நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Wednesday, July 21, 2010
மெள்ள இங்கிலீஷ் இனி சாகும்!!!
ஆங்கிலம் நம் யாவருக்கும் ஒரு பொதுவான மொழி. அதைப் பேசுவதை வைத்து ஆளைக் கண்டு பிடித்து விடலாம்.இந்த ஆள் ஆந்திரா வாடு..அந்தாள் U.P. ..இவர் பெங்காலி அவர் பஞ்சாபி என்று பேசும் ஆங்கிலத்தை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம்.
வங்காளக் காரர்களுக்கு S அவ்வளாக வராது.ஆனால் J வெகு சரளமாக வரும். CLOSE UP என்பதற்கு CLOJE UP என்று சொல்வார்கள். இப்படித் தான் நான் ஸ்கூலில் படிக்கும் போது NCC OFFICER ஒருவர் வந்தார்.பெங்காலியாக இருக்குமோ என்று எங்களுக்கு ஒரு சம்சயம். அவர் CLOJE UP என்று திரு வாய் மலர்ந்ததும், எங்களது கொஞ்ச,நஞ்ச சந்தேகமும் தீர்ந்தது! நாங்கள் தமிழில் முட்டாள், மடையன் என்று சிரித்துக் கொண்டு அவரிடம் சொல்ல, அவர் பேய் முழி முழிக்க படு ஜாலி. ஆனால் பேரேடு எடுக்கும் போது, ' ராமமூர்த்தி..சீனிவாசன்..கல்யாண ராமன்' என்று எங்கள் எல்லார் பெயர்களையும் சொல்லி .303 RIFLE ஐ த் தூக்கிக் கொண்டு GROUND ல்
ஓட விட்டார். வேர்த்து..விறுவிறுத்து..வாயில் நுரை தள்ளி..நாங்கள் இரைத்துக் கொண்டிருக்கும் போது, ' என்னப்பா தம்பிங்களா, எப்படி இருக்கு' என்று தமிழில் பேசி திகைக்கவும் வைத்தார்!
தமிழ்க்காரர்!!
அது இருக்கட்டும்.
ஒன்று கவனித்தீர்களா?
வடக்கிலிருந்து வரும் ஆங்கிலம், SLANG .. ஆக, ஒரு மாதிரியாக ஆகி இங்கு நம் தமிழ் மக்களின் நாவில் வரும் போது செம்மையாய்...முழுமை பெற்று விடுகிறது!!
MADRAS ENGLISH என்றே அதற்குப் பெயர்! அதிலும் கும்பகோணத்துக் காரர்கள் பேசும் ஆங்கிலத்தில் கிளி கொஞ்சும் என்று பண்டிதர்கள் சொல்வார்கள்!
ஆனால் நம் தமிழ் இதற்கு நேர் எதிர்!
தெற்கில் பேசப் படுகிற முழுமையான தமிழ் இங்கு வடக்கே மெட்றாஸ் வரும் போது கழுதை ஏகத்துக்குத் தேய்ந்து கட்டெறும்பாய் ஆகி விடுகிறது !
உதாரணத்திற்கு திருநெல்வேலி பக்கத்தில் ஒருவர் " என்ன பிள்ளைவாள், சௌக்யமா...எப்படி இருக்கேள்?" என்று வாத்சல்யத்துடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே வார்த்தைகள் சுமார் ஒரு அறு நூறு, அறுநூற்றம்பது கிலோ மீட்டர் பிரயாணப்பட்டு, வருவதற்குள் "இன்னாபா எப்டீக் கீறே?" என்று தேய்ந்து..சிதைந்து..சின்னாபின்னம் ஆகி, திரு நெல்வேலித் தமிழ் என்கிற ஒரு பெரிய எட்டு முழ அங்கவஸ்த்ரத்துடன் கூடிய வேஷ்டி இங்கு மெட்றாஸ் தமிழ் என்கிற சின்னஞ்சிறு கைக்குட்டை ஆக சுருங்கி விடுகிறது!
அது போய்த் தொலையட்டும்....
விஷயத்துக்கு வருவோம்.....
அந்த காலத்து S.S.L.C.களின் ஆங்கில அறிவு யாவரும் அறிந்ததே!. இந்த காலத்துப் பிள்ளைகளின் ஆங்கில ஞானம் எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசித் திரியும் ஒரு கான்வென்ட் சிறுவனைப் பார்த்துக் கேட்டேன்:
" I DID A MISTAKE - இதற்கு PASSIVE VOICE சொல்லு?"
அந்த பையன் சொன்னான்.
" I WAS DONE BY A MISTAKE"
இது எப்படி இருக்கு?????????
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
haha ....
