Tuesday, October 12, 2010

ஹல்லோ...ஹல்லோ...

"ஹல்லோ...யார் பேசறது?"
" நா தானுங்க சம்முகம்..அதாவது எளுத்தாளர் ஏகாம்பரத்தோட விசிறிங்க.. ஐயா
இருக்காருங்களா?"
" அவர் பத்திரிகை ஆஃபீசில வேலை செய்யலேப்பா..பொழுது போக்குக்காக எழுதறவரு..என்ன விஷயம்?"
" ஒண்ணுமில்லீங்க..அவரு உங்க பத்திரிகை ஆஃபீசுக்கு வருவாங்களா?"
" வருவாரு "
" ஒண்ணுமில்லீங்கய்யா..அவரு ..அவரு எளுதின ' ஒரு கனகாம்பரம் கண் சிமிட்டுகிறது' ங்கற கதையில, கதாநாயகன் மகேசை அநியாயமா சாகடிச்சுட்டாருங்க..இந்த மாதிரி சாவடிக்கற கதையெல்லாம் அவரை எளுத வேண்டாம்னு சொல்லணும்ங்க. அதுக்குத் தாங்க ஃபோன் பண்ணினேனுங்க.."
" தம்பி, உங்க பேரு என்ன?"
" சம்முகம்"
" யோவ் சம்முகம், அந்த கதையில மகேசு சாகாட்டி கதை செத்துடும்யா..அது சரி..அவரு கதைங்கள்ளாம் உனக்கு பிடிக்குமா?"
" புடிக்குமாவது? உசுருங்க..சொல்லப் போனா, ஐயா கோச்சுக்காட்டி ஒண்ணு சொல்லட்டுங்களா ?"
" சும்மா சொல்லு, சம்முகம் "
" நான் உங்க பத்திரிகையை காசு கொடுத்து வாங்கறதே, நம்ம ஐயாவோட கதைங்களுக்காகத்தான்.."
" அப்படியா?"
" ஆமாமுங்க...'ராணி முத்துல சொல்லுவாங்களே, புத்தகத்தை விரிச்சா, படிச்சு முடிக்காம கீளே வைக்கறதில்லேன்னு..' அந்த மாதிரி டைப்புங்க..ஐயாவோட கதையெல்லாம்.."
" ஓஹோ!"
" ஐயா, ஒரு சின்ன விண்ணப்பமுங்க.."
" சொல்லு, சம்முகம்?"
" ஐயாவோட அட்ரசை சொல்லுங்கய்யா, நானே நேர போய் பார்த்துக்கறேன்.."
" அட்ரஸ்ல்லாம் சொல்லக் கூடாதுய்யா.. அவுரு இன்னிக்கு, நாளைக்கு வருவாரு..அப்ப சம்முகம்ங்கற உங்க ரசிகர் ஃபோன் பண்ணினாருன்னு சொல்றேன்"
" சந்தைபேட்டை சம்முகம் ஃபோன் பண்ணினாருன்னு சொல்லுங்கய்யா.."
"ஆகட்டும், சொல்றேன், சம்முகம்"
ஃபோன் டக்கென்று வைக்கப் பட்டது.
ஒரு பெரிய 'பில்ட் அப்' செய்த திருப்தியில், அந்த பப்ளிக் ஃபோன் பூத்திலிருந்து, வெளியே வந்தார், சம்முகம் என்கிற ஏகாம்பரம்.
ஆனால்...
பாவம், அவருக்குத் தெரியாது, இத்தனை நேரம் அவருடன் அரட்டை அடித்தது எடிட்டரின் ப்யூன் என்று!!!

14 comments:

RVS said...

ஏ கிளாஸ். பில்ட் அப்புக்கு அளவே கிடையாதா. கிளாசிக் எண்டிங். எப்படி சார் இப்படி யோசிக்கிறீங்க.. அசத்தல்.

Chitra said...

ஆஹா... கலக்கல் முடிவு. அசத்திட்டீங்க!

p.s. template களை கட்டுதே!

வசந்தமுல்லை said...

adengappaaaaaaaaaaa!!!!!!!!!!!

ப.கந்தசாமி said...

அடடே..வாங்க..வாங்க...இந்த பதிவு எப்படி இருக்கு?
ஜோரா இருக்கு!

பத்மநாபன் said...

பில்டப்புக்கு பில்டப்பாக கதை பில்ட் பண்ணிட்டீங்க....

வை.கோபாலகிருஷ்ணன் said...

இராமமூர்த்தியா, கொக்கா என்று உள்ளது இந்தக் கதை. அருமை அருமை அருமை அருமை அருமை எதிர்பார்த்தது தான் என்றாலும் மிகவும் அருமையான நகைச்சுவையான முடிவு.



