Saturday, October 30, 2010

வறுமையும், எருமையும்...


எருமையைக் கூட,
விரட்ட மனம்
இல்லாதவர்கள்,
எல்லாரும்,
கூட்டமாய் சேர்ந்து,
கூச்சல் போட்டார்கள்,
'வறுமையை
விரட்டுவோம்'

*
தாரை, தப்பட்டை ஒலிகள்..
காதை கிழிய வைக்கும்,
சீழ்க்கை....
படீரென்று சத்தம்
போடும் பட்டாசுகள்!
உள்ளே ஊற்றப் பட்ட
'குவார்ட்டரால்'
வெளியே
தள்ளாடியபடி...
குடி மகன்கள்....
பாடையிலிருந்து
விருட்டென்று,
எழுந்து,
எரிச்சல் தாங்க முடியாமல்
பிணம் ஒன்று
சொன்னது:
' தா, சும்மா கிட! '
*
வீட்டை விட்டு,
விரட்டப் பட்ட,
பெற்றோர்களுக்கு,
முதியோர் விடுதியில்
பரிசாரகனாக
வேலை பார்க்கும்,
மகன்
உணவு
பரிமாறினான்,
பரிவோடு!
*

13 comments:

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

Chitra said...

எதார்த்தம்!

அன்பரசன் said...

நச்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்

RVS said...

சார்! லாஸ்ட்டு டச்சிங்கு.. மனசுல நிக்கிது.. இல்லை இல்லை தக்கிது.... ;-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

வறுமையும் எருமையும் அருமை
குடிமகனைக் கண்டதும் பிணத்திற்கும் ஏற்பட்ட ’கிக்’
பெற்றோருக்கு பரிவோடு பரிமாற முதியோர் இல்லத்தில் பரிசாரகர் உத்யோகம்;
மூன்றுமே சிந்திக்க வைக்குது!

R. Gopi said...

மூன்றுமே நல்லா இருக்கு சார்.

ரிஷபன் said...

மூன்றுமே அழகு.. அருமை.. ரசித்தேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது

அப்பாதுரை said...

ரசிக்க முடிகிறது.

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துங்க.

vasan said...

ஆட்சிக்கு வ‌ந்தால்,'வறுமையை ஒழிப்போம்' ஐம்ப‌து வ‌ருஷ‌மாய், தேர்த‌ல் நேர‌ங்க‌ளில் கேட்ட‌து.
ஒழிந்த‌த‌து அவ‌ர்க‌ள் வறுமை ஏழு த‌லைமுறைக்கும் (1வது). எழ‌முடியாம‌ல் கிட்க்கிறான் த‌மிழ‌ன் டாஸ்மாக்கில். அத‌னால், பாடையில போகும் போதாவ‌து நிம்ம‌தியா போக‌ விடுங்க‌டா, விளங்காத‌ ப‌ய‌லுக‌ளா என்கிற‌து நாளைய‌ பிண‌ங்க‌ளைப் பார்த்து இன்றைய‌து(2வது). தேச‌த்தின் நீர்/ நில‌வ‌ளத்தை அழித்து விட்டு ஒரு ஊரை ம‌ட்டும் த‌த்து எடுத்து விழா கொண்டாடுவ‌தைப் போலிருக்கிற‌து (3வ‌து).

வெங்கட் நாகராஜ் said...

மூன்றும் ஏதோ விதத்தில் மனதைத் தொட்டது. பகிர்வுக்கு நன்றி சார்.