Sunday, May 2, 2010

அன்னை...



கருவறையில்
பத்து மாதம் சுமந்த
போதும், சரி,
எண்ணங்களில்
எப்போதும்,
எங்களைப்
பற்றிய
நினைவுகளை
சுமந்து..
கொண்டிருக்கும்
போதும், சரி,
கண்ட நாள் முதல்,
என்ன சாப்பிடுகிறாய்,
என்று,
அன்புடன் கேட்கும்,
அன்னையே...
என்றாவது
ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
நான்
கேட்டிருக்கிறேனா..
என்ன சாப்பிடுகிறாய்
என்று
உன்னை???????????

7 comments:

இராகவன் நைஜிரியா said...

அருமை... அருமை

கே. பி. ஜனா... said...

நல்ல கருத்து!நல்ல கேள்வி!

Chitra said...

Mother's Day Special!

வை.கோபாலகிருஷ்ணன் said...

”கொண்டு வந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய்.” தூக்குத்தூக்கி சினிமாவில் வரும் வாக்கியம்.

நமக்கு என்ன வேண்டும் என்று கேட்பாளே தவிர நாம் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று எதிர் பார்க்க மாட்டாள். அது தான் தாய் என்பவளின் தனிச்சிறப்பு.

கேட்கத்தெரியாத அவளின் தேவைகளைக் குறிப்பறிந்து நிறைவேற்றி வைப்பதே நம் கடமை.

சிந்திக்க வைக்குது தங்கள் கவிதை. பாராட்டுக்கள்.

ரிஷபன் said...

ம்.. அதனால்தான் அவள் அம்மா! நாம் பிள்ளைகள்.. என்னிக்குமே நாம் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை..

பத்மா said...

நம் பிள்ளைகளையாவது கேட்க வைப்போம்
உணர்ந்து எழுதிய கவிதை

Anonymous said...

அருமை