Monday, December 21, 2009

"க்ளோபல் வார்மிங்....."


நண்பர்களோடு,
எனக்கும்,
தெருக்கோடி
நாடார் வெற்றிலைப் பாக்கு
கடையில்,
அரசியல்..சினிமா..
"க்ளோபல் வார்மிங்....."
என்று அரட்டை அடிக்க
ஆசை தான்...
ஆனால்,
பிள்ளைகளுக்கு வீட்டுக் கணக்கு,
அழுக்குத் துணி தோய்க்க..,
நோட்டுகளுக்கு அட்டை போட..
ரேஷன் சாமான்கள் வாங்க,
என் சேவை தேவை இங்கு...
இதை விட்டுவிட்டு,
நான் அரட்டை அடிக்க
அங்கு வந்தால்,
இங்கே "ஹோம் வார்மிங்"
வந்து விடும்!
அதனைத் தணிக்க
எந்த
"ஹோபன்ஹேகன்" கொம்பனாலும்
முடியாது!!

8 comments:

கமலேஷ் said...

ரொம்ப எதார்த்தமான கவிதை....நண்பரே...

வாழ்த்துக்கள்..

Chitra said...

/////இதை விட்டுவிட்டு,
நான் அரட்டை அடிக்க
அங்கு வந்தால்,
இங்கே "ஹோம் வார்மிங்"
வந்து விடும்!////////ரொம்ப practical ஆ யோசிச்சிருக்கீங்க.

பூங்குன்றன்.வே said...

இயல்பான கவிதை நண்பா.

இராகவன் நைஜிரியா said...

// இதை விட்டுவிட்டு,
நான் அரட்டை அடிக்க
அங்கு வந்தால்,
இங்கே "ஹோம் வார்மிங்"
வந்து விடும்! //

ஹோம் வார்மிங் வரும் போது கூடவே பூரி கட்டை என்ற விஷயமும் பறக்குமே... அதுதான் ரொம்பவே பயமுறுத்துது..

வசந்தமுல்லை said...
This comment has been removed by the author.
வசந்தமுல்லை said...

FANTASTIC, HOME EXPERIENCE?????????????!!!!!!!!!!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வருகை புரிந்த நண்பர்கள் அனைவருக்கும்
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
பூரி கட்டை என்றவுடன்,
ஒரு பகிர்வு உங்களுடன்!..
ஆபீசில் நண்பர் ஒருவர் இரண்டு,மூன்று நாட்கள் "லீவ்"
" என்ன ஆச்சு?" - நான்.
"வீட்ல, 'வீசிங்க் ட்ரபில்'. இந்த பனி காலம்
வந்தாலே கஷ்டங்க.."
" எங்க வீட்லயும் தான் 'வீசிங்க் ட்ரபில்' எல்லாத்தையும் சமாளிச்சுண்டு தான் ஆபீஸ்
வரணும். இப்ப நான் வரல்லே.."
"அப்படியா!" என்றார் நண்பர் வெள்ளந்தியாய்!

ரிஷபன் said...

அசத்தல் கவிதை!