வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம்!
“ஆட்டோ வந்தாச்சு..”
ஒரு பரபரப்பு எல்லாரிடமும் தொற்றிக் கொள்ள,
“..ஹோட்டல்ல, அடிக்கடி சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதேப்பா.. நேரத்துக்கு ஆஃபீஸ் விட்டதும்,வீட்டுக்கு வந்துடு. க்ளப்ல போய்’பிரிட்ஜ்’ விளையாடிட்டு, நேரம் கெட்ட நேரத்துல வீட்டிற்கு வந்தால், அவளுக்குத் தான் கஷ்டம்..பொறுப்பா நடந்துக்கோ..புள்ளைங்க காலேஜ்ல படிக்குதுன்னு அசட்டையா இருக்காதே.. நாம படிக்க சொன்னாத் தான் அதுங்களும் படிக்கும்.
சனிக்கிழமை தவறாம எண்ணெய் தேச்சுக்கோ..அடிக்கடி எங்களை வந்து பாருப்பா..முடியலேன்னா, ஃபோனாவது பண்ணு..’
இப்படி எதுவும் அட்வைஸ் பண்ணாமல்,விருட்டென்று ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டாள்,காந்திமதி. நெல்லையப்பரும் இரண்டு சூட்கேஸ்களுடன் வந்து உட்கார்ந்து கொள்ள, ஆட்டோ கிளம்பியது.
முதல் இரண்டு நாட்கள் சிரமமாகத் தான் இருந்தது. போகப் போக பழகி விட்டது.
காலையில் சுப்ரபாதம் அல்லது விஷ்ணு சஹஸ்ர நாமம். சுடச் சுட காஃபி அல்லது டீ..
காலை டிஃபன் இட்லி, உப்புமா, பொங்கல், பூரி , தோசை என்று ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மெனு. மதியம் உணவுடன் எதாவது ஒரு பழம். இரவு சப்பாத்தி டால்..பிறகு பால்!
வாரம் ஒரு நாள் பஜன்..கூட்டுப் பிரார்த்தனை..தோட்ட வேலை..கேரம் போர்டு,பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இயற்கை உணவு..பூப்பந்து விளையாட்டு..எண்ணெய்க் குளியல்...
முதுமையை, உறவுகள் உதிர்க்கும் பருவம் என்று யார் சொன்னது? உறவுகளை உதிர்க்கும்
பருவமல்லவா முதுமை?
நெல்லையப்பருக்கு திகைப்பான திகைப்பு..பிள்ளையின் மீது கண்,மண் தெரியாமல் பாசத்தை பொழிபவளால், எப்படி திடீரென்று வெட்டிக் கொண்டு வர முடிந்தது? அதுவும் நாம்
ரிடையர்டாகி முழுசாக ஒரு மாதம் கூட ஆகாத இந்த நிலையில் எதற்கு இந்த திடீர் முடிவு?
பொறுக்க முடியாமல் கேட்டே விட்டார், நெல்லையப்பர்.
“ என்ன காந்திமதி ஏன் திடீர்னு இப்படி ஒரு முடிவு?’ அவரால் பேச முடியவில்லை.
குரலில் அப்படி ஒரு தழுதழுப்பு!
CHOICES
(1) “ அதுவா, ஒண்ணுமில்லீங்க.ரொம்ப நாளா நினைச்சது தான் இது! இப்ப தான் கை கூடி இருக்கு..நம்ம ரகு நம்மையே சார்ந்து இருந்துட்டான்..இத்தனை வருசமாகியும், தலைக்கோசர புள்ளங்க இருந்தும் எதையும் சுயமா முடிவெடுக்க முடியாம நம்மளையே சுத்தி,சுத்தி வந்தா அவனுக்கு எப்படிங்க பொறுப்பு வரும்? நாளைக்கே நமக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா புள்ள தவியாய் தவிச்சு போயிடும். அது கூடாதுன்னு தான் இந்த பிரிவு!அவன் சுயமா தன் காலில் நிற்கணும்னா, நாம வெளியே போய்த் தான் ஆகணும். இல்லீங்களா?”
(OR)
(2) " நீங்க இப்ப ரிடயர்ட் ஆகிட்டீங்க.. உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை.... கூட்டுக் குடும்பத்தில யாராவது எதாவது சொன்னாக் கூட நம்மள பத்தி தான் சொல்றாங்களோன்னு உங்களுக்கு தோண ஆரம்பிச்சுடும்..சாதாரணமா காய்கறி வாங்கிண்டு வரச் சொன்னால் கூட ’வேலை, வெட்டி இல்லாமல் சும்மா தானே இருக்காரு..போய்ட்டு வரட்டுமேன்னு தானே சொல்றாங்கன்னு உங்களுக்குள்ளே ஒரு கழிவிரக்கம் வந்துடும்! இந்த சமயத்தில நாம ஒதுங்கி இருந்தா அனாவசியமா சண்டையும் வராது..உறவும் பலப்படும் ..’தூர இருந்தால் சேர உறவு’
இல்லையா?”
