நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Wednesday, March 2, 2011
” சாப்பித மாத்தேன் போ !”
” சாப்பித மாத்தேன் போ !”
” சாப்பித மாத்தேன் போ !”
” சாப்பித மாத்தேன் போ !”
பல்லைக் கடித்துக் கொண்டு,முதுகில் ’ணங்’கென்று ஒன்று வைக்க வேண்டும் என்று வந்த கோபத்தை ரொம்பவும் கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டாள்,வனஜா.
இந்த சுந்தரம் என்னடாவென்றால்,வாசலில் வைத்து குழந்தைக்கு சாதம் ஊட்டாதே
என்கிறான்.அது அவ்வளவு ’ஹைஜீனிக்’ இல்லையாம்.இதுவானால் சாப்பிடவே மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறது.
சுந்தரத்தைப் பற்றி இங்கு சொல்லித் தான் ஆக வேண்டும்.ரொம்ப சுத்த,பத்தம் பார்ப்பவன்.பாத்திரத்தில் கொஞ்சம் கறி, கூட்டு மீந்தால் கூட,’கையால் எடுக்காதே..கரண்டி,ஸ்பூன் ஏதாவது ஒன்றால் எடுத்துப் போடு’ என்பான்.இதாவது பரவாயில்லே..சுட்ட அப்பளத்தைக் கூட கையால் எடுக்கக் கூடாதாம். அதற்கென்று ’ஹேண்டில்’ ஒன்று வாங்கியிருக்கிறான்.
கொஞ்சம் ‘ஓவரா’த்தான் இருக்கு..
என்ன செய்வது..வனஜா பழகி கொண்டு விட்டாள்.ஆனால், இந்த ‘கோட்டான்’ தான் இப்படி பிடிவாதம் பிடிக்கிறது.
” சாப்பித மாத்தேன் போ !”
சுந்தரத்திற்கு இது கேட்டிருக்க வேண்டும்.
“சாப்பிடாட்டிப் போ” என்றவன்,
”பேசாம விடு..வயறு காஞ்சா, தன்னைப் போல சாப்பிட வருவா..”என்றான்,இவளிடம்!
”போ..உம் பேச்சு..டூ....கா...உம் பேச்சு டூக்கா.போ..”
குழந்தை ’உர்’ரென்று முறைத்தாள், சுந்தரத்தைப் பார்த்து.
”நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா” என்றவள் குழந்தையைப் பார்த்துக் கேட்டாள்.
“ஏம்மா சாப்பிட மாட்டே?”
“ நாக்கு நாணாம் “
“ நாக்கு நாணாமா, ஏன்?”
இந்த சுவாரஸ்யமான உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான், சுந்தரம்.
“அதான் ஏன்னு கேக்கிறேன்னில்லே”
” சாப்பித மாத்தேன் போ !”
கொஞ்சம் மாற்றி யோசித்தாள், வனஜா.
“ அப்ப எங்க தான் சாப்பிடுவே?”
“ தோ..” - குழந்தை வாசலைக் காண்பித்தது.
“ ஏன்?”
“ ஏன்னா..அங்க காக்கா இக்கு.. நாக்குத்தி இக்கு..அங்கப் போனா, அதும் நம்மோட சாப்பிதும்..அதுக்கென்ன அம்மா இக்கா..இப்பதி சாதம் ஊத்த?”
குழந்தையின் பதிலைக் கேட்டு விக்கித்து நின்றான், சுந்தரம்!
வனஜாவும் தான்!!
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
cho chweet and cute!
really cute!!!!
aahaa!super
நைஸ்! :)
சமத்துக் குழந்தை!
உண்மை.. குழந்தைகள் கருணை மிக்கவர்கள்... அருமை..
தன்னைப் போல அப்பா அம்மா என்று ஏதும் இல்லையோ காக்காவுக்கும் நாக்குத்திக்கும் என்று கருணையுள்ளம் கொண்ட குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
“ நாக்கு நாணாம் “ இந்தக் கதை என்று சொல்லமுடியாத ஒரு குழந்தை மனதுடன் நானும்.
இந்த பதிவில் விஞ்சி நிற்பது,
சொன்ன விசயமா? சொன்ன விதமா?
சால்மன் மன்னனையே கூப்பிட்டு
விவாதம் தொடங்களாம். அருமை ஆர்(3)
சூப்பர் பேபி ஆர் ஆர் ஆர் ..:))
சித்ராவிற்கு: அந்த குழந்தை இங்க்லீஷ்ல பேசறா மாதிரியே இருக்கு, உங்க கமெண்ட்ஸ்!
வந்தனாவிற்கு: உன் விமர்சனம் வந்தால்,அது ஒரு நல்ல பதிவு என்று அர்த்தம் என்று நினைக்கிறேன்!
ராஜிக்கு: மிக்க நன்றி மேம்!
பாலாஜி சரவணா, அப்பப்ப மின்னல் மாதிரி வருகிறீர்கள்!
மிடில் க்ளாஸ் மாதஈ; அதன் தாய் பெயர் கூகுளம்மா!
ஸ்வர்ண ரேக்காவிற்கு..ஆம் குழந்தைகள் உண்மையிலேயே கருணை மிக்கவர்கள் தான்!
இந்த விமர்சனம் புரியவில்லையே திரு வை. கோ. ஸார்..!
மிக்க நன்றி திரு வாசன்! சாலமன் பாப்பையாவைக் கூப்பிட்டால், இர்ண்டிற்கும் முடிச்சுப் போட்டு முடிவுரை சொல்லி விடுவார்!
