Tuesday, August 10, 2010

அந்தக ஓவியம்


விதம்விதமாய்
பூங்கொத்துக்களை
விற்றவள் தலை
மொட்டை..
கேட்டால்,
நேர்த்திக் கடனாம்!

**************

ஒருவனின் கீழ்
வேலைப் பார்க்க
மாட்டேன்,
என்று கித்தாய்ப்பாய்
சொல்லிவிட்டு,
மளிகைக் கடை
வைத்தான்...
போகிறவன்..வருகிறவன்
எல்லாம்
அவனை
விரட்ட ஆரம்பித்தான்..
உப்பு கொடு...
பருப்பு கொடு ..
என்று!!

*
கண்கள் விரிய..
பிரமாதமாய்..
அந்த ஓவியம்!
பாராட்டத்
திரும்பினால்...
கம்பியால்,
டக்டக்கென்று
தட்டி
நடந்து போய்க்
கொண்டிருந்தான்,
அவன் !!!

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதைகள் பூ விற்றவள் தலைபோல மொட்டையாய் இல்லாமல் மணமுள்ள பூங்கொத்தாய் மகிழ்வித்தன.

ஒருவன் கீழ் வேலை செய்யப்பிடிக்கா விட்டாலும் ஊருக்கே ஊழியம் செய்யும் மளிகைக்கடைக்காரர் சேவையில் முந்திரி மணம் கமழ்கிறது.

தான் தன் கண்ணால் பார்த்து மகிழ முடியா விட்டாலும், தன் கற்பனைத்திறனால் பிறரை மகிழவைக்க மட்டுமே, அருமையான ஓவியம் வரைந்த அந்தக் கண்பார்வை அற்றவரைப் பற்றிய தங்கள் கவிதை என் கண்களில் கண்ணீரை வ்ரவழைத்து விட்டது. பாரட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடைசி வார்த்தையை தயவுசெய்து “பாராட்டுகள்” என்று திருத்திக் கொள்ளவும்.

வெங்கட் நாகராஜ் said...

மூன்று கவிதையும் அழகு. அதிலும் முதலாவதும், மூன்றாவதும் எனக்குப் பிடித்தது.

ரிஷபன் said...

கவிதைகளுக்கு முரண் அழகு!

வருணன் said...

கவிதைகள் அருமை நண்பரே.தொடர வாழ்த்துக்கள்.

vasan said...

பார‌தியோ, கண்க‌ள் விற்று ஓவிய‌ம் வாங்குவ‌தாய் ப‌க‌டி செய்திருக்கிறான்.
ஆனால் இங்கோ,ஆர் ஆர் ரா க‌விதையில்,
க‌ண்க‌ள் அற்ற‌வ‌ன், பிற‌ர் க‌ண் விரிய‌ ஓவிய‌ம் ப‌டைத்திருக்கிறான்.

ஸ்ரீராம். said...

மூன்றாவது கவிதை... சாத்தியமா என்ன?

பத்மநாபன் said...

அந்தகஒவியம் ....அற்புத கவிநயம்.