Thursday, October 21, 2010

அழகு!!!!


அடி வயிறு குழிந்து,
டொக்கு விழுந்த
கன்னத்துடன்,
கவித்வம் மிக்க
குறு நில விவசாயி,
ஒருவன்
குறுஞ்சிரிப்புடன்,
குடும்பத்துடன்,
பாடினான்:
' மாடு கட்டிப்
போரடித்தால்,
மீளாது செந்நெல்
என்று,
ஆடு கட்டிப்
போரடிக்கும்,
அழகான,
தமிழகமே!!!!!!!'

10 comments:

Chitra said...

இன்றைய நிலையை நினைத்தால், வேதனையாகத்தான் இருக்குதுங்க.

அன்பரசன் said...

வேதனையாக இருக்குங்க...

RVS said...

//ஆடு கட்டிப்
போரடிக்கும்,
அழகான,
தமிழகமே//நெசம்மாவேவா..

உங்கள் நினைவுகள் அருமை ஆர்.ஆர்.ஆர் சார்! கொஞ்சம் கொஞ்சமா படிச்சிகிட்டு இருக்கேன். ;-)

வெங்கட் நாகராஜ் said...

வேதனை... பல விளை நிலங்கள் குடியிருப்புகளாய் மாறி வருவதை நினைக்கும்போது.

ADHI VENKAT said...

விளைநிலங்களின் இன்றைய நிலையை நினைத்தால் வேதனையாகவும் , பயமாகவும் உள்ளது .

RVS said...

ஆர்.ஆர்.ஆர் சார்! ஊதி ஓடும் ரயில்... ரகளை.. ரகளை.. கொஞ்ச நாழி குரு, கிரி எல்லாரோடும் விளையாடினேன். ;-)

ப.கந்தசாமி said...

கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்கும் சக்தி மனிதனுக்கு இல்லை.

vasan said...

மாடு கட்டிப்
போரடித்தால்,
'மாளாது' செந்நெல்
என்ப‌தை "மீளாது"செந்நெல்
என மாற்றியதில் தான் ஆர் ஆர் ஆர்
நின்று, ஆ(வீ)டு க‌ட்டி பேரெடுக்கிறீர்க‌ள்.
அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒரு ராஜா யானை கட்டி போரடித்ததாக, வரலாறு படித்த ஞாபகம். அந்த நாளும் வந்திடாதோ !

யானைக்கொரு காலம் வந்தால் ஆட்டுக்கொரு காலம் வரும் புரிஞ்சுக்கோ ! என்று உள்ளது உங்கள் பதிவு.

மாடு ஆடு வீடு மாற்றங்கள் பற்றிய நல்ல பதிவு

Tamil Pralayam- தமிழ்பிரளயம் said...

அருமையான வரிகள் நண்பா..தொடருங்கள் உங்கள் கவி பயணத்தை...வாசகனாய் நன் பின்தொடுருவேன்...