” ஹல்லோ..துரைசாமி சாரா...”
“ ஆமா... நீங்க....”
” நான் தான் சார்..”
“ அட நீங்களா?, எப்படி சார் இருக்கீங்க?”
“ நல்லா இருக்கேன்... நீங்க?”
“ ஏதோ இருக்கேன்..”
“ உங்க எழுத்தப் பார்த்து ரொம்ப நாளாச்சு? ஏன் சார் எழுதலை?”
“ அதை கேக்கறீங்களா..அது ஒரு சோக கதை சார்..”
“ அந்த கதையை ப்லொக்கில எழுதுங்க, சார்..படிக்கிறோம் ”
“ கதையே அதைப் பற்றித் தான் சார்”
“ என்ன சார், அப்படி?”
” கம்ப்யூட்டர்ல கவுத்துக்கிட்டு என்ன பண்றீங்கன்னு வூட்ல டெய்லி திட்டு..ஏதாவது வருமானம் வந்தாலும் பரவாயில்ல..ஒரு பைசா ப்ரயோஜனமில்ல..என்ன ஒரேயடியா மூழ்கிப் போறீங்கன்னு..அப்படீன்னு டெய்லி சண்டை..போதாத குறைக்கு பொண்ணு வேற..அப்பா எனக்கு இது தான் ப்ரட்.லைஃப் ப்ரச்னை...ஒன் பொழுது போக்குக்கு சிஸ்டத்தை எடுத்துக்கிட்டா, என்னால எப்படி ப்ராஜக்ட் பண்ண முடியும்னு அவ கத்தல்...மெயில் செக் பண்றதுக்குக் கூட கெஞ்ச வேண்டியிருக்கு ”
“ அடப் பாவமே!”
“ அதை ஏன் கேக்கறீங்க...உணர்ச்சியைக் கொட்டி எழுதறோம்..உங்கள மாதிரி ப்லாக்கர்ஸ்கிட்டயிருந்து ஒரு ஷொட்டு கிடைச்சா, மனசுக்கு ஏக சந்தோஷம்..அது எவ்வளவு காசு கிடைச்சாலும் வராதுங்கறது யாருக்கும் தெரிய மாட்டேங்குது.”
“அதுக்காக எழுதறத விடாதீங்க சார்..உங்க விசிறி நான்”
“ என்ன பண்றதுன்னு தெரியலே..ஒவ்வொரு குடும்பத்தில எல்லாருமே எழுதறாங்க..அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.அட்லீஸ்ட் அவங்க எழுத வேண்டாம்.. நாம எழுதறதை ரசிச்சாலே போறும்..இதனால வீட்டில நிம்மதி போயிட்டது...”
“ அடாடா..”
“ ரொம்ப கஷ்டமாயிருக்கு சார்...பொறுத்து பொறுத்துப் பார்ப்பேன்..முடியாம போச்சுன்னா..
டைவர்ஸ் பண்ணிடலாம்னு கூட தோணுது”
“சிஸ்டரையா?”
“சிஸ்டத்தை!”
27 comments:
அடடா ஒரே புலம்பலா இருக்கே....
பேசாம ஒரு குவாட்டரை உட்டுட்டு கவுந்துருங்க மக்கா...
//ரொம்ப கஷ்டமாயிருக்கு சார்...பொறுத்து பொறுத்துப் பார்ப்பேன்..முடியாம போச்சுன்னா..
டைவர்ஸ் பண்ணிடலாம்னு கூட தோணுது”
“சிஸ்டரையா?”//
இந்த லொள்ளுக்குதான் வீட்டம்மாகிட்டே அடி வாங்குறது ஹா ஹா ஹா...
எல்லார் வீட்டிலேயும் இதே பிரச்சனை தான் போலிருக்கு. நல்லாவே சொல்லிட்டீங்க.
ஆனால் அதற்காக டைவர்ஸ் எல்லாம் பண்ணாதீங்க. தனியா ஸ்டெப்னி மாதிரி உங்களுக்கு ஒண்ணு செட்-அப் பண்ணிக்குங்க. உங்க கபாசிட்டிக்கு ஒண்ணு என்ன இரண்டு மூணு கூட வைச்சுக்கலாம். All the Best. வாழ்த்துக்கள்.
