நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Wednesday, August 4, 2010
மனிதம்...!!!
இங்கு எல்லாமே
வியாபாரமாகி
விட்டது...
இவருடன் பேசினால்,
நமக்கு என்ன லாபம்..
என்று சாதாரண மனிதன்
கூட யோசிக்க,
ஆரம்பித்து விட்டான்..
எல்லாமே ஒரு
எதிர்பார்ப்புடன்..
இயங்கிக் கொண்டிருக்கிறது..
எளிமையும், இனிமையும்
தூய்மையும் நிறைந்த
கிராமங்கள் நகர்ந்து,
நகரங்கள் ஆகி விட்டன....
மனிதமே இல்லாத
மனிதன் ஆகி விட்டோம்..
நாம்
எல்லாரும்!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
மனிதமே இல்லாத
மனிதன் ஆகி விட்டோம்..
நாம்
ம்ஹும்.. என்ன செய்ய..
படம் அருமை.
///எல்லாமே ஒரு
எதிர்பார்ப்புடன்..
இயங்கிக் கொண்டிருக்கிறது //
உண்மை உண்மை
இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் மனிதத்தை எங்கு பார்க்க
புகைப்படம் அருமை :)
மனிதம், சுயநலத்தில் தொலைந்து வருகிறதோ.....
தொலைந்து போன மனிதம்!
தேடித்தேடி நம்மையே தொலைத்துவிட்டோம்!
எனினும் மனிதத்தைத் தேடி....
அழகிய கவிதை பகிர்வுக்கு நன்றி.
வெங்கட்.
எதார்த்தம் தொலைந்து கொண்டிருக்கிறது. மனம் என்றும் பரபரப்பாக இருந்து இதத்தை தொலைப்பது தான் காரணம் .
மனம்+ இதம் = மனிதம்
படம் எதார்த்தமாக இருக்கிறது சக உயிரின் இதமான அன்பு செலுத்தி மனிதம் போற்றுகிறது.
அருமை
மனித நேயத்தை பற்றி விளக்கிய
மனித நேயமே!
நீவிர் நீடூழி வாழ்க!
ஆம். மனிதம் இல்லாத மனிதர்கள்.
அசந்தால் நம்மை மொட்டையடித்து விடுவார்கள், அதுவும் அரைகுறையாக.
பட விளக்கம் இது தானா? என்று மனிதம் உள்ள நீங்கள் தயவுசெய்து எனக்கு விளக்கவும்.
(சரியான ட்யூப் லைட் என்று முனகுவது கேட்கிறது)
வாழ்க!
ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் வெளங்கினாப்புலதான்னு ஒரு பழஞ்சொல்.
ஆசை புகுந்த மனசும், டி வி புகுந்த வீடும் அம்புட்டுத்தான்னு ஒரு புதுச்சொல்.
Post a Comment