Thursday, January 27, 2011

தாய் மண்ணே வணக்கம்!!

( எங்கள் கார்த்திகேயன் கார்டன் காலனியில் இந்த குடியரசு தினமன்று கொடி ஏற்றிக் கொண்டாடினோம். எமது நீண்ட நாள் கனவு இது! மாலையில் ஃபேன்ஸி ட்ரஸ், மியூசிக் போட்டி..அந்தாக்ஷரி என்று ஏக அமர்க்களம்.அதை நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறோம்..சிறப்பு விருந்தினர்
எங்கள் வார்டு கவுன்ஸிலர் திரு கனக ராஜ் அவர்கள் )
படம் 1

கொடி ஏற்றுவதற்கு முன்பு எங்கள் காலனி வாண்டுகள் அழகாக MARCH PAST செய்தது
கண் கொள்ளாக் காட்சி! ஒவ்வொருத்தனையும் பார்த்தா மிலிடரி ஜவான் போல இருந்தது.அதிலும் அந்த வைகுந்த் சூப்பர்!
படம் 2


அனைவருக்கும் ஆரஞ்சு மிட்டாய்!
படம் 3


தாயின் மணிக்கொடி பாரீர்!
படம் 4


குட்டிக் கிருஷ்ணன் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என்று அந்த பனியில் பாடியது செம கலக்கல்!
படம் 5

விவேகானந்தரின் சிகாகோ உரை! ஐஸ்வர்யா சூப்பர்!!
படம் 6


கட்டபொம்மன் வீர வசனம் கேட்டு, அந்த ஜாக்ஸன் துரை நொந்து நூடில்ஸ் ஆகி துப்பாக்கியை வீசி விட்டு ஓட .......
படம் 7



கன்னடத்துப் பைங்கிளி கேள்விப் பட்டிருக்கிறோம்.இது கேரளத்துப் பைங்கிளி!
படம் 8



வன தேவதை!
"நீங்கள்ளாம் ரொம்ப சந்தோஷமாய் இருக்கீங்க..உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்க!" என்று தேவதை சொன்னது தான் தாமதம்..ஆடியன்ஸ் எல்லாரும் "ஆளுக்கொரு கிலோ வெங்காயம் கொடு தேவதையே" என்று
கோரஸாகக் கத்த, தேவதை எஸ்கேப்!!
கவுன்சிலர் உரை!
ரொம்ப சந்தோஷமாய் இருக்கு! இனிமே அடுத்த கொண்டாட்டம் சமத்துவ பொங்கல் என்று சொன்னவுடன்........
திடீரென்று ஒரு உருவம் கருப்புத் துணி பார்த்தி..'சமத்துவ பொங்கலா கொண்டாடணும்...அதை இப்பவே கொண்டாடலாம்' என்று ஒரு மண் பானை,விறகுடன் ஓடி வந்தவுடன் நாங்கள் பயந்து விட அட..
அது நம்ம தாசில்தார் ஸார்!!!
We are happy to be in such an environment!!!!!!

20 comments:

raji said...

நல்லாருக்கே கொண்டாட்டம். மாறுவேஷ ஃபோட்டோவில்
குழந்தைகள் கலக்கிருக்காங்க.
சூப்பர்னு சொன்னதாவும்,பாராட்டுக்களையும் எல்லா
குழந்தைகளுக்கும் என் சார்பில் நீங்க சொல்லிடுங்க சார்
பகிர்வுக்கு நன்றி

சிவகுமாரன் said...

குழந்தைகளை பார்த்தாலே மனதுக்குள் ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்கிறது.
சந்தோசமான பகிர்வு.

Chitra said...

வாசிக்கும் போதே.... மனதில் ஒரு சந்தோஷம் பிறக்குது.... சூப்பர் படங்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

படம் 2 இல் இடதுபுறம் ஓரமாக ஒருவர், மிகவும் கம்பீரமாக, சட்டைப்பையில் மூவர்ணக்கொடியுடன்,
நெற்றியில் சந்தனக் கீற்றுடன், அதன் நடுவே மிகச்சிறிய குங்குமப் பொட்டுடன், ரோஸ் கலர் அரைக் கைச் சட்டையுடன், கைகளை இரண்டையும் பேண்ட் பைகளுக்குள் விட்டவாறே, குளுமையாக கூலிங் க்ளாஸ் அணிந்து, தொலை நோக்குப் பார்வையுடன், இந்தியக் குடியரசு தினக் குதூகுலத்துடன் ... அவரை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் ... எனக்கு மிகவும் பரிச்சயமானவர் தான் .... அவர் யார்?