என்ன ஒரு உண்மையை அழகாய் சொல்லிவிட்டான் ...ஆங்கிலம் வாழ விட்டால் என்ன ..அவன் மூலம் தத்துவ விசாரம் பெருகும்
//" I WAS DONE BY A MISTAKE"
//
ஹா...ஹா..ஹா...
அருமை. அதுவும் அந்த கடைசி வரிகள் - I was done by a mistake - சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
NCC காமெடி சூப்பர்...
சிறுவனைப் பார்த்துக் கேட்டேன்:
" I DID A MISTAKE - இதற்கு PASSIVE VOICE சொல்லு?"
அந்த பையன் சொன்னான்.
" I WAS DONE BY A MISTAKE"
இது எப்படி இருக்கு?????????
.......English was DONE by a mistake. ha,ha,ha,ha,ha....
:)))))
சிறுவனைப் பார்த்துக் கேட்டேன்:
" I DID A MISTAKE - இதற்கு PASSIVE VOICE சொல்லு?"
அந்த பையன் சொன்னான்.
" I WAS DONE BY A MISTAKE"
இது எப்படி இருக்கு?????????
ha ha ha ha....
சரியான கலக்கல் காமெடி.. ரசித்து சிரிக்க வைத்தது..
:-))))))))))
ஜாலியாக 4.25 க்கு பஸ்ஸில் ஏறி ஒருவர் அருகில் மற்றொருவர் என இருக்கை அமைந்து ஏதேதோ நகைச்சுவையாகப் பேசிவருவோம். இறங்கும் இடம் வந்தது கூடத்தெரியாமல் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும்.
இதைப்படித்ததும் அந்த நாள் ... ஞாபகம் ... நெஞ்சிலே வந்ததே ... நண்பனே ... நண்பனே.
பஞ்சக்கச்ச வேஷ்டி கைக்குட்டையான, தங்களின் ஆராய்ச்சி உவமை அருமை.
அந்தப்பையன் தவறாகச் சொன்னாலும், உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்.
கடைசியில் இப்படி சிரிக்க வைச்சு புட்டிங்களே.... அருமை.பாரட்டுகள்
சிறிய பதிவு; ஆனால் அதிலேயே நீங்கள் உணர்த்திய விஷயம் அருமை;
arumai
மிக மிக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ஆனால் குழந்தைகள் தவறுவது இயல்பு.யாருமே ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது தவறு செய்துதான் திருத்திக்கொள்வர். குழந்தைகளிடம் இப்படி கேள்வி கேட்டு தவறாகி நாம் சிரித்துவிட்டால் அடுத்தமுறை நீங்கள் என்றில்லை யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயங்குவார்கள்.இது அவர்களின் ஆவலையே அழித்துவிடுவதாயும் அமையும். தப்புத் தப்பாகவேனும் பேசினால் தான் தமிழோ அல்லது ஆங்கிலமோ அல்லது வேறு எதுவானாலும் பழகும்.
இந்த காலத்துக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவதானால் மட்டும் அல்ல.[அப்படி பட்ட எண்ணத்தை நாம் தான் அவர் மனதில் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.] பலவகைகளில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.அவர்கள் தடுக்கி விழுந்தாலும் அவர்களாகவே எழுந்துக்கொள்வர். நாமும் இரசிப்போமே!
//" I WAS DONE BY A MISTAKE" //
ha ha ha... பிஞ்சில் பழுத்த ஞானமோ... சிரிக்க வெச்சாலும் சிந்திக்கவும் வெச்சுட்டீங்க... இன்னிக்கி கல்வி முறை இப்படிதாங்க இருக்கு...passive voice னு கேட்டதுக்கு "அவர் யாரு"னு கேக்காம விட்டானே...அது வரைக்கும் புண்ணியம்
21.07.2010 அன்று ”மெள்ள இங்கிலீஷ் இனி சாகும்!!!” என்று எழுதியதோடு சரி. ஒன்பது நாட்கள் ஓடிவிட்டன. அது மெள்ளவே சாகட்டும் அல்லது பிழைத்துப்போகட்டும். வாசகர்களை சாக அடிக்காமல் (மன்னிக்கவும்) நோக அடிக்காமல் புதுப்படைப்புகளை அள்ளி அளியுங்கள் ஐயா. தினமும் ப்ளாக்குக்குப் போனால் அதுவே இழுத்துக்கொண்டு (சாகாமலேயே) இருக்கிறது. ஒரு வேளை jeejix.com க்கு கட்சி மாறிப் போய் விட்டீர்களோ? அப்படியிருந்தாலும் தொண்டர்களாகிய எங்களையும் கூட்டிப்போங்க தலைவா !
திருனெல்வேலி தமிழ் பற்றிய தங்கள் கருத்தை சந்தோஷத்துடன் ஆமோதிக்கிறேன். ஏனென்றால் நானும் ஒரு நெல்லைக்காரன்...:))
Post a Comment