(ஒரு சின்ன சந்தேகம் ”இராமமூர்த்தியா...கொக்கா” என்று ஏதோ பேச்சு வழக்கில் சொல்வார்களே அது போல எழுதி விட்டேன். அதற்கு என்ன அர்த்தம் சார்? தயவுசெய்து விளக்குங்களேன்.)

vasan said...

வைகோ சார்,
கொக்கா!! ஆச்ச‌ரிய‌குறி. ஒத்தைக்கால்லே(மாத்தி மாத்தி)நின்னு, வரும் மீன் வரும‌ள‌வு
காத்திருந்து கொத்திப்புடுதுள்ள‌ கொத்தி ச‌ரியா. ஆர்.ஆர்.ஆரும் (ச‌ம்முக‌ம்) கால் போட்டு பில்ட‌ப் கொடுத்து மீன் பிடிக்க‌த்தான் பார்க்கிறாரோ.

ரிஷபன் said...

கதை அசத்தல்

அப்பாதுரை said...

நச்.

அப்பாதுரை said...

நெஸ்லே நாட்களில் இப்படித் தான். அப்போதெல்லாம் மேகி கெசப் விற்கவே விற்காது. நாங்களோ விற்பனைக் கோட்டா முடிக்க வேண்டும். மார்கெட் விசிட் போவறுதுக்கு முன்னாலே அஞ்சு ரூவாக்கு ஆளெடுத்து சில பெரிய கடைனங்களுக்குப் போய் அவசரமா அரை டஜன் மேகி கெசப் வேணும்னு கேக்கச் சொல்வோம். கடைக்காரர்கள் சரக்கில்லாமல் வாடிக்கையைத் திருப்பி விட்ட கசப்பிலிருப்பார்கள். அரை மணி ஒரு மணி பொறுத்து நாங்கள் மேகி கெசப் விற்கப் போவோம். அரை டஜனுக்கு மேல் அரை டஜனாக ஒரு குத்து குத்தி விட்டு வருவோம். அடுத்த ஒரு மாசத்துக்கு அந்தக் கடை பக்கம் போக மாட்டோம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

திரு. அப்பாத்துரை அவர்கள் எழுதியுள்ளதும் அருமையாக உள்ளது. சம்முகம் என்கிற ஏகாம்பரம் என்ற எழுத்தாளரின் எழுத்துக்களோ, மேகி கெசப் போ எதுவானாலும், சந்தைப்படுத்துவதில் இவ்வளவு டெக்னிக்குகளை கையாள வேண்டியுள்ளது பாருங்கள்.

அப்பாதுரை said...

உண்மை கோபாலகிருஷ்ணன். திறமையோ தரமோ இருந்தாலும் பரவலாக அங்கீகரிக்கப்படவோ சந்தைப்படுத்தவோ கொஞ்சம் சித்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது. சிலசமயம் அடாவடியும் தேவைப்படுகிறது. மேகி கெசப் சமாசாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் எப்படியும் கடைப்பக்கம் போக வேண்டியிருக்கும். கடைக்காரர் என் அம்மாவிலிருந்து எல்லாரையும் ஒரு ஈடு திட்டித் தீர்ப்பார். அந்த மாதம் ரிகரி (சகிக்காத காபி) அல்லது சன்ரைஸ் என்று ஏதாவது கோட்டா ஏறியிருக்கும். கடைக்காரரை சமாதானப்படுத்தி "ஐயா கெசப் விக்கலின்னா போவுது. வாபஸ் எடுத்துட்டுப் போறேன், இப்ப ஆறு வாபஸ், அடுத்த ட்ரிப் ஆறு வாபஸ் எடுத்துகிட்டா போச்சு. ஆனா நீங்க ஒரு பெட்டி ரிகரி வாங்கணும்"னு மடியில கை வைப்போம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மார்க்கெட்டிங் டெக்னிக் பற்றி, அக்கு வேறு ஆணி வேறாக, சிறு உதாரணங்கள் மூலம், புட்டுப் புட்டு வைத்து (நவராத்திரி வெள்ளிக்கிழமை கொலு வைத்துள்ள வீடுகளில் சிலவற்றில் தருவார்களே - அந்தப் புட்டு அல்ல), அந்த விற்பனை லைன் பற்றி சுத்தமாக ஏதும் அறியாத ஞானசூன்யமான எனக்கும் கூட, ஏதோ கொஞ்சமாகவாவ்து புரிய வைத்துள்ள திரு. அப்பாதுரை அவர்களுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இங்கு வந்து அமர்ந்து தம்தம் கருத்துக்களைச் சொன்ன,
1. கோபி..
2. RVS
3. சித்ரா
4. வசந்த முல்லை
5. கந்த சாமி சார்
6. பத்மநாபன்
7. வை.கோபாலகிருஷ்ணன் சார்
8. வாஸன்
9. ரிஷபன்
10.அப்பாத்துரை

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி!!!
9.