Saturday, August 21, 2010

இரயில் பயணங்களில்......


இப்பொழுதெல்லாம் யார் ரயிலில் ஃபர்ஸ்ட்
க்ளாசில் பயணம் செய்கிறார்கள். ஆஃபீஸ் டூர் என்றால் செகண்ட் ஏ.ஸி. பர்ஸனல் என்றால் செகண்ட் க்ளாஸ்.. நான் சொல்லப் போவது ஒரு இருபது இருபத்தைந்து வருடம் முன்பு....

ஒரு பெரிய மனிதர் (அந்தஸ்து+வயது+உருவம்)(எல்லாவற்றிலும்)(இப்போது மேத்தமடிக்ஸ் ஃபெஸ்டிவல் என்பதால் இந்த பிராக்கெட்டுகள்..நம்ம அல்ஜிப்ரா கணக்குபோலவே..) சரி..சரி..கதைக்கு வருவோம்.மெட்றாசிலிருந்து கும்பகோணத்துக்கு பிரயாணப்பட்டு இருந்தார். அவர் பூர்வாஸ்ரமத்தில் ரயில்வேயில் உத்யோகம் என்பதால் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் பாஸ்.
வழக்கமாய் சென்னை சென்றார் என்றால்..அந்த இரவு நேர ரயிலைத் தான் பிடிப்பார், எப்போதும். சென்னையில் வேலையை முடித்து விட்டு இரவு பத்து மணிக்கு ரயிலில் படுத்தாரானால், மறு நாள் காலை எட்டு மணிக்கு டாணென்று முழிப்பு வந்து விடும். அப்போது ரயிலும் கும்பகோணம் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டு இருக்கும்!
ஒரு டிகிரி காஃபி குடித்து விட்டு வீட்டுக்கு நடை கட்ட வேண்டியது தான். ரயில்வே ஜங்க்ஷன் பக்கத்திலேயே வீடு என்பதால் பரம சௌகர்யம்!
அப்படித் தான் அன்றும் மெட்றாஸில் வேலையை முடித்து விட்டு வந்து சேர்ந்தார், எக்மோருக்கு. ரயிலிலும் படுத்தார். வழக்கம் போல் தான் எல்லாமுமே ! ஆனால் வழக்கம் போல் வரும் தூக்கம் தான் வரவில்லை !!
காரணம்!
(மூட்டைபூச்சிகள்+கொசுக்கள்)!!
பாவம் அவை இரண்டும் அவரை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டன.
கும்பகோணத்து கொசு கடித்தால் தான் ஸார்வாளுக்குத் தூக்கமே வரும். அப்படி ஒரு பழக்கம்!
ஆனால் இந்த ரயில் கொசுக்கள் கும்பகோணத்து கொசுக்கள் போல இல்லாமல் கொஞ்சம் வித்யாசமாய் இருந்தன. ஆளை அலாக்காக அப்படியே தூக்கி கொண்டுபோய் ப்ளாட்ஃபாரத்தில் போட்டு விடும் போல இருந்தது!
ஆனால் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்க விடாமல் மூட்டைபூச்சிகள் அவரை படுக்கையுடன் இழுத்துப் பிடித்துக் கொண்டு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தன அந்த இரவு முழுவதும்!
அப்பாடா..ஒரு வழியாய்...
கும்பகோணமும் வந்தது!
எரிச்சலுடன் எழுந்தார்.
டிகிரி காஃபியை மறந்தார்.
வீட்டிற்குப் போனவுடன் பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு ஒரு முழ நீளத்திற்கு ஆங்கிலத்தில் காரசாரமாக லெட்டர் எழுதினார், ரயில்வே நிர்வாகத்திற்கு.
ரயில்வே காரர்களுக்கு இங்க்லீஷில் லெட்டர் எழுத சொல்லித் தர வேணுமா என்ன?
அது அவர்கள் பரம்பரை சொத்து அல்லவா?

' .. ஒன்றுக்கு மூன்று மடங்கு காசு வாங்குவதில் குறைச்சல் இல்லை. ஆனால் சௌகர்யம் என்பது துளிக்கூட இல்லை. உங்கள் மேல் நான் ஏன் கன்ஸூமர் கவுன்சிலில் புகார் செய்யக் கூடாது ..' என்று விளாசித் தள்ளி விட்டார், விளாசி!
அது இங்கு விசேஷமில்லை!
ஆனால் அவருடைய ஸ்கட் ஏவுகணைத் தாக்குதலுக்கு 'பேட்ரியாட்' போல ரயில்வேயிலிருந்து ஒரு கடிதம்!
' .. MY DEAR FIRST CLASS PASSENGER..' என்று ஆரம்பமே வெகு ஜோராய் .... அசௌகர்யத்திற்கு மன்னிக்கவும்.இது போல ஒரு அசம்பாவிதம் இனி தங்களுக்கு ஏற்படாது என்று உறுதி கூறுகிறேன்.. கடிதத்தின் கீழ் ஆச்சர்யம்!
ரயில்வே ஜெனரல் மேனேஜரே கையெழுத்துப் போட்டிருந்தார்!
மனிதருக்கு சந்தோஷத்தில் தலை..கால்..புரியவில்லை!!
அவரை மதித்து ஒரு ஜெனரல் மேனேஜர் லெட்டர் எழுதுகிறாரென்றால்.....
அது கூட ஆச்சர்யமில்லை.
அந்த கவரில் இன்னும் ஒரு கடிதம்!
அவர் எழுதியது அது.
ஆனால் கடிதத்தின் ஒரு ஓரத்தில்
' send the idiot the usual bugs letter' என்று GM ஸ்டெனோ அட்டெண்டருக்கு மார்க் பண்ணியதும் இருந்து தொலைத்தது!
..மனிதருக்கு முகத்தில் ...ஈ ..சாரி..கொசு ஆடவில்லை...
பாவம்!!!

