நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Saturday, March 12, 2011
ஆழிப்பேரலை!!
உறுமி வரும் ஆழிப்பேரலையே...
உந்தன் ஆட்டத்தை நிறுத்திக் கொள்!
ஊழிக் காற்று போல உந்தன் ஆட்டம்,
நாழிப் பொழிதினில் ஜப்பானை நடுக்குதடி!
போதும் உன் விளையாட்டு..
உன் குழந்தைகள் இனி தாங்காது..
தாயல்லவா நீ....தயை புரிந்து,
தரணியில் எம்மை வாழ விடு...
உந்தன் சீற்றம் போதும்,
அடங்கடி மா காளி!!!
அருள் புரிவாய் ஜல மாதா!!!!
ஊழிக் கால ஆட்டமா...
உனக்கிதில் இனி நாட்டமா??
தாயல்லவா நீ,
தயை புரிவாய் மஹா சக்தி!!
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
உங்கள் வேண்டுதல் தாயாகிய மஹா சக்தியின் காதுகளில் ஒலிக்கட்டும். ஆழிப்பேரலை அடங்கட்டும்.
மனித இனம் காக்கப்படட்டும். அதுவே அனைவரின் தேவையும், பிரார்த்தனையும் இன்று.
டி.வி. யில் செய்திகள் பார்க்கும் போதே நம் நெஞ்சு நடுங்குகிறது.
அடுத்த நிமிடம் யாருக்கு என்ன நடக்குமோ என்ற இந்த நம் வாழ்வே நிச்சயமில்லை என்பது புரிகிறது.
இருக்கும் வரை அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிப்போம், உதவுவோம், அன்பு செலுத்துவோம்.
ஏற்கனவே வந்த சுனாமியின் தாக்கமே இன்னும் தீரலை.. இப்ப இன்னொண்ணு :-(
அடுத்த நிமிடம் யாருக்கு என்ன நடக்குமோ என்ற இந்த நம் வாழ்வே நிச்சயமில்லை என்பது புரிகிறது.
இருக்கும் வரை அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிப்போம், உதவுவோம், அன்பு செலுத்துவோம்.
வை. கோ வின் வார்த்தைகள் சத்தியம். இயற்கையின் சீற்றம் நம் சக்திக்கு அப்பாற்பட்டது. பிறரிடம் நேசம் நம் எல்லைக்குட்பட்டது.
ரிஷபன் சார் சொன்னது போல, அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில், அடுத்தவரை அழிக்க நினைக்காமல் எல்லோருடனும் சந்தோஷமாக நல்ல நட்புடன் இருக்க முயல்வோம். நல்ல கவிதை.
//ஊழிக் கால ஆட்டமா...
உனக்கிதில் இனி நாட்டமா??//
டி.ராஜேந்தர் மாதிரி கொஞ்சம் படிச்சுட்டேன்..
அற்புதமான கவிதை சார்! வார்த்தைகள் சுனாமியா வருது..
ஜப்பான் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்... ;-((
வேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல்
மனித நேயம் மிக்க கவிதை.... மஹா காளியின் காதுகளில் விழட்டும்..நெஞ்சுரம் கொண்ட ஜப்பான் மக்கள் மீண்டு(ம்) எழட்டும்....
ஜப்பானில் இயற்கைத்தாய் சீற்றம் கொண்டு நடத்தும் தாண்டவங்களைப் பார்த்துப்பார்த்து மனம் அமைதியில்லாமல் தவிக்கிறது. அணுஉலை வெடிப்பால் இன்னும் அந்த நாடு அனுபவிக்கப்போகும் துயரம் நினைத்தால் மனம் வலிக்கிறது. ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டூ பேரினை நீக்கி பிணமென்று பெயரிட்டு சூறையங் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே என்று திருமூலர் சொன்னதுபோல நிலையில்லாத நீர்க்குமிழி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால் மனம் வேதனையுறுகிறது. இதனை உலகிற்கு உணர்த்தவேதான் இயற்கைத்தாய் இத்தனை தண்டனையளிக்கிறாளோ என்னவோ? ஆனாலும் மனிதன் அடங்குவதாயில்லை.வருகிறது பாருங்கள் தேர்தல் எனும் ஆட்டம். எத்தனை துன்பங்களை நாம் அனுபவிக்கப்போகிறோம்? மக்களை ஒரு கடுகளவுகூட மனிதனாக நினைக்காமல் அவர்கள் மனம்போன போக்கில் கூட்டணிக்கூத்து நாடகம் அசிங்கமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த நாடு என்றைக்கு நல்ல பலனை அடையப்போகிறது என்றும் தெரியவில்லை. ஆனாலும் ஒருபக்கம் சுனாமி எனும் இயற்கை அழிவால் நல்லவர்களும் சிறியவர்களும் குழந்தைகளும் வாழ்வையிழப்பது அதைத் தடுக்கவியலாமல் இப்படி எழுதியே மனம் நோவது எல்லாமும் சங்கமாக உள்ளது ஆர்.ஆர். சார். உங்களின் பகிர்வை நான் வழிமொழிகிறேன்.
