நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Sunday, July 4, 2010
ஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....
நீள் பதிவு நெ.4.......
சிருங்கேரியே சாட்சி.........
சுற்றிலும் மலை..தூரத்தில் குதிர்முக் ப்ராஜக்ட்.அற்புதமான சூழல்! சிருங்கேரி நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்!
ஜிலு...ஜிலுவென இருந்தது இடம்....சுற்றிலும் அடர்ந்த காடுகள்.மணி மதியம் பன்னிரெண்டு என்று கடிகாரம் காட்டியதை மனம் நம்ப மறுத்து, இது சாயங்காலம் ஏழரை என்றது !!!!
சிருங்கேரி கோவில் !!!
தரிசனம் முடிந்ததும், மடத்திற்குப் போனோம். மிகவும் ரம்யமான இடம்! அங்கு ஒரு நதி ஓடுகிறது. அதில் தான் புஷ்டியாய் எத்தனை மீன்கள்!
மனிதர்கள் குண்டாய் இருந்தால் கஷ்டம்!ஷுகர்,B.P. என்று ஏதாவது ஒன்று வந்து ப்ராணனை வாங்குகிறது! மீன்கள் உலகத்தில் குண்டாய் இருந்தால் தான் SAFE! அது ஒல்லியாய் இருந்தால் தான் ஆபத்து! குண்டு மீன்கள் அதை சாப்பிட்டு விடும்!!
நாங்களும் சிருங்கேரியில் தான் சாப்பிட்டோம்.ஆஹா...அங்கு சாப்பாடு போடுகிறார்கள், பாருங்கள்! ஒரு வண்டியில் அன்னத்தை தள்ளிக் கொண்டே வர, இரண்டு பேர் மாற்றி...மாற்றி...போட்டுக் கொண்டே வர...என்ன ஒரு சுத்தம்!! ஒரு பருக்கைக் கூட வெளியில் சிந்தாமல்... பரிமாறுவதை ஒரு வேலை என்று அங்கு யாரும் செய்வதில்லை.. அர்ப்பணிப்பு உணர்வுடன் எதை செய்தாலும் அங்கு தெய்வீகம் இருக்கும் என்பதற்கு
சிருங்கேரியே சாட்சி!!
(என்னடா, எந்த கோவில் பார்த்தாலும் சாப்பாடு,சாப்பாடுன்னு போர் அடிக்கறானேன்னு நினைக்காதீங்க!கர்னாடகாவில் எந்த கோவில் சென்றாலும் அங்கு பிச்சைக் காரர்கள் கிடையாது!கோவிலுக்கு வந்து யாரும் முகம்,வயிறு வாடி சென்றது கிடையாது!!வேதம் படித்தவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையே தனி!!!எந்த கோவிலிலும் அர்ச்சகர் காணிக்கை போடுங்கள் என்று யாரையும் சொல்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் தட்டில் விழுந்த நூறு ரூபாய் தாள் ஒன்றினை உண்டியலில் போட்டு விட்டார் ஒரு அர்ச்சகர்!!)
சிருங்கேரி யானை எங்களைப் பார்த்து சினேகமாய் சிரித்தது! அதனுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்! யானைப் பாகன் தமிழ் நாடாம்! அது வேறு,
எங்களுக்கு குஷி! ஊரை விட்டு வரும்போது, மறக்காமல் யானையின் email ID வாங்கிக் கொண்டோம்!!!
எங்கள் க்ரூப்பில் ஒரு குழந்தை அவள் அப்பாவை..(அப்பா செல்லம்)
நொடிக்கொருதரம், அண்ணா..அண்ணா..என்று கூப்பிட,எனக்கும் என் அண்ணா ஞாபகம் வர..( நாங்களும் அப்பாவை அண்ணா என்று தான் கூப்பிடுவோம். நிகழ்வுகள் லேபிள் பார்க்கவும்) நான் 0 போடாமல் செல்லில் பேச...எப்பப் பார்த்தாலும் NOT REACHABLE !!!
