Saturday, August 28, 2010

பறவையும்....மனிதனும்.....


என்னால் அல்லவா...
உங்களின் அபரிமிதமான
வளர்ச்சி...
மனிதனைப்
பார்த்துக் கொண்டு,
விண்ணோக்கிப்
பரவசமாய்
பறந்து சென்றன
பறவைகள்..
அவை போட்ட
எச்சத்தில் விழுந்த
விதைகளல்லவா..
விருட்சங்களாகி..
மில்லியனும்..
பில்லியனுமாய்
பெருகிய
நம் குலத்தைக்
காக்கின்றன..
மனிதனுக்கு
அது
தெரிவதில்லை..
அதனால்.....
அவன்
பறவைகளைப் பார்ப்பதில்லை!!!

10 comments:

Chitra said...

மனிதனுக்கு
அது
தெரிவதில்லை..


.....தெரிந்து கொள்ளவும் முயலவில்லையோ? ம்ம்ம்ம்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

பறவைகளை மனிதன் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. அவற்றை வேட்டையாடாமலும், அவை கூடு கட்டி வாழும் மரங்களை/காடுகளை அழிக்காமல் இருந்தாலே போதும்.

பத்மா said...

சரியாய் சொன்னீங்க

Anonymous said...

//மனிதனுக்கு
அது
தெரிவதில்லை..
அதனால்.....
அவன்
பறவைகளைப் பார்ப்பதில்லை!!!//
ஏன் எனில் இது பிண்டம் தேடும் கலியுகம் sir

வசந்தமுல்லை said...

உங்களின் அபரிமிதமான
வளர்ச்சி...
மனிதனைப்
பார்த்துக் கொண்டு,
விண்ணோக்கிப்
பரவசமாய்
பறந்து சென்றன!

பறவைகள் மட்டுமல்ல
நானும்தான் பூரித்தேன்
பரவசமானேன்!!!!!!

vasan said...

இதைத் தான் ப‌ற‌வையின் பார்வையில்ன்னு(Bird`s view) சொல்லுவாங்க‌ளா?
அருமையான‌ பார்வை,ஆர்.ஆர்.ரா.

பத்மநாபன் said...

இயற்கை செய்த அற்புத ஏற்பாடு.

பறவைகள் பயிரிடும் மரங்களை மனிதன் அழிக்காமல் இருந்தால் சரி

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். கவிதை அருமை.

ரிஷபன் said...

மனசு பறக்கிறது.. ரெக்கை கட்டி

RVS said...

சென்னையில் இப்போது குருவிகளே இல்லையாம். செல் ஃபோன் டவர்கள் விரட்டி விட்டதாம் குருவிகளை. நல்ல கவிதை.

அன்புடன் ஆர்.வி.எஸ்.