11 comments:

வசந்தமுல்லை said...

ரயில்வே நிர்வாகத்திற்கு.
ரயில்வே காரர்களுக்கு இங்க்லீஷில் லெட்டர் எழுத சொல்லித் தர வேணுமா என்ன?
அது அவர்கள் பரம்பரை சொத்து அல்லவா?

என்னோட அப்பாவும் ரயில்வேகாரர்தான். அவரும் இங்லீஷில் பொளந்து கட்டுவார்.
நான் இங்கலீஷில் சரியா பேசவில்லை என்று அப்படி திட்டுவார் பாருங்க.
ஆனால் அன்று அவர் அப்படி சொன்னது இன்றுதான் உரைக்கிறது.
என் அப்பாவை ஞாபகம் செய்ததற்கு உமக்கு என்ன கைம்மாறு பண்ண? தெரியவில்லை!
கதை முடிவு படு ஜோர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பத்மநாபன் said...

//ஒரு ஓரத்தில்
' send the idiot the usual bugs letter' என்று GM ஸ்டெனோ அட்டெண்டருக்கு மார்க் பண்ணியதும் இருந்து தொலைத்தது!
..மனிதருக்கு முகத்தில் ...ஈ ..சாரி..கொசு ஆடவில்லை...//

அருமை.. சிரித்து மாளவில்லை...

இப்படி ஒவ்வோரு குறைக்கும் ஒரு draft இருக்கும் போல..

Chitra said...

' send the idiot the usual bugs letter' என்று GM ஸ்டெனோ அட்டெண்டருக்கு மார்க் பண்ணியதும் இருந்து தொலைத்தது!
..மனிதருக்கு முகத்தில் ...ஈ ..சாரி..கொசு ஆடவில்லை...


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... கவுத்துட்டாங்களே!

Chitra said...

ஙப் போல் வளை. .......... உங்கள் மெயில் id என்னிடம் இல்லாததால், இங்கு எழுதுகிறேன்.

இது பழமொழி அல்ல. ஒவ்வையாரின் ஆத்திச்சூடியில் வருகிறது. "அறம் செய விரும்பு" என்று தொடங்கும் உயிர் எழுத்துக்கள் வரிசையில் வரும் பகுதி மட்டும் தான் நிறைய பேருக்கு தெரியும். அதன் தொடர்ச்சியாக, உயிர்மெய் வரிசையும் தொடர்ந்து நீண்ட பகுதி உண்டு. "கண்டொன்று சொல்லேல்; ஙப் போல் வளை; சனி நீராடு; ஞயம்பட உரை" என்று வருகிறது. ஆத்திச்சூடி முழுவதும் வாசிக்க: click: http://www.itcusa.org/projectmadurai/utf8/mp002.html

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா முடியல.. ரொம்ப யதார்த்தமும் நையாண்டியும்.. அளவோட கலந்து அழகா இருக்கு ராமமூர்த்தி

ரிஷபன் said...

எதிர்பாராத முடிவு! அய்யோ பாவம்.. இனிமேல் அவர் எதற்குமே கடிதம் எழுதாமல் இருக்கப் போகிறார்..

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சிரிக்க வைத்த முடிவு. இனிமேல் கடிதம் எழுத யோசிக்கவே மாட்டார்!

வெங்கட்.

Matangi Mawley said...

:D :D unexpected... nalla mudivu...

குட்டிப்பையா|Kutipaiya said...

நல்ல ட்விஸ்ட் :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவையாக இருந்தது. முடிவு சூப்பர்.
இவர் எழுதிய கடிதத்தை GM தன் ஸ்டெனோவுக்கு எழுதிய endorsement உடன் இவருக்கே அனுப்பினால், கொசுக்கடி மூட்டைப்பூச்சிக்கடியை விட தேள்கடி பட்டது போல துடித்துப் போய் இருப்பார் .. பாவம் அந்த பாஸிஞ்சர்.

vasan said...

' send the idiot the usual bugs letter' என்று GM ஸ்டெனோ அட்டெண்டருக்கு மார்க் பண்ணியதும் இருந்து தொலைத்தது!

இது க‌டி....