Tuesday, January 4, 2011

அட..இது தானா சேதி?

“ அண்ணாச்சி”
“என்ன அண்ணாச்சி ”
முதலாளி அப்படி பேசுகிறார் என்றால்,ஐயா ஜாலி மூடில் இருக்கிறார் என்று அர்த்தம்.
“ ஒண்ணு கேட்கலாமா?” என்றான் கடைப் பையன், மீண்டும்.
“சொல்லுலே”
“ இப்ப வந்துட்டுப் போனாரே “
“ ஆமா, நம்ம ஃப்ரெண்ட் பரந்தாமன்..அவனுக்கு என்ன?”
” அவர் எவ்வளவு தபா நம்ம கடைக்கு வராரு..”
” நிறைய தடவை வரான்..அதுக்கென்ன?”
“ அவர் உங்க கிட்ட என்ன கேட்டாரு?”
” சும்மா பேசிட்டுப் போனான்..எம்மேல அவனுக்கு பிரியம் “
“ இல்ல..அவர் உங்க கிட்ட ஸ்வீட் கேட்கறாரு..ஒவ்வொரு தபாவும் நீங்க மளுப்பி
அவரை அனுப்பறீங்க..என்கிட்ட சொல்றீங்க யாராவது சும்மா பேசினாக் கூட கால் கிலோ
ஸ்வீட் பாக்கெட்ட அவிங்க தலையில கட்டுங்கீறீங்க.. நீங்க என்னடான்னா சும்மா பேசி அனுப்பறீங்க..உங்களுக்கு ஒரு நியாயம் ..கடைக்கார பசங்க எங்களுக்கு ஒரு நியாயமா
சொல்லுங்க அண்ணாச்சி “
”அட மடப் பய மவனே”
விழுந்து..விழுந்து சிரித்தார், அண்ணாச்சி.
“ அவனுக்கு ஷுகர்டா..ஸ்வீட் சாப்பிட்டா சக்கரை எகிறிடும்..அவனுக்கு லட்ச ரூபாய்
கடன் கொடுத்திருக்கேண்டா...மக்குப் பயலே..ஸ்வீட் கொடுப்பேனா, நான்?”

15 comments:

இராமசாமி said...

நல்லா இருக்குங்க...

வெங்கட் நாகராஜ் said...

அதானே சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கவா முடியும்? நல்ல கதை...

ஸ்வர்ணரேக்கா said...

//அவனுக்கு லட்ச ரூபாய்
கடன் கொடுத்திருக்கேண்டா//

-- அச்சச்சோ... நண்பேண்டான்னு நினைச்சுட்டேன்....

vasan said...

ஆரிய‌க்கூத்தாடினாலும் தாண்ட‌வக் கோனே,
கொண்ட‌ காரிய‌த்தில் க‌ண் வைய‌டா ...
பாட‌ல் ச‌ட்டென நீண்ட‌ காலத்திற்குப் பின்
நினைவோடையாய்....

சுந்தர்ஜி said...

அண்ணாச்சி எவ்வளோ வெவரமான ஆளு பாத்தீஹளா? இந்தக் காலத்துல இவ்ளோ உஷாரா இருந்தாலும் கடன் பைசல் ஆவமாட்டேங்குதுன்னு அலுத்துக்கிடுதவங்களும் இருக்கத்தான் செய்தாஹ.

பொடி வெச்சு எளுதுன ஒங்க வாய்க்கு சக்கரப் பொடிதான் போடணும் ஆர்.ஆர்.ஆர். சார்வாள்.

Chitra said...

:-))

HAPPY NEW YEAR!!! HAPPY PONGAL!!!

VAI. GOPALAKRISHNAN said...

அண்ணாச்சிக்கு நோக்கம் ஸ்வீட்டானது தான்.
ஆனால் அவரின் உள்நோக்கம் கசப்பானது.

vasan said...

அண்ணாச்சி வாயில தேன் தான்,
ஆனா,ம‌ன‌சுல‌ விஷ தேள் தான்.
இப்ப‌டியும் சொல்ல‌லாமா வைகோ சார்.
:(க‌ல்கில மூனு வில்ல‌ன்க‌ள் க‌ம‌ண்ட்/ப‌ட‌ம் சூப்ப‌ர்:)

VAI. GOPALAKRISHNAN said...

19.12.2010 தேதியிட்ட கல்கியின் பக்கம் எண் 59 ஐப் பார்த்து, அந்த மூன்று வில்லன்களில் நானும் ஒருவன் என்பதை எப்படியோ துப்பறிந்து, முதன் முதலாகப் பாராட்டியுள்ள நபர் நீங்கள் தான். மிகவும் நன்றி திரு வாஸன் அவர்களே !

Lakshminarayanan said...

பரந்தாமனுக்கு அண்ணாச்சி ஸ்வீட் கொடுக்கலன்னா என்ன? நம்ப ஆர்.ஆர்.ஆர்.அண்ணாச்சி நமக்கெல்லாம் குடுத்திட்டாரே அரை கிலோ அல்வா.....

கே. பி. ஜனா... said...
This comment has been removed by the author.
கே. பி. ஜனா... said...

அட இப்படி ஒரு கோணம் இருக்கா? எல்லாமே சுயநலம் தான் போலும்!

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான பதிவு! மனிதர்களில் பலர் இப்படித்தான்!

கோவை2தில்லி said...

அருமையான கதை.

சிவகுமாரன் said...

நான்கூட நண்பருக்காக கரிசனப்படுறாரோன்னு நெனச்சேன்.
கந்தனுக்கு புத்தி கவட்டையில.