" செய்யும் தொழிலே தெய்வம்"
யாருக்கு?
பூசாரிகளுக்கு !
அர்ச்சகர்களுக்கு !!
பட்டர்களுக்கு....!!!
*
அண்ணலும் 'நோ..கீ' னான்...
அவளும் ' நோ.. கீ'னாள்...
கடைசியில்,
காம்பவுண்ட் சுவர்,
பால் பாக்கெட்
பையில்,
வீட்டு சாவி!!!
*
ஓசிப் பேப்பர்
படிக்க வரும்,
நபர் போல்,
நாள் தவறாமல்,
வந்து விட்டுப்
போகிறது,
மின்வெட்டும்!!!
*
12 comments:
மாற்றி யோசித்ததும் நல்லா இருக்கே.... :-)
மூன்றும் முத்தாய்.
(1) களிமண் முதலிய்வற்றால் பிள்ளையார் போன்ற தெய்வீக சிலைகளையும், அஷ்டலக்ஷ்மி, தஸாவதாரம் போன்ற கொலு பொம்மைகளையும், படைக்கும் கடவுளான பிரும்மாவையும் கூட வடிவமைத்து சிருஷ்டி செய்யும் கலைஞர்களுக்கு, செய்யும் தொழிலே தெய்வம் என்பது மிகவும் பொருந்தும்.
(2) ”கீ” கவிதையை .. சாரி, ”நோ கீ” கவிதையை நோக்கினேன்.
என்னவொரு அருமையான கற்பனை.
மாற்றி யோசிப்பதில் நீர் ஒரு ”கீ பெர்சன்” !
(3) நாள்தோறும் வந்து போகும் (நமக்கு வெந்து போகும்) ஓசிப்பேப்பர் படிக்க வருபவரும், மின் வெட்டும் இரண்டுமே எரிச்சல் ஏற்படுத்தக்கூடியவை தான், எப்படி யோசித்தாலும்.
//ஓசிப் பேப்பர்
படிக்க வரும்,
நபர் போல்,
நாள் தவறாமல்,
வந்து விட்டுப்
போகிறது,
மின்வெட்டும்!!!//
அருமை . வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு சார்
//மின்வெட்டு //
நைஸ்.. :)
ஆர்க்காட்டார் உங்களை தேடறாராம். ஜாக்கிரதை.
கவிதை நல்லா இருந்தது.. ;-)
மூன்றுமே மாறுதலான யோசனை. ”நோ கீ” என்னை மீண்டும் நோக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி.
மூன்றும் பேச்சுவாக்கில் வந்த கவிதைகளாய்.
முதல், கவிதை வைகோ சொல்லருது கிளாஸ்.
"நோ..கீ"ன்னு இரண்டு பேருமே தேமோன்னு,
நின்னா வேறெங்கோயிருக்கு நோக்கு..நோக்கம்.
ஓசிப் பேப்பர், பவர் கட், சரியான நோஷ் கட்
இரண்டு வரத்துகளுக்கும்.
3 ம் அருமை..
தெய்வத்தொழில், மறைந்த சாவி, வெட்டும் மின்சாரம் மாற்று யோசனை கவிதைகள் நேர் யோசனை ஹைக்கூக்கள்.
நீங்கள் மாற்றி யோசித்து எங்களையும் மீள யோசிக்க வைத்ததற்கு நன்றி.
Post a Comment