Monday, July 25, 2016

தொழில் தர்மம்!

"யோவ்..நில்லு!"
"நிக்கறேன்"
"இன்னா...அந்த பக்கத்தில இருக்கோங்கற தெனாவட்டா?"
"ஒம் பக்கத்தில் நின்னாலும் அப்டி தான் இருப்பேன் ராஜா..என் இயல்பு அது!"
"மவனே, ஓவரா பேசற நீ, பைல என்ன?"
"ஆனந்த விகடன்,மங்கையர் மலர்,குமுதம் ஜோதிடம் "
"யோவ்...பர்ஸ்ல எவ்ளவ் வச்சிருக்கே?"
"பஸ்சுக்கு காசு...காலைல சில்லறை இல்லைன்னு கண்டக்டர் கொடுத்த இரண்டு ஹால்ஸ்"
"கய்தே....கிண்டலா பண்ற? ..பர்ஸ்ல துட்டு  எவ்ளவ் வச்சிருக்கேன்னு கேட்டா.."
"அதான் சொல்றேன்ல....மூணு க்ரெடிட்  கார்டு, ரெண்டு டெபிட்  கார்டு இருக்கு...மொத்தம் ஆறாயிரம் ரூபா நெட்டா சம்பளம் க்ரடிட் ஆச்சு..ஆயிரம் ரூபாய் பேங்க் கொள்ளைகாரனுக்கு மினிமம் பேலன்ஸ் வச்சுட்டு,இல்லாட்டி அவன் அம்பது ரூபா டெபிட் பண்ணிடுவான்...பாக்கி ஐயாயிரம் ATM ல இருக்கு, எடுத்துக்க"
"சாவு கிராக்கி...மோதிரம் செயின்னு எதனாச்சும் ..."
"அல்லாத்தையும்  safest safety lockerல அதாம்பா அடகு கடைல வச்சிருக்கேன். அவனுக்கு இருக்கற insurable interest பேங்க் காரனுக்கு கூட கிடையாது"
"இன்னா கஸ்மாலம்  ஸொல்ற நீயி?"
"தோ பாரு..ஒனக்கு ஒரு எழவும் புரியாது..பக்கத்துல எதனாச்சும், ATM இருக்கா..வா..எடுத்து தரேன்..எனக்கும் பஸ்சுக்கு டைம் ஆச்சு...ஒன்னோட பேசிண்டு இருக்க எனக்கு நேரமில்லை!"
"ஓங்கார்டு தானா...அது, இல்லாங்காட்டி.."
"மெய்யாலுமே எங் கார்டு தான்பா, ஒனக்கு கொடுக்கறதுல எனக்கு என்ன இன்ட்ரஸ்ட்னு கேக்கறியா? சம்பள பணம் திருட்டு போச்சுன்னு ஒரேடியா நிம்மதியாவாவது இருப்பேன்.."
"இன்னாபா ஸொல்ற நீயி....ஒன் சம்பளம் எவ்ளவ்? எப்டி குடித்னம் நடத்துறே?ஆளை பார்க்க ரீஜண்டா வேற கீற!"
"அப்டீ கேளு வாத்யாரே! எனக்கு மாசம் லட்சத்து இருபதாயிரம் ரூபா..சம்பளம் வர்ரது!"
"அடேங்கப்பா.."
"பதறாதே..சொச்சத்தையும் கேளு..அதுல வருமான வரி இருபதாயிரம் எடுத்துட்டு தான் பாக்கி தரான்..அப்புறமா பிஎப் பத்தாயிரம்,க்ரடிட் கார்டுக்கு பதினைஞ்சாயிரம்,கார் லோன் முப்பதாயிரம், வீட்டு EMI முப்பத்தைஞ்சாயிரம்,போன மாசம் வாங்கின ஹேண்ட் லோன் நாலாயிரம் ரூபா போக பாக்கி சம்பளம் ஆறாயிரம் ..இதுல மாசம் பூரா ஓட்டணும்..ஒரு wife மூணு பசங்க....புலி வாலை புடிச்சிகிட்டு இருக்காப்ல தான் ஒவ்வொரு நாளும் போறது!"
"யோவ்..நானே கைல ரொக்கமா பத்தாயிரம் வச்சிருக்கேன்யா"
"அப்ப எனக்கு ஐயாயிரம் தாயேன்..சும்மா நீ ஒண்ணும் தர வாணாம்..வட்டி எடுத்துக்க..அடுத்த மாசம் தந்துடறேன்"
"வாணாம்...ஒன்னயப் பார்த்தா தான் பாவமா கீது வாத்யாரே! இந்தா அல்லாத்தையும் நீயே வச்சுக்க..திருப்பி தர வாணாம்..நான் திருடன்...சமுதாயத்தில ரொம்ப கீள இருக்கற ஆசாமி..நா, எப்டியாவது பொளைச்சுக்குவேன்.."
"உன்னைப் பார்த்தா தான் பாவமா இருக்கு, எனக்கு ! ஒங்கிட்ட காசு வாங்க முடியாத ...கௌரவம் தடுக்கற ....நடுத்தர வர்க்கம்பா நான். ஆமா, திருடனா நீ?அநியாயத்துக்கு இவ்வளவு நல்லவனா இருக்கியே..இப்படி வரவன்,போறவன்...எங்கள மாதிரி ஆபீஸ் காரங்க கிட்ட, திருடின காசை கொடுத்துட்டு அம்போன்னு இருந்தா, நீ எப்படி அப்பா பொழைக்க முடியும்? உங்க வீட்ல எப்படி அடுப்பெரியும்?"
"அதுக்காக? தொளில் தர்மம்னு ஒண்ணு இருக்கில்லே? திருடனா இருந்தாலும்  அத்த நான் மீற முடியுமா?"
"ஆமாம்..ஒம் பேரு!"
"அந்த களுதைய இப்ப எதுக்கு கேட்கறே நீயி?"
"சும்மா சொல்லு...நா தெரிஞ்சக்கறேனே ..உன் பெயரை!"
"கிஞ்சித்தும்பாங்கபா நம்மள! பக்கிரி புள்ள கிஞ்சித்து..ப.கிஞ்சித்து!"
................