எங்கள் அம்மாவின் ஆதங்கம் இது: “நாங்க சின்னக் குழந்தையா இருந்தப்ப..எங்காவது விழுந்து அடிபட்டாக் கூட அண்ணா,அண்ணான்னு தான் கத்துவோமாம்..சூர்ப்பனகை மாதிரி...!!”
O.K. அப்புறம் பார்ப்போமா???
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
srungeri food is nice becasue of the river water. I hope you would have visited subramanyam too
எனக்குத் தெரிஞ்ச டாக்டர்.. ஒல்லிதான். படு ஒல்லி. அவருக்கு ஷுகர்..பிபி.. எல்லாம் உண்டு. நல்ல டாக்டரா தேடிகிட்டு இருக்கார்.. ஹி..ஹி..!
ஆம்...மிஸ்டர் ராம்ஜி! அந்த நேத்ராவதி நீர் அவ்வளவு சுவை!! நீங்கள் சொன்னதற்கு அப்புறம் தான் தெரிகிறது!மிக்க நன்றி!!ஆம்..சிருங்கேரிக்குப் பிறகு நாங்கள் சென்றது...தர்மஸ்தலா...சுப்ரமண்யா!!!!
அங்கு சாப்பாடு போடுகிறார்கள், பாருங்கள்! ஒரு வண்டியில் அன்னத்தை தள்ளிக் கொண்டே வர, இரண்டு பேர் மாற்றி...மாற்றி...போட்டுக் கொண்டே வர...என்ன ஒரு சுத்தம்!! ஒரு பருக்கைக் கூட வெளியில் சிந்தாமல்... பரிமாறுவதை ஒரு வேலை என்று அங்கு யாரும் செய்வதில்லை.. அர்ப்பணிப்பு உணர்வுடன் எதை செய்தாலும் அங்கு தெய்வீகம் இருக்கும் என்பதற்கு
சிருங்கேரியே சாட்சி!!
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கும் சிருங்கேரி சென்று வர வேண்டும் போல் தோன்றுகிறது! அப்படியே சிருங்கேரியை நேரில் காண்பித்துவிட்டீர்கள் நன்றி, தலைவா!!!!
அதென்ன? வித்தியாசமான போட்டோ? பொருத்தமில்லாமல் !!!
ரிஷபன் கமென்ட் மீன்களுக்கும் பொருந்துமா என்ன?
உணர்வு பூர்வமான கட்டுரை. சிருங்கேரியின் படங்கள் இன்னும் சில வெளியிட்டிருக்கலாம்.
வெளியிட்டிருக்கலாம் தான் ஸ்ரீராம்! 33.33333333333% இட ஒதுக்கீடு தான் ஃபோட்டோக்கு என்று என் பெண்ணுடன் ஒரு MOM (Memorandum of Understanding)போட்டுக் கொண்டுதான் இந்த தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது!!!!
//நாங்களும் அப்பாவை அண்ணா என்று தான் கூப்பிடுவோம்//
ஐ... நாங்களும் தான்...
நல்ல பயண பதிவு
சிருங்கேரி அருமையான ஸ்தலம். அந்த சாரதாம்பாள் பூஜையை எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது. அருமையான, அமைதியான சுழ்நிலை. நான் அனுபவித்திருக்கிறேன்.
கந்தசாமி ஸார்..வாங்க,வணக்கம்!!முதன் முதலா வந்திருக்கீங்க...ரொம்ப நாளா நான் உங்க வரவை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்...ரொம்ப...ரொம்ப...தேங்க்ஸ்!!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
கந்தசாமி ஸார்...முதன்முதலா நம்ம வூட்டுக்கு வந்திருக்கீக..என்ன சாப்பிடறீங்க...?
ஓவல்..ஹார்லிக்ஸ்...போர்ன்விடா?
ஒண்ணும் வேண்டாமா? ஒரு நிமிஷம் இருங்க...என் கையால நானே காஃபி போட்டுக் கொண்டு வரேன்!!!!!
p.s..: அதிகப் படியாய் உரிமை எடுத்துக் கொண்டு விட்டேனோ??