வை கோ சார் சொன்னைதையே வழி மொழிஞ்சிக்கறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//ஆனால் அதற்காக டைவர்ஸ் எல்லாம் பண்ணாதீங்க. தனியா ஸ்டெப்னி மாதிரி உங்களுக்கு ஒண்ணு செட்-அப் பண்ணிக்குங்க. உங்க கபாசிட்டிக்கு ஒண்ணு என்ன இரண்டு மூணு கூட வைச்சுக்கலாம். All the Best. வாழ்த்துக்கள்.//
சிஸ்டத்த தான் சொல்றீங்களா இல்ல...
டைவர்ஸ் பண்ணிடலாம்னு கூட தோணுது”
“சிஸ்டரையா?”
“சிஸ்டத்தை!”
..... Very funny!!!!! :-)))))))
bandhu said...
//ஆனால் அதற்காக டைவர்ஸ் எல்லாம் பண்ணாதீங்க. தனியா ஸ்டெப்னி மாதிரி உங்களுக்கு ஒண்ணு செட்-அப் பண்ணிக்குங்க. உங்க கபாசிட்டிக்கு ஒண்ணு என்ன இரண்டு மூணு கூட வைச்சுக்கலாம். All the Best. வாழ்த்துக்கள்.//
/சிஸ்டத்த தான் சொல்றீங்களா இல்ல.../
இராமமூர்த்தி, சார். இதை நான் எதிர்பார்க்கலை.
எல்லோரும் சேர்ந்து என்னை தங்கள் திருமதியிடம் மாட்டிவிட்டு விடுவாங்களோன்னு, பயமா இருக்கு.
[ஏற்கனவே ஒரு பதிவிலே, திண்ணையில் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது, வீட்டிலிருந்து தட்டுகள் பறக்கும் என்று எழுதியிருந்தீர்கள்].
அதனால் விளக்கவுரை கொடுத்து விடுகிறேன்.
இப்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் தனித்தனி சோப்பு, சீப்பு, செல்போன் என்று இருப்பது போல, ஆளுக்கொரு கம்யூட்டரோ, லேப்டாப்போ வைத்துக்கொள்ளணும் என்று தான் ஆலோசனை கொடுத்திருந்தேன்.
இதை சிஸ்டரின் கவனத்திற்கு மறக்காமல் கொண்டுசெல்லவும்.
அப்போது தான் நான் என்றாவது ஆரண்யநிவாஸுக்கு விஜயம் செய்யும் போது (ஹெல்மெட்டுடன் தான்) பறக்கும் தட்டுகளால் ஆபத்தில்லாமல் இருக்கும்.
மொத்தத்தில் எதுசொன்னாலும், (நாக்கில் சனி என்பார்களே அதுபோல) வம்பாகிப் போய்விடுகிறது.
அதுக்காக எழுதறத விடாதீங்க சார்..உங்க விசிறி நான்
எதிரிலிருப்பதை மகளுக்கு ப்ரட்டாக்கி விட்டு மடியிலொன்று வைத்தால் தீர்ந்தது பிரச்சனை. ஆரண்ய நிவாஸ் அலங்கார வளைய வாயிலுக்கு இதென்ன பெரிய விஷயமா என்ன... சிஸ்டரையும் இதில் மூழ்கடித்து விடுங்களேன்... கூட்டணி பலத்தில் வெற்றிவாய்ப்பை உறுதி செய்யலாம்...
புது லேப்டாப் வாங்குமுன் கொஞ்சம் பொறுங்கள்; வீட்டில் ப்ளஸ் 1,2 மாணவர்களோ கல்லூரி மாணவர்களோ இருந்தால் இலவசமாகவே கிடைக்கும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்!!
//புது லேப்டாப் வாங்குமுன் கொஞ்சம் பொறுங்கள்; வீட்டில் ப்ளஸ் 1,2 மாணவர்களோ கல்லூரி மாணவர்களோ இருந்தால் இலவசமாகவே கிடைக்கும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்!! //
yes, wait till that time :)
எல்லார் வீடுகளிலும் குறைந்தது 3, 4 கடிகாரமாவது
டிக்கிக்கொண்டு இருக்குமே. அத்போல 2 லாப்டாப்பும் வச்சிக்க வேண்டியதுதான்.செல்போன்கூட ஆளுக்கு ஒன்னோரெண்டோ வச்சிட்டு இருக்காங்களே.