....எல்லாமும் சங்கடமாக (சங்கமாக அல்ல) உள்ளது ஆர்.ஆர்.சார்.
வை.கோ. ஸார்..உங்கள் எண்ணம் தான் என் ஆசையும்......
அமைதிச் சாரலுக்கு: அதானே.. நம்மூர்க் காரங்க பினாமி மாதிரி,சுனாமியும் அடுக்கடுக்கா வருது!
ரிஷபனுக்கு.. நேசிப்போம்... நேசிக்கப் படுவோம்!!
வெங்கட்..என்ன ரொம்ப நாளா ஆளையேக் காணோம்..மார்ச் பிஸியா?
ஆர்.வி.எஸ்..மிக்க நன்றி..என் வார்த்தையில் சினம் இருக்கும்..ஆனால்,சீற்றம் இருக்காது...(ஒரு பேச்சுக்கு ராஜேந்திர்னு சொன்னா,இப்படி மொக்கை போடறாரே மனுஷன் என்று நறநறவென்று நீங்கள் பல்லை கடிக்கும் சப்தம் இங்கு கேட்கிறது,ஓய்!)
நம் மன்றாடல் அவளுக்கு கேட்குமா, சிவா?
அப்படியே ஆகுக,எல்லென்..அதென்ன ரொம்ப நாளா உங்க வீடு(ப்லாக்) பூட்டியே இருக்கு? உங்களுக்கும் மார்ச்போஃபியா வா?
சங்கடப் படாதீர்கள் ஹரிணி..தைமூரிலிருந்து ராசா வரை எத்தனை பேர் சுரண்டினாலும்,இந்த நாடு வறண்டு மட்டும் போகாது..அது நிச்சயம்..கவலைப் படாதீர்கள்.எதுவும் வினைப்படி தான் நடக்கும், நியூட்டனின் மூன்றாவது விதி பொய்த்துப் போனதே இல்லை..அவரவர்கள் ..அவரவர்களுக்குரிய ..வினையையோ...தினையையோ நிச்சயமாய் அறுப்பார்கள்...இதில் சந்தேகமே வேண்டாம், ஸார்!
மனித இனத்தின் அழியாப் பேராசையால் பொன் முட்டையிடும் வாத்துக்களை வெட்டி வயிற்றைக்கீறும் போது சிற்சில சமயங்களில் அந்த வத்துக்களின் அலறல்களும், சில நகக்கீறல்களும் இது போல் நடக்கத்தான் செய்யும். நாமோ, கொல்லப்படும் வாத்துக்களைப் பற்றி கவலைப் படாது, அது கீறிய காயத்தையும், அலறலையும் பார்த்து அரண்டு போகிறோம்.
கற்கால மனிதனின் வாழ்க்கையைவிட என்ன சிறப்பான வாழ்க்கையை நாம் இந்த 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துவிட்டோம் சொல்லுங்கள். ஒரு தற்கொலை அப்போது நடந்திருக்குமா?
தொடர்பு வசதிக்காக அவர்கள் வாழ்விடத்திலேயே உயிர் மெல்லக் கொல்லும் டவர்கள், மின் வசதிக்காய் உலகையே அழிக்கும் அணு உலை போன்ற பைத்தியகாரத்தனங்களை அந்த அப்பாவிகள் நிச்சயம் நுட்பம் தெரிந்திருந்தாலும் செய்திருக்க மாட்டார்கள். இயற்கையை விட்டு செய்றகைக்கு வந்து செத்துத் செத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்த மிக முன்னேறிய!! இன்றைய தலைமுறை.
அமைதி மீண்டும் திரும்பும் என்ற நம்பிக்கையுடன்
\\\தைமூரிலிருந்து ராசா வரை எத்தனை பேர் சுரண்டினாலும்,இந்த நாடு வறண்டு மட்டும் போகாது.///
.
இந்தப் பொல்லாத பொறுமை தானய்யா ....நம் பலகீனமே
வேதனை வரிகளில் வந்து விழுகிறது. சிரமப்படும் நம் மக்களுக்கு சீரிய வாழ்வு கிடைக்க இறைஞ்சுகிறேன் இறைவனிடத்தில்.
ஆம்..வாசன்.. நம் முன்னோர்கள் நம்மை விட மிகமிக நாகரீகமாய் வாழ்ந்திருக்கிறார்கள்!
நிச்சயம் அமைதி திரும்பும், வேலு.. நம் ப்ரார்த்தனைகளும் அதுவே!
சிவா நமக்கு வறுமையை விட பொறுமை ஜாஸ்தி!
வாணாம்..அடிக்காதே..அளுதுடுவேன்...என்று செந்தில் மட்டுமா சொல்கிறார்? நாம் எல்லாரும் தான் சொல்கிறோம்!
அப்படியே ஆகட்டும் ராஜேஸ்வரி!
Post a Comment