ஸார்...வாங்க..வாங்க...முதன் முதலா நம்ம வூட்டுப் பக்கம் வந்திருக்கீக..என்ன சாப்பிடறீங்க?
இதோ...ஒரு நிமிஷம்!! என் கையால காஃபி கலந்து கொண்டு வரேன்....
(பத்து நிமிஷம் கழித்து)
எங்கேடா ஸாரைக் காணோம்?
வாங்க, கந்தசாமி ஸார், வாங்க..வாங்க...
முதல் முறையா, நம்ம வூட்டு பக்கம் வந்திருக்கீக..
என்ன சாப்பிடுறீக...ஒரு நிமிஷம் இருங்க! என் கையால, காஃபி கொண்டாரேன்!
(ஐந்து நிமிடம் கழித்து).. அட..இங்ஙன இருந்த ஸாரைக் காணலியே???
ஸார்...வாங்க..வாங்க...முதன் முதலா நம்ம வூட்டுப் பக்கம் வந்திருக்கீக..என்ன சாப்பிடறீங்க?
இதோ...ஒரு நிமிஷம்!! என் கையால காஃபி கலந்து கொண்டு வரேன்....
(பத்து நிமிஷம் கழித்து)
எங்கேடா ஸாரைக் காணோம்?
நல்லா பகிர்வு தோழரே...வாழ்த்துக்கள்...
சிருங்கேரில வேறு ஏதும் படங்கள் எடுக்க வில்லையா..
சிருங்கேரி அருமையான ஸ்தலம். அந்த சாரதாம்பாள் பூஜையை எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது. அருமையான, அமைதியான சுழ்நிலை. நான் அனுபவித்திருக்கிறேன்.
--Dr. Kandaswamy Phd.
நேற்று பூரா ஒரே குழப்பம்!கமெண்ட்ஸ் எதுவுமே போட முடியல..கந்தசாமி சார் போட்ட கமெண்ட்டுக்கு பதில் போட்டா, அவரோட கமெண்ட் காணாம போயிடுச்சு! கொஞ்ச நேரத்தில என்னோடதும் GONE!!
போயிந்தி!!இன்னொன்ணு போட்டா, சமர்த்தா என்னோட இரண்டு கமெண்ட்ஸ்ம் நிக்குது! ஸாரோட கமெண்ட் காணோம்!!என்னோட emailid லிருந்து cut & paste எடுத்துப் போட்டா, கமெண்ட் என் லேபில்ல வருது!ஒண்ணும் புரியல சாமி!!!
ஸார்..ஸார்...சாமி ஸார்..உங்களை நான் சொல்லலை, கோச்சுக்காதீங்க!!!
மிக அருமையான பதிவு..மெலும் பதிவுகளை எதிர்னோக்கி கத்துக்கொன்டிருகிரேன்.
முடிந்த பொழுது என் வலைபதிவை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை எழுதுமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரேன்.
http://funaroundus.blogspot.com/
//ஆம்...மிஸ்டர் ராம்ஜி! அந்த நேத்ராவதி நீர் அவ்வளவு சுவை!! நீங்கள் சொன்னதற்கு அப்புறம் தான் தெரிகிறது!மிக்க நன்றி//
அந்த நதியின் பெயர் துங்கா நதி, சிலர் துங்கபத்ராநு சொல்லுவா, ஆனா சிருங்கேரிலேந்து கொஞ்ச தூரம் தள்ளிதான் பத்ரா நதி இணைகிறது. கர்பமாக இருந்த ஒரு தவளைக்கு வெயிலின் உஷ்ணம் தெரியாமல் இருக்க ஒரு பாம்பு படம் எடுத்து நிழல் தந்த காட்சியை பார்த்து விட்டு ஆதிசங்கரர் சந்தோஷத்துடன் ஸ்தாபித்த மடமே சிருங்கேரி.
Post a Comment