நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Thursday, March 31, 2011
அக நாற்பது (1)
(அக நானூறு,புற நானூறு போல், என் தமிழணங்கிற்கு அக நாற்பது, புற நாற்பது என இரு பாமாலைகள் தொடுக்க ஆசை..முடியுமா? இதோ முதல் இதழ்)
ஆள் தையிலே எனை மணந்த மணவாளன்,
மீள் துயிலில் எனை ஆழ்த்தி,புறம் ஏக,
தேன் சிந்தும் மலரிதென மயங்கிய வண்டு,
துயின்ற இதழ் இன்று ஈக்கள் மொய்க்க,
பத்து கழஞ்சு பொன் ஈட்ட பட்ட பாடு ...
பாழ் நிலத்தில் அதனால் ஏது பயனென்று
பார்த்தால் சொல், தோழி - சேர்த்த
பொருள் போதும்,சிக்கனமாய் வாழ்ந்து,இனி
அறத்தையும், இன்பத்தையும் ஒருங்கே
துய்த்திட வா,என் கண்ணாளா என
சொல்லடி பைங்கிளியே, பசலை வந்து,
பாழ் பட்டு நிற்கிறேனடி, சகியே...
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
பத்து கழஞ்சு பொன் ஈட்ட பட்ட பாடு..
வாவ்.. நறுக்கென்ற வரி.. அதன் கனம்..
படம் மட்டும் சற்று மிரட்டலாய்!
புதுமையான முயற்சி.. ஆர்வமாய் நாற்பதுக்குக் காத்திருக்கிறோம்..
அக நாற்பது
ம்ம்...ரைட்டு..
சிலுக்கு படம் ரொம்ப ஹிம்சை பண்ணிடுச்சு சார்! ;-))
அக நாற்பது ... ஆகா... நாற்பதாக வளர வேண்டும் என என் ஆசைகள். ;-)))
ரொம்ப தமிழ்ல புரட்டி அடிச்சுருக்கீங்க சார்! நல்லா இருக்கு ;-))
புதுசு கண்ணா, புதுசா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆகா அருமை
என் பள்ளி, கல்லூரி நாட்களை ஞாபகப் படுத்தி விட்டீர்கள் கனவுக்கன்னி படத்தைப் போட்டு.
படமும் பாடலும்
சிலுக்கு போலவே
நல்ல வழவழப்பு.
வாழ்த்துக்கள்.
அடி சக்கை! அட்ட்ட்ட்டகாசம் போங்க.
இல்லம் துறந்து இல்லாதது சேர்க்க
இல்லாளை சேராது, பாவம், பாவையை பசளையிடம்
வார்த்தவனை, பார்த்து சேர்த்துவிடுங்கள், இதையாவது சிதைக்காமல்.
(அல்லது சிறுவயதிலேயே சிதை(ந்)க்குப் போன இவளின் நிலைதான் எனக்கும்)
அருமை திரு ஆர்ஆர்ஆர்.
ஆரரின்றி யார் தருவார் இந்த பு(ற)து நாற்பது?
அக நாற்பது - ஆரம்பமே அசத்தலாய் இருக்கிறது ஆர்.ஆர்.ஆர். சார். தொடரட்டும்.
அன்பின் ராமமூர்த்தி சார்,
வணக்கம்.
இதுவும் சேர்ந்துதான் வாழ்க்கை.
நல்லா வந்திருக்கு. சிலுக்கின் படம் கண்களில் கொஞ்சம் ஈரத்தை கொண்டு வந்தது. அந்தப் பெண்ணின் ஆட்டத்தையும், கவர்ச்சியையும் கொண்டாடிய தமிழ்ச் சமூகம் அவரது வலியை உணராமலே போனதுதான் சோகம்.
சிலுக்குக்கு என்ன வலி, இரா.எட்வின் ?
செமை..
good work go ahead
நேத்து ராத்திரி யம்மாவில வலியோட முணங்குவாங்களே நீங்க கேட்டதில்லையா அப்பாஜி ?
அருட்கவி வலைத் தளத்துக்கு வாருங்கள் மூவார் முத்து சார்
அந்த எம்மா சிலுக்கா? தெரியாம போச்சே!
Interesting post.
Post a Comment