நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Friday, August 13, 2010
கடவுளும்...மனிதனும்...
கடவுள் படைத்தான்..
எல்லாரையும்.....
அரசனாய்...ஆண்டியாய்..
வீரனாய்...கோழையாய்..
ஆணாய்..பெண்ணாய்..அலியாய்..
எறும்பாய்..ஒட்டகச் சிவிங்கியாய்
விதம்..விதமாய்..
சோர்வேயில்லாமல்..
படைத்தான்.
அத்தனையையும்...
கிழித்துப் போட்டான்,
காலன்!
பிறந்து வந்த மனிதன்..
படைத்தான்...
சாகுந்தலம்..
ரோமியோ ஜுலியட்..
வில்லி பாரதம்..
போன்ற எண்ணற்ற
இலக்கியங்கள்...
காலன் என்ற
அந்த கொம்பினால்,
கை கூட
வைக்க முடியவில்லை!!!!
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
உண்மை தான். இலக்கியங்கள் என்றும் இறப்பதில்லை. படைததவனைத்தான் காலன் கொண்டு செல்ல முடியும். படைப்புகள் காலனையே காலால் உதைக்கும் சக்தி வாய்ந்தவை. தான் இறந்தாலும் தன் படைப்புகள் மூலம் படைப்பாளி என்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டே இருக்கிறான்.
உங்கள் சிந்தனைகள் மதிப்புமிக்கவையாக இருக்கின்றன.
உயிர்ப்பான படைப்புகள் என்றும் உன்னதமாகவே இருக்கும். அதனாலேயே வள்ளுவனும்,பாரதியும் என்றும் நம்முடன் இருக்கிறார்கள்.
வந்தாச்சு வந்தாச்சு, உங்க ஆரண்யத்தைப் பார்க்க எங்கே வரணும்? தரன் ங்கற பேரிலே படிச்சது நினைவிலே இருக்கு.ம்ம்ம்ம்ம்??? எதிலே???
அற்புதம். ஒரு படைப்பாளியின் இலக்கிய படைப்புக்கு அழிவில்லை என சொன்ன உங்கள் கவிதைக்குத் தலைவணங்குகிறேன்.
வெங்கட்.
’தரன்’ங்கற பேரில எண்பது,எண்பத்தைண்டு வாக்கில தினமணி கதிர்ல பப்ளிஷ் ஆயிருக்கு. நான் குறிப்பா கல்கி,தினமணி கதிருக்கு மட்டும் தான் எழுதுவேன்.
‘ஆரண்ய நிவாஸ்’ திருச்சி திருவானைக்காவல்..
தெற்கு வீதி விபூதிப்ரஹாரம் கார்த்திகேயன் கார்டனில் இருக்கிறது. ஹூகுளில் பார்க்கலாம்!
காலன் என்ற அந்த ”கொம்பனால்”.. இல்லையா?
சிறந்த படைப்புகளை காலனால் ஒன்றும் செய்ய முடியாதுதான்.
உண்மைதான் நண்பரே.
நல்லாயிருக்கு... நல்லாயிருக்கு...
//போன்ற எண்ணற்ற
இலக்கியங்கள்....//
இந்த வரி இல்லாமையே கூட கவிதை விளங்குகின்றது...
சொல்ல ஒன்று வார்த்தையில்லை
எல்லாமே அருமை !!!!
உங்களின் எழுத்தாணியை என்னிடம் கொடுங்களேன்
நானும் பழகுகிறேன்!
நான் நன்றாக சமையல் செய்தால்
என் மனைவி என்னிடம் உங்கள் கையை கொடுங்களேன்!
நானும் பழகுகிறேன் என்பாள்
அதுப்போல நானும் பழகுகிறேன்
உங்கள் எழுத்து வண்ணத்தை!
அருமை ராமமூர்த்தி..எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு அருமையான கவிதையை..
கடவுள் படைப்பு, காலனால் கலைப்பு,
மனிதன் படைப்பு காலனின் திகைப்பு!
கடவுள் படைப்பபினில் தான் அந்த மனிதனும்.
Post a Comment