நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Friday, May 7, 2010
மனிதம்!!!
ஆசைக்கோ..
அளவில்லை!
ஒன்றை அடைய,
மனிதன் தான்
எவ்வளவு,
கீழ்த்தரமாய்...
கேவலமாய்...
போய்க் கொண்டிருக்கிறான் ?
நதிக் கரை
நாகரீகங்கள் எல்லாம்
எங்கே போயிற்று?
குழாயடி சண்டையாய்
குறுகி விட்டதோ?
இங்கு ....
திறந்து கிடக்கும்,
வாசக சாலைகள்
காற்று வாங்குகிறது..
பூட்டிக் கிடக்கும்
சிறைச்சாலைகள்
பிதுங்கி வழிகிறது...
ஆண்டவா...
அடுத்த ஜன்மம்
என்று ஒன்றிருந்தால்...
என்னை
மிருகமாய் படைத்துவிடு!
கொஞ்சமாவது
நாகரிகமாக..
பூமியில் வாழ்ந்து விட்டு..
புதைந்து போகிறேன்!!!
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//அடுத்த ஜன்மம்
என்று ஒன்றிருந்தால்...
என்னை
மிருகமாய் படைத்துவிடு!
கொஞ்சமாவது
நாகரிகமாக..
பூமியில் வாழ்ந்து விட்டு..
புதைந்து போகிறேன்!!!//
அள்ளி முத்தமிடத்தோன்றிய வரிகள்...
அருமைங்க...
அடுத்த ஜன்மமே வேணாங்க
தங்கள் தாபமும் கோபமும் புரிகிறது. நல்ல பதிவு தான். உங்கள் வேண்டுதல் ஒருவேளை நிறைவேறி விட்டால், இது போன்ற நல்ல பதிவுகளை அடுத்த ஜன்மத்தில் யார் எழுதுவது? தயவுசெய்து தங்கள் பிரார்த்தனையை மறு பரிசீலனை செய்யுங்களேன்!
அடுத்த ஜன்மம்
என்று ஒன்றிருந்தால்...
என்னை
மிருகமாய் படைத்துவிடு!
கொஞ்சமாவது
நாகரிகமாக..
பூமியில் வாழ்ந்து விட்டு..
புதைந்து போகிறேன்!!!
.....பாத்துங்க சிங்கம், புலி வேண்டாம். அதையும் கிராஸ்ல hybrid பண்ணி புதுசா Liger, Tiglon எல்லாம் உருவாக்குறாங்க .... :-(
....பாத்துங்க சிங்கம், புலி வேண்டாம். அதையும் கிராஸ்ல hybrid பண்ணி புதுசா Liger, Tiglon எல்லாம் உருவாக்குறாங்க .... :-( fantastic )
ithethan en karuththum fine
திறந்து கிடக்கும்,
வாசக சாலைகள்
காற்று வாங்குகிறது..
பூட்டிக் கிடக்கும்
சிறைச்சாலைகள்
பிதுங்கி வழிகிறது...
good lines!
HUMAN BEIGNS ARE VISITORS OF THIS PLANET.BUT THEY ARE BEHAVING LIKE A OCCUPIERS AND THINGING THAT THERE IS NO PLACE FOR OTHER SPICES.NOW WE ARE IN THE EDGE OF ANHILIATION.SCIENTIFICALLY IT IS PROVED FOR OUR SURVIVAL AS A HUMAN BEING ALL OTHER CRATURE IN THE WORLD MUST CO EXIST.
நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள்...
ஆமாம் ஆரண்யன்,
பரிணாம வளர்ச்சி, தற்போது
வளர்சிதையாகி, பரிதாபமாகி விட்டது.
இந்த சுயநல மனிதனை விட
உண்ட மலருக்கு மருவும் சுகம் தரும்
வண்டுகள், கடவுளுக்கும் மேலானது.
அது அதுவாய், எந்த ஒப்பனையுமின்றி
நிர்வாணமாய், நிதர்சனமாய்,
ரீங்காரமிட்டபடியே விண்ணில்.
ஆண்டவா...
அடுத்த ஜன்மம்
என்று ஒன்றிருந்தால்...
என்ன சந்தேகம்? பிளாக் வச்சிருக்கிற எல்லாருக்கும் அடுத்த ஜென்மம் உண்டு நிச்சயமாய்..
Post a Comment