புரியுது தல புரியுது! இப்படில்லாம் எழுதினா, இதைப் படிச்சிட்டு கலைஞரோ அம்மாவோ உங்களுக்கு மடிகணணி தருவாங்கன்னு பாக்குறீங்களா? என்னோட வாங்க! பெருகமணி ஹைச்கூல்ல பிளஸ்டூ சேரப் போறேன்.கூட சேர்ந்தீங்கன்னா புதுக்கணணில வலைப்பூவுல வாலிபமா எழுதலாம்.
ஹா. ஹா..
சிஸ்டரையா
சிஸ்டத்தை!
செம காமெடி
மோகன் ஜி.. உங்க பின்னூட்டம் சூப்பர்.. பெருகமணி ஸ்கூல்ல எனக்கும் சீட்டு பிடிங்க..
நாஞ்சில் மனோ, க்வார்ட்டர்னா என்னாங்க..ரயில்வே க்வார்ட்டர்ங்கறாஙகளே...அது மாதிரிங்களா?
நான் லாம் அடி வாங்க மாட்டேங்க..அடிக்கறா மாதிரி நடந்துக்க மாட்டவே மாட்டேனாக்கும்!
ஏற்கனவே ஒண்ணு இருக்கு...ஹி..ஹி... நான் சிஸ்டத்தை சொன்னேன்....அதை விற்க முடியாம அல்லமாடிக் கிட்டு இருக்கேன்....பழைய கம்ப்யூட்டருக்கு பச்ச மொளகாய் கூட தர மாட்டேங்கிறான்!
ஸ்ரீராம் நீங்க பச்சபுள்ள ..வைகோ சாரோட சேர்ந்து கெட்டுப் போகாதீங்க...
பந்து..அவங்க சிஸ்டத்தை தான் சொல்றாங்க.. நா
பச்ச மண்ணாக்கும்...தப்பு தண்டா செய்ய தெரியாது!
வருகைக்கு நன்றி, சித்ரா!
[ஏற்கனவே ஒரு பதிவிலே, திண்ணையில் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது, வீட்டிலிருந்து தட்டுகள் பறக்கும் என்று எழுதியிருந்தீர்கள்].
அந்த பதிவு இதோ....
http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/03/blog-post_19.html
நிலாமகள் போன்ற கவிதாயினி என் எழுத்தின் விசிறி என்றால் இன்னமும் சிறப்பாக எழுத வேண்டும் என்கிற பொறுப்பு கூடுகிறது, சகோதரி எனக்கு!
மிடில் க்ளாஸ் மாதவிக்கு, எங்கள் வீட்டில் எல்லாரும் படிப்பை முடிக்கப் போகிறார்கள்.. நான் தான் அரியர்ஸ் வைத்துக் கொண்டு அல்லமாடுகிறேன்.வயோதிக வாலிப மாணவர்களுக்கு மடிக் கணிணி யாராவது தருவார்களா, என்ன?
மிக்க நன்றி நாகசுப்ரமணியன் சார்..இலவு காத்த கிளி போல, மடிக்கணிணிக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்...
நீங்க சொல்ற வேகத்தைப் பார்த்தா, டூத் ப்ரஷ் போல ஆயிடும் போல இருக்கே, லாப்டாப்பும்!
பெருகமனி ஸ்கூல்ல எனக்கும் ஒரு சீட் கொடுங்க.. நானும் ரிஷபனோட வந்துடறேன், மோஹன்ஜி!
பொதுவா ஒண்ணு சொல்ல விரும்பறேன்..உங்க எல்லாரோட கமெண்ட் பார்த்து,“கண்ணா..இன்னொரு லட்டு திங்க ஆசையான்னு’ மனசுக்குள்ள் பட்சி கத்த ஆரம்பிச்சிடுச்சு! அதனால, எனக்கு பயம் வந்துடுத்து..உங்க எல்லார் பேச்சும் கா!!!!!!!!
Post a Comment