சூப்பர் பேபியா..(கை) சூப்பர பேபியா தேனம்மை!
குழந்தை மனம் அருமை.
//அடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க?
அருமை..அருமை!!
*
VAI. GOPALAKRISHNAN
”ஐ ம் ப தா வ து பிரஸவம்”
3 hours ago //
THANK YOU VERY MUCH, FOR DISPLAYING MY NAME, IN YOUR BLOG, SIR.
என் ப்ளாக்கியும் தன் முகத்தை இதே போல பொலிவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள், சார்.
அவளை உங்க தங்கிச்சியா நினைச்சு, நேரம் கிடைக்கும் போது, வந்து கொஞ்சம் அவளையும் கவனிச்சுட்டுப் போங்க, சார்.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
// இந்த விமர்சனம் புரியவில்லையே திரு வை. கோ. ஸார்..! //
குழந்தைகளுக்கு சிலது பிடிக்கும்,; சிலது பிடிக்காது.
நானும் ஒரு குழந்தை மனதுடன்.இருப்பதால், உங்களின் படத்தில் உள்ள கொழுகொழு உடம்புடனும், திருதிரு விழிகளுடனும் கூடிய அருமையான குழந்தை போலவே “நாக்கு நாணாம் இந்தக் கதை என்று சொல்லமுடியாதவனாக அதாவது [நேக்கு வேணும் என்ற அர்த்தத்தில்] மழலை பேசியுள்ளேன்.
உங்களுக்குத் தெரியாததா என்ன?
என் ப்ளாக்கியுடன் தனிமையில் என்னைக் கொஞ்சநேரமும் கொஞ்ச விடாமல் ”தங்களின் இந்த விமர்சனம் புரியவில்லையே” என்று ஒரு பந்தை விட்டெறிந்து வேடிக்கைப் பார்ப்பதில் உங்களுக்கு ஒரு தனி ஆசை. OK OK
எப்படியிருந்தாலும் இந்த விளக்கத்தையும் என் ப்ளாக்கியுடன் இணைந்தே தான் தர வேண்டியுள்ளது.
இரண்டு பேரும் இணைந்தால் தான் கதையோ, கச்சேரியோ, பின்னூட்டமோ.
இப்போ எனக்குத் திருப்தி - அப்போ உங்களுக்கு?.
திருப்தி தான்!
நா இந்த பாகுலதான் இப்பேன்.வத மாத்தேன் போ!ஆத்.ஆத்.ஆத் மாம்மா தான் செல்ல மாமா...
ராஜேஸ்வரி மேம் ..மிக்க நன்றி தங்கள் வருகைக்கு!
சூப்பர் மோஹன்!
ஏய் சனியனே.. சோத்தைத் திங்காம அங்க என்ன வேடிக்கை?
ஆர் ஆர் ஆர் தாத்தா என்னமா சோறூட்டறா.. நீயும் இருக்கியே.. நா அங்கியே போறேன். போ.. நீ.. நாணாம்..
ம்ம்.. இப்படி எல்லாப் புள்ளைகளும் அங்க போயிட்டா இந்த மனுஷன் கிட்ட எவ பேச்சு வாங்கறது..
ரிஷபன் இப்ப திருப்தியா! எங்க காலனிப் பசங்கக் கிட்ட ’சிங்கிளா இருந்தாத் தான் அங்க்கிள்னு கூப்பிடணும்.எல்லாரும் இருந்தா ஸார்னு கூப்பிடணும் என்னை’ என்று அவ்வாறு கூப்பிடுவதற்கு
பென்சில்,பலப்பம்,கோலி,பஞ்சு மிட்டாய், கமர்கட் கொடுத்து எல்லாரையும் தாஜா பண்ணிட்டு இருக்கேன்.இப்படி டமால்னு ஒடைச்சிட்டீங்களே..இதுக்காகத் தான் என் ஃபோட்டோவையே நான் ப்லாகில போடாம இருக்கேன்! உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலே! போங்க.ஊம்...ம்...ம்ம்ம்ம்!!
வாசன் சார்... நீங்க சாலமன் மன்னனை சொல்லியிருக்கிறீர்கள்.. நான் சாலமன் பாப்பையா என்று நினைத்து விட்டேன். சாரி.. தராசு முள் வழுவாமல் தீர்ப்பு சொல்வதில் இருவரும் வல்லவரே!
சொல்ல வந்த விஷயம் பிரமாதம்
அதைவிட சொன்னவிதம்
கருவின் போக்கில் நடை
முடிவு செய்யப்படுமாயின்
படைப்பு உச்சத்தைத் தொடும்
என்பதற்கு தஙகள் படைப்பே சான்று
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
குழந்தை ரொம்ப சமத்து!
காருண்யம் என்பது குழந்தையிடம்தான் பிறக்கிறது! இந்த அவசர யுகத்தில் நமக்கு மறந்து போன நல்லதொரு விஷயத்தை குழந்தை சுட்டிக் காண்பிக்கிறது! அழகாய் முடித்திருக்கிறீர்கள் கதையை!!
க்ளாஸிகல் ஆர்.ஆர்.ஆர். சார்.
குழந்தைமையை வளரும்போதே உதிர்த்து விட்டு மறுபடியும் குழந்தையின் உலகில் சில காலம் இருந்து இறுதியில் வயோதிகத்திலும் இதே சாப்பித மாத்தேன் போவில் வந்து சேர்ந்து மரிக்கிறான்.
அபாரமான தீம். எளிமையான ப்ரெசெண்டேஷன்.
Post a Comment