                          













10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இருவருமே ஒரேயடியா இப்படி தர்மபுத்திரர்களாக இருந்து, கிஞ்சித்தும் பொய் பேசாமல், உண்மையை மட்டுமே பேசுவதைப் படிக்க உடல் சிலிர்த்தும், கண்கலங்கியும் போச்சு.

இவர்கள் போல ஆங்காங்கே சிலர் இருப்பதாலும், அவர்களைப்போற்றி தாங்கள் எழுதி வருவதாலும் மட்டுமே, நேற்று இரவு நம் ஊரில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுத்து போலிருக்குது. மூவரும் (மூவாரும் .... மூவார் முத்துவும்) வாழ்க !

”தளிர் சுரேஷ்” said...

சிரிக்க சிரிக்க எழுதினாலும் கடைசி வரியில் ஏதோ சிண்டு முடிவது போல தோன்றுகிறதே!

நெல்லைத் தமிழன் said...

பேசிண்டு - இது பேசிட்டு என்று இருக்கவேண்டும். அப்புறம் ப.கிஞ்சித்து என்பதில் ஏதும் உள்குத்து இல்லையே? ஒருவேளை மிஞ்சின 6000ல் கபாலிக்கும் (படம்) செலவழிக்கவேண்டுமே என்ற ஆதங்கத்தில் எழுதிட்டீங்களோ?

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்..... அங்கேயும் படித்து ரசித்தேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நம்மூர்ல மழையா..மகிழ்ச்சி சார்..
மிக்க நன்றி...தங்கள் வருகைக்கும், பதிவிற்கும்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நான் சுத்தமா வழுக்கை சார்...சிண்டு முடிய முடியாது..
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி தளிர்கள் சுரேஷ் சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்கள். வருகைக்கும் , கருந்த்துரைக்கும் நன்றி நெல்லை தமிழன் சார்..
ப.கிஞ்சித்து யாரும் விருப்ப படாத தொழில்ல இருந்தாலும் அதிலும் ethics வேணும்னு நினைக்கிறான்..அவ்வளவு தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றி வெங்கட் ..
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்..
நான் வரைந்த கார்ட்டூனைத் தான் இதில் பதிவிறக்கம் செய்ய தெரியவில்லை!

நிலாமகள் said...

சில்லறை இல்லைன்னு கண்டக்டர் கொடுத்த இரண்டு ஹால்ஸ்//
நல்ல யோசனை!

இதிலும் கபாலியா...???!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இத்தனை நாளா என் பிலாக்குக்கு ஏன் வல்லைன்னு, உங்களை கோபிச்சுக்க முடியாது..
ஏனெனில் நானே இப்பத்தான் வரேன்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நிலாமகள் மேடம்!