நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Monday, July 12, 2010
ஓ..........பேருந்தே......!!!!!
(தொடர்ந்து நான்கு நாட்கள் சீட் கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்த போது அங்கு ஒரு நோட்டீஸ் 'உங்கள் பயணம் நற்பயணம் ஆகுக' அந்த எரிச்சலில் எழுந்த கவிதை இது!)
ஓ..........பேருந்தே......!!!!!
இருக்கைக் கொடுக்காத
இடை நில்லாப் பேருந்தே!
இருபதே ஆனாலும்,
மகளிருக்கு பத்திருக்கை,
மாற்றுத் திறனாளிக்கு,
மற்றும் ஓர் இருக்கை,
முதியோருக்கு ஈரிருக்கை
எல்லார்க்கும் இடத்தை,
பட்டா போட்டதினால்..
மிச்சமுள்ள......
மூவெட்டு,நாலெட்டு,
ஐந்தெட்டு, ஆறெட்டு,
அகவை ஆகிவிட்ட
எங்களுக்கோ, வேட்டு!
இருக்கைக் கிடைக்காமல்
இரு கை கொண்டு.....
உந்தன்,
உள்ளேயும்...வெளியேயும்...
உன்னில் எங்கேயும்,
உடுக்கை இழந்தவன்
கை போல ஆங்கே....
கடுக்கன் தொங்குவது
போல் ஆங்காங்கே....
தொங்குகிறோம்...!
இதுவா நற்பயணம்...
பேருந்தே, நீ கூறு ????
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அய்யோ பாவம்.. தொங்கிட்டு போன எரிச்சலா.. டிரைவர் சீட்டை வாங்கி தந்திருப்பேனே.. என்கிட்ட சொல்லி இருந்தா..
நீங்கள் நான்கு நாட்கள் உட்கார இடமின்றி தொங்கியதாகச் சொன்னதையும், அந்த நிறை மாத கர்ப்பிணி போன்ற பேருந்தின் படத்தையும் பார்த்ததில் எனக்கு, நானே அதுபோல கஷ்டப்பட்டது போன்று, சர்வாங்கமும் வலிக்கிறது. என்னால் நாலு நிமிடங்கள் கூட அதுபோல பயணிக்க முடியாது. சென்னையிலிருந்து திருச்சிக்கு ரிஸர்வ் செய்த Second AC பகல் வண்டியில் உட்கார்ந்து வருவதே எரிச்சலாக உள்ளது எனக்கு. நம் உடம்பு வாகு அதுபோல உள்ளது. என்ன செய்வது. இந்தப் பிரச்சனைகளுக்குத்தான் பயணங்களைத் தவிர்த்து வருகிறேன்.
பாவம் பேருந்து என்ன செய்யும்?!
அனைவரின் வருகைக்கும் நன்றி.பேருந்தில் பயணம் செய்து பட்ட கஷ்டம் போதும்! என்ன செய்வது?
எல்லாரும் சிவனையும்,விஷ்ணுவையும்,பிள்ளையாரையும்,முருகனையும் தான் ப்ரார்த்தனை செய்து வேண்டுகிறார்கள்.இந்த சமயம் நான் கொஞ்சம் வித்யாசமாய் நான்முகனைப் பார்த்து கேட்கின்றேன்:
காரும்,பெட்ரோலும் களிப்புடனே ட்ரைவரையும்,
நாளும் நீ எனக்குத் தந்திடுவாய் நான்முகனே!
கோலம் செய்,துங்கா விளக்கில் நீரூற்றி, எந்நாளும்
தூங்காமல் காத்திருப்பேன், நான்!!!
Post a Comment