ஆஹா! இப்போது நினைவுக்கு வந்து விட்டது ....
என் அருமை நண்பர்,[ ஒன்றுக்கு இரண்டு, __________ க்கு மூன்று ] மூன்று ப்ளாக்குகளில் உலா வரும் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தியே தான் ... தினமும் அவரைப் பலமுறை நேரில் சந்தித்த நான், இப்போது பல மாதங்களாக சந்திக்காததால், சற்றே தடுமாற்றமாகி விட்டது, எனக்கு.

தாராபுரத்தான் said...

அருமைங்க.

middleclassmadhavi said...

கலக்கல்!!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வை.கோ.சார் புண்ணியத்துல கொண்டாட்டங்களுக்கு நடுவில் க்ளோஸப்ல இதுக்குக் காரணமான பெரிய குழந்தையையும் தரிசனம் பண்ணிட்டோமே!

வெங்கட் நாகராஜ் said...

குடியரசுதினக் கொண்டாட்டம் நன்று. சிறு குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சி கண்டு நமக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது.
நல்ல பகிர்வுக்கு நன்றி.

சுந்தரா said...

கொண்டாட்டமும் குழந்தைகளின் புகைப்படமும் அழகு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அடையாளம் காட்டியவரையும், அடையாளம் காட்டி எழுதியுள்ள திரு சுந்தர்ஜி அவர்களுக்கு நன்றி.

திரு. ஆரண்ய் நிவாஸ் இராமமூர்த்தி என்னுடைய ஆருயிர் நண்பர். ஒரே அலுவலகத்தில் ஒரே துறையில் நீணட நாட்கள் சேர்ந்து வேலை பார்த்தோம் நாங்கள். பஸ்ஸிலோ, கேண்டீனிலோ எங்கு சந்தித்தாலும், எப்போதும் நகைச்சுவை கலந்து பேசிய நாட்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

நான் ஓய்வு பெற்றதால் அன்றாடம் பார்க்க முடியவில்லையே என்ற தாபம் எனக்கு.

ரிஷபன் said...

கொண்டாட்டம் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது அழகழகான படங்களைப் பார்த்து.

vasan said...

எங்க‌ளையும்.. கூப்டிருக்கால‌ம்.
எஞ்சாய் ப‌ண்ணிருப்ப‌ம்ல‌..
ப‌ட‌ங்க‌ள பார்த்தா, ரொம்ப‌ மிஸ் ப‌ண்ண‌ பீளிங்..
அருமை ஆர் ஆர் ஆர்.(உங்க ஸ்டைல் சூப்ப‌ர்)
நான் எழுத்தை மட்டும் சொல்ல‌லை!

ADHI VENKAT said...

கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் கண்டு களித்தோம். குழந்தைகள் அழகாக இருந்தனர். அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லிடுங்க சார்.

வசந்தமுல்லை said...

வாழ்த்துக்கள் . குடியரசு தின
கொண்டாட்டங்களை
போடோக்களில் பார்த்து மகிழ்ச்சி.
அதுவும் நீங்கள் கம்பீரீமாக.
என்ன இங்கே புல்லாங்குழல்
வாசிக்கவில்லையா?
இங்கே நான் உங்களுக்கு
மைக் பிடிக்கவில்லை என வருத்தம்.

Thenammai Lakshmanan said...

சே வரத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்க ஆர் ஆர் ஆர் ஒரு நாலு கிலோ வெள்ளி கேட்டு இருக்கலாம்..:))

Matangi Mawley said...

i love fancy dress contests! :) romba santhoshamaa irunthathu photos paakka...

jolly read, sir!

சிவகுமாரன் said...

வருந்தி அழைப்பதால் வருத்தப்பட வேண்டாம் . வலைப்பக்கம் வாருங்கள்
அய்யா.

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு! சின்ன வயது பள்ளி நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்! மறுபடியும் இந்த வயதில் சிறுவர்கள், சிறுமிகளுடன் கொண்‌டாடுவது, மறைந்த இளமை திரும்பவும் வரமாகக் கிடைத்தது போலத்தான்!!

வல்லிசிம்ஹன் said...

அடடா, இப்படியல்லவா கொண்டாடணும். ஒரு சுணக்கமில்லாம சந்தோஷமா இருக்கிற எந்த நேரமும் அருமையே. காலைக் கதிரவனோடு மணிக்கொடி பறந்த காட்சி மிக மிக அருமை. பாராட்டுகள் ஆர் ஆர் ஆர்.

அப்பாதுரை said...

இன்னும் கொண்டாடிட்டிருக்கீங்களா.. பரவாயில்லை.