸ்டோர்..நெருப்புப் பெட்டி போன்ற வீடு..ஃப்ளாட்..இப்போது,இறையருளால்.. சற்று, பெரிய குடிலில் வாசம்.வீடு பக்கத்தில் கொஞ்சம் நிலம்.. அதைக் கொத்தி, பண் படுத்தி, மா,பலா,தென்னை,தேக்கு என்று மரக் கன்றுகள் நட்டு,அவை வளர்ந்து, மரமாகி, நிழல் தரும் காலத்தில் வீடு அழகு கொஞ்சும் ஆரண்ய மாக இருக்கும்..... இருக்க வேண்டும்.... என்கிற அதீத நம்பிக்கையில் இது 'ஆரண்ய நிவாஸ்'. இது நாள் வரை 'தரன்' என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருந்த நான் ..........இனி, 'ஆரண்ய நிவாஸ்' ஆர். ராமமூர்த்தி ! இன்னும் ஐந்து ,ஆறு வருடங்கள் கழித்து ஆரண்ய நிவாஸுக்கு வருகை தாருங்கள். கூடை நிறைய மாம்பழங்களை அள்ளிச் செல்லுங்கள் ...!!!!// ஆரண்ய நிவாஸ் கட்டிய அனுபவப் பகிர்வு என் படித்தால், கடைசியில் இப்படி திருப்பி விட்டீர்களே?
கலக்கிடீங்க ஆ.ஆர்.ஆர்.ஜி!
சூப்பர் கடி
சரியான லொள்ளு பார்ட்டி!
மனக்கோயில் கட்ரதை எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க சார்! எழுத்தாளர் ஏகாம்பரம் மாதிரி இந்தக் கதையிலும் க்ளைமாக்ஸ் அட்டகாசம்.
நல்ல கதை. முடிவு எதிர்பாராத விதமாக இருந்தது. அதுவே கதைக்கும் அழகாய்.
வெங்கட்.
ஆரண்ய நிவாசா?
//’மனசுல தான்’//
நல்லாயிருக்குங்க கதை:)!
அருமையா இருக்கு சார் கதை. எதிர்பாராத கிளைமாக்ஸ்.
மோகன்ஜி : கலக்கிடீங்க ஆ.ஆர்.ஆர்.ஜி!
நான் : THANK YOU மோகன்ஜி
nalla irukku ... asaththungka
Post a Comment