தாளாமையுடன் தட்டு தடுமாறி நின்றாலும்,
வேளாண்மை செய்யும் விவசாயப் பெருங்குடியே,
விருப்பத்துடன் நீ செய்த இவ்வுழவுத் தொழிலால்,
இருக்குதய்யா இவ்வுலகம் இந்த மட்டில்!
பருப்புடன் பானையிலே பொங்கி வந்த பொங்கலிது,
பிம்பமாய் உன் உருவம் அதில் எனக்குத் தெரிகிறது!
உழவென்னும் பெருந்தொழிலை வந்தனை செய்து,
உறவெல்லாம் சேர்ந்திங்கு உல்லாசம் பொங்கி வர
செந்நெல் செழிக்க, செங்கதிரோன் வருகையினை,
எல்லாருமாய் ஒன்று கூடி எழுச்சியுடன் வரவேற்போம்!
9 comments:
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்....
உவப்புடன் உழைக்கும் உழவர்களுக்கு வந்தனம் செய்த கவிதை அருமை....
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
ஆம், எல்லோருமாய் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் வரவேற்போம். [ கூடுமிடம், நாள், நேரம் தெரிவிக்கவில்லையே! ஸ்வாமி ]
உழவர்களை நன்றியுடன் நினைவுகூரும் அருமையான கவிதை....அனைவர்க்கும் எம் பொங்கல் நல்வாழ்த்துகள் !!!
பொங்கல் நல்வாழ்த்துகள்
பொங்கல் நல்வாழ்த்துகள்
அழகு தமிழில் எழுதியிருக்கும் கவிதை அருமை!
happy happy pongal, sir ungalukkum....
romba azhagaa irunthathu unga pongal vaazhththu! :)
உழவர்களுக்கு நன்றி கூறும் இந்த கவிதை அருமை சார்.
Post a Comment