நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Sunday, May 23, 2010
விளிம்பு நிலை மனிதர்கள்
எம்பி..எம்பித் தான்
பார்க்கிறார்கள்,
அவர்களும்,
ஆனால்...
தொடக் கூட
முடியவில்லை...
வறுமைக் கோட்டை!!!!
இங்கு,
பிச்சைக் காரர்கள்,
தம் தம்,
தகரக் குவளைகளை
வீசி எறிந்து விட்டு,
சில்வர் தட்டை
எடுத்துக் கொண்டு,
சில்லறைக்கு,
ஏந்துகிறார்கள்,
கையை !!!!
ஓட..ஓட..விரட்டுவோம்..
என்று கோஷம் போட்ட,
அரசியல் வாதிகள்,
ஓய்ந்து விட,
வறுமை,
தன் போக்கில்,
நாட்டை விட்டு...
நடந்து செல்கிறது,
எருமை வேகத்தில்!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
எம்பி..எம்பித் தான்
பார்க்கிறார்கள்,
அவர்களும்,
ஆனால்...
தொடக் கூட
முடியவில்லை...
வறுமைக் கோட்டை
நல்ல வரிகள்...
சில்வர் தட்டை
எடுத்துக் கொண்டு,
சில்லறைக்கு,
ஏந்துகிறார்கள்,
கையை !!!!
வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டதா?!
வறுமையை பற்றிய
கவிதை அருமை.
இன்னும் கருத்தை
ஆழமாக
எழுதியிருந்தால்
இன்னும்
நன்றாக இருக்கும்.
நடந்து செல்கிறதா? அதுவே சந்தேகம் தான்
கிராமப்புறங்களில் எருமைக்கூட்டங்கள் சில நேரங்களில் கொணாரிக்கம் போட்டு ஓடி வருவதுண்டு. சிறிய ஒத்தையடிப்பாதையில் நம் எதிரே அதுபோல வரும் போது நம்மை முட்டித் தள்ளிவிடுமோ என்று நமக்கு பயமாகக்கூட இருக்கும். நம் இந்தியா வல்லரசாக மாறும் 2020 இல் பாருங்கள், வறுமை என்ற எருமையின் ஓட்டத்தை.
கிராமப்புறங்களில் சில சமயம் எருமைகள் கூட்டம் கூட்டமாக கொணாரிக்கம் போட்டு ஓடி வருவதுண்டு. ஒற்றையடிப்பாதைகளில் நம் எதிரே இது போல அவை ஓடிவரும்போது நம்மை முட்டித்த்ள்ளி விடுமோ என்று ஒருவித நடுக்கம் கூட ஏற்படும். நம் நாடு 2020 ஆம் ஆண்டு வல்லரசாக மாறும் போது பாருங்கள் வறுமை என்ற எருமையின் ஓட்டத்தை.
நன்று
சைனாவிற்கு அடுத்த வல்லரசு,
வளர்ச்சி 7.5% ஆனால் அத்தியாவசிய
பொருள்களின் விலை உயர்வு 17%.
இ மெயில் செய்தி "தமிழ்நாட்டுல,
ரேஷன் அரிசி கிலே 1 ரூபாய் பில்லோட
ஆனா 1 க்கு 2 ரூபாய் பொது கழிப்பிடத்தில்
பில் இல்லாம"
தினப் பத்திரிக்கைகளைவிட,இ மெயில்கள்
செய்தி உண்மையாயிருக்கிறது.
(விளம்பரம் வேண்டாமே)
சிந்தனை அருமை!
எங்கேங்க இவுங்க பண்ணுறதுல
நத்தை வேகத்துலயில்ல போகுது!
Post a Comment