(OR)
(3) ” எத்தனை நாள் தான் நானும் உழண்டுண்டே,உழைச்சுண்டே இருக்கிறது? நீங்க ரிடையர்டாகிட்டீங்க.. நான் ரிடையர்டாக வேண்டாமா?”
( இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு சந்தோஷப் படுகிறேன் )
அன்பு தாய் மார்களே !
அருமை தந்தை மார்களே !!
எனதருமைத் தோழர்களே..தோழியர்களே !!!
இந்த மூன்று CHOICE களில் ஏதாவது ஒன்றை MATCH செய்து கொள்ளவும். பெருவாரியான முடிவையே கதையின் கடைசி பாராவாக சேர்த்துக் கொள்வோமா? சரி தானே?
21 comments:
Multiple choice climax - Good idea! :-)
எந்த முடிவு பிடிக்குதோ அதை வச்சிக்கலாம். அட இது நல்லா இருக்கே… :)))))
புதிய முயற்ச்சி(முடிவு)!
பிள்ளைகள் பெரியவர்களாகி அவர்களுக்கு மனைவி குழந்தைகள் என்று குடும்பஸ்தன் ஆனபிறகு தன்குடும்பத்தைக்காப்பாற்ற சரியான முடிவுகளை எடுக்க
தன்காலில் சுயமாக நின்று முடிவுகள் எடுக்க பெற்றவர்கள் விட்டுக்கொடுப்பதுதான் சிறந்தது.அவர்களுக்கு பொறுப்பும் வரும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் பெருகும். (எல்லாம் சொந்த அனுபவம் தாங்க)
interesting
மூணு முடிவுமே நல்லா பொருத்தமா அமையும் போது செலக்ட் பண்றது கூட கஷ்டம்தான்
different thinking.super
நெல்லையப்பர் காந்திமதி பெயர் பொருத்தத்திலேயே கதை அழகா ஆரம்பித்துவிட்டது... ஒன்று அல்லது இரண்டு முடிவு கொடுத்து எதாவது தேர்ந்தேடுக்க சொல்வார்கள்... நீங்கள் மூன்று முடிவு கொடுத்து மூன்றும் கனப் பொருத்தமாக வைத்து விட்டீர்கள்..
அருமை...
முதல் இரண்டு முடிவுகளும் அருமை...
மூணு முடிவுகளுமே நல்லாருக்கே :-)
முடிவெடுக்க முடியாமல் முடியைப் பிய்த்துக் கொள்ளும் படி மூன்று முடிவுகளைக் கொடுத்து விட்டீர்களே இப்படி !
சபாஷ் ஆராராரார் சார்.
சரளமான நடையும் புதிய கோணமும்.
நெல்லையப்பரும் காந்திமதியும் எடுத்த முடிவு சுவாரஸ்யமான திருப்பம் கூடிய முடிவு.
என்ன அடிக்கடி நெல்லை சமாச்சாரங்கள் கண்ணில் படுகின்றன உங்கள் எழுத்தில்?
சார்வாள் திருநெல்வேலியில் இருந்தீஹளோ?
சூப்பர் ஃபாஸ்டாகப் போகிற சுறுசுறு கதை அருமை. மூன்று முடிவுமே ரொம்ப sharp
முதலிரண்டும் ஒ.கே. மூன்றாவது... நடைமுறைக்கு சாத்தியமில்லை. நாங்கள் ராட்சசி என பேரெடுக்க விரும்புவதில்லை. தெய்வம், தேவதையென தூக்கிக் கொண்டாடிய நீங்களும் விடப் போவதில்லை.
கதை ரொம்ப விறுவிறுப்பா போனது. எனக்கும் முதல் இரண்டு முடிவும் தான் பிடிச்சிருக்கு சார்.
அட, இப்படி கூட சாய்ஸ் இருக்கா.. பேஷ்..
புதுமை & நைஸ்
/முதுமையை, உறவுகள் உதிர்க்கும் பருவம் என்று யார் சொன்னது? உறவுகளை உதிர்க்கும்
பருவமல்லவா முதுமை?/
Older the bull, harder the HORN.
:) naan itha pola choice oda climax katha padichchathilla! nalla idea! enakku option 1 rombave pidichchathu... 2-- nalla irukku... aanaa, enakku manasu kashtamaa irukku-ngarathunaala, naan 1 eduththukaren!
very nice sir! :D
பெரும்பாலான பெரியவர்களால் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க முடிவதில்லை. முதியோர் இல்ல வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் முதியோர்களுக்கும் வேண்டும், இளைய தலைமுறையினரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நம் சமூகம் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை.
தங்கள் சந்தேகம் தீர்க்க, துரியனின் சகோதரர்கள் பெயரை என் பதிவில் போட்டிருக்கின்றேன்.
படித்துப் பார்க்கவும்
முதல் இரண்டு முடிவுகளும் ஒன்று போலத்தான்.
மூன்றாவது நெத்தியடி